தில ஹோமம் என்றால் என்ன?

Date:

Share post:

தில ஹோமம் என்றால் என்ன?

தில ஹோமம் என்பது கறுப்பு எள்ளை முக்கிய திரவியமாகக் கொண்டு முறையாக அக்னியில் செய்யப்படும் ஹோமம், இது பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், மறைந்த முன்னோர்கள் நல்ல நிலையை அடையவும் செய்யப்படுகிறது.

இதை சுமார் நான்கு மணி நேரம் ஆகும் செய்து முடிப்பதற்கு. இதை திருப்புல்லாணி, ராமேஸ்வரம் போன்ற இடங்களிலும் செய்யலாம். மேலும் அவரவர் வீட்டிலேயும் செய்துக் கொள்ளலாம்.

மறைந்தவர்களுக்கு முறையாக கர்மாக்கள் செய்யாமல் இருத்தல், செய்த கர்மாக்கள் அனைத்தும் தோஷத்துடன் இருத்தல்,

செயற்கை மரணத்தால் மறைந்தவர்களுக்கு கர்மாக்களால் திருப்தி ஏற்படாமல் பித்ருக்களாக மாற இயலாமல் தவித்தல், வருஷா வருஷம் முறையாக சிராத்தம் செய்யாமல் இருத்தல்,

செய்யும் சிராத்தத்தை முறை தவறி செய்தல் போன்ற செயல்களால் ஏற்படும் பித்ரு தோஷம் ஆகியவை இந்த தில ஹோமத்தால் விலகும்.

பித்ரு தோஷத்தால் ஏற்படும் குழந்தையின்மை, அல்லது குழந்தை உருவாகாது இருத்தல், கர்ப்பம் தங்காது இருத்தல்,

பிறந்த குழந்தை இறந்து போதல் போன்ற தோஷங்கள் ஏற்படலாம், இப்படிப்பட்ட தோஷங்களைப் போக்கவும் தில ஹோமம் செய்யப்பட வேண்டும்.

மற்ற ஹோமங்களைப் போலல்லாமல் மறைந்தவர்களுக்கு சம்ஸ்காரம் செய்வதைப்போல் இறந்தவர்களை வெள்ளியாலான பிரதமையில் ப்ரேத ஸ்வரூபியாக

ஆவாஹனம் செய்து, செய்யப்பட வேண்டிய இந்த தில ஹோமத்தை, தாங்கள் வசிக்கும் வீட்டில் செய்வதில்லை, ராமேஸ்வரம், திருவெண்காடு, ஸ்ரீவாஞ்சியம், பவானி, ஸ்ரீரங்கபட்டினம் போன்ற பொதுவான இடங்களில் செய்ய வேண்டும்.

ஹோமத்தின் இறுதியில், இறந்த முன்னோர்களை பிரேத ஸ்வரூபத்திலிருந்து விடுபட்டு பித்ருக்களுடன் ஒன்றாக சேர்ப்பிக்கும் விதமாக பித்ரு பிரதமைகளை சமுத்திரத்திலோ அல்லது கடலில் கலக்கும் புண்ணிய நதிகளிலோ கரைத்துவிட்டு ஸ்னானம் செய்ய வேண்டும்.

இதனால் பித்ரு தோஷம் விலகி, குழந்தைகள் பிறந்து, தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

தில ஹோமம் என்றால் என்ன?

கிருஷ்ண பக்ஷம் சனிக்கிழமை அமாவாசை பரணி நட்சத்திரம் குளிகன் இருக்கும் ராசி ஆகிய நாட்கள் தில ஹோமத்துக்குச் சிறந்தவை.

மேலும் தனக்கு சொந்தமான அக்னியில் தனது வீட்டிலேயே காயத்ரீ மந்திரம் சொல்லியும் தில ஹோமம் செய்யலாம், இதுவும் அனைத்து பாபத்தையும் போக்கும்.

தில ஹோமம் செய்து பித்ரு தோஷம் விலகிய பின்னர் அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணமும் பெற்றோருக்கு வருஷா வருஷம் சிராத்தம் ஆகியவற்றையும் முறையாகச் செய்ய வேண்டும்.

அப்போதுதான் செய்த தில ஹோமம் முழுமையான பலனைத் தரும்.
ஆனாலும் இப்படிப்பட்ட தில ஹோமத்தை தேவையில்லாமல் செய்யக்கூடாது.

தேவையான வியாதியுள்ளவர்கள் மட்டுமே மருந்தை சாப்பிடுவதைப்போல் யாருக்குத் தேவையோ அவர்கள்தான் தில ஹோமத்தைச் செய்ய வேண்டும்.

தில ஹோமம் செய்ய வேண்டியத் தேவை உள்ளதா? ஜாதகம் மூலம் பித்ரு தோஷம் இருப்பதை உறுதி செய்த பின்னரே தில ஹோமம் செய்ய வேண்டும்.

அதாவது ஜென்ம லக்னத்திலிருந்து புத்ர ஸ்தானத்தில் (ஐந்தாமிடத்தில்) சனி இருந்தாலோ அல்லது ஐந்தாமிடத்துக்கு சனி பார்வை இருந்தாலோ, புத்ரகாரகனான குருவுக்கு சனியின் சேர்க்கை – பார்வை – இருந்தாலோ குழந்தை பாக்கியம் இருக்காது, அல்லது குழந்தைகள் தங்காது.

இது போன்ற தோஷங்கள் பித்ரு தோஷத்தால் ஏற்படுகிறது என்பதால் இப்படிப்பட்ட பித்ரு தோஷத்துக்கு தில ஹோமத்தைத் தவிர மற்ற பரிகாரம் கிடையாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தில ஹோமம் செய்யலாம், மற்ற சாதாரண தோஷங்களுக்கு தில ஹோமம் செய்ய வேண்டாம், மற்ற தேவையான பரிகாரங்களைச் செய்தாலே போதுமானது.

தில ஹோமம் என்றால் என்ன?

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...