முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் செம்பருத்தி

Date:

Share post:

முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் செம்பருத்தி

பழங்காலம் முதலாக தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களில் ஒன்று தான் செம்பருத்தி.

செம்பருத்தி செடியின் இலை, பூ என்று அனைத்துமே தலையில் உள்ள பிரச்சனைகளைப் போக்கும் குணம் கொண்டது.

இதன் அதிக மருத்துவ குணத்தால் ஆயுர்வேதத்தில் இது முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

செம்பருத்தியில் உள்ள வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து வலிமையான கூந்தல் வளர உதவுகிறது.

மேலும், இதில் உள்ள அமினோ அமிலம் கூந்தலை ஆரோக்கியமாக, உறுதியாக மற்றும் மிருதுவாக வளர செய்கிறது. மேலும், இது உங்கள் முடிக்கு ஒரு கன்டிஷனராகவும் செயல்படும்.

அதுமட்டுமல்லாது, தலையில் அரிப்பு தொல்லை, பொடுகு தொல்லை மற்றும் பிற பிரச்சனைகளுக்கும் இது தகுந்த மருந்தாகும்.

பலருக்கு செம்பருத்தியை தலைக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாது. அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செம்பருத்தியை தலைமுடிக்கு பயன்படுத்தினால் மயிர்கால்கள் வலிமையடையும், நரைமுடி நீங்கும், முடி பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

செம்பருத்தி பூ தூளை எப்படி பயன்படுத்துவது:

1. செம்பருத்தி பூ தூள், அதில் தயிர் சிறிது சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, தலைமுடியில் தடவி மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை செம்பருத்தி பூ தூள் சேர்த்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

3 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி பூ தூள் சேர்த்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நெல்லிப் பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, அலசலாம். இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

4. செம்பருத்தி பூ தூள் சேர்த்து, மருதாணி இலையுடன் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற வைத்து அலச, தலைமுடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.

காலை வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி  பொடியை வாயில் போட்டு நீர் பருக இதயம் பலம் பெறும், தலைமுடிக்கு ஹேர்பேக்காகவும் பயன்படுத்தலாம்.

இந்த செம்பருத்தி பூ பொடியை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

உங்கள் பிறந்தநாள்/திருமண நாட்களில் வாழ்த்துகளைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...