ராசி பலன் – 16 ஜூன் 2022

Date:

Share post:

பஞ்சாங்கம்

16-06-2022, ஆனி 02, வியாழக்கிழமை, துதியை திதி காலை 09.45 வரை பின்பு தேய்பிறை திரிதியை.

பூராடம் நட்சத்திரம் பகல் 12.37 வரை பின்பு உத்திராடம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

ராசிப்பலன் – 16.06.2022

மேஷம்:

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும்.

வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும்.

ரிஷபம்:

உங்களின் ராசிக்கு உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அடுத்தவர்களை நம்பி எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருப்பது நல்லது.

மிதுனம்:

உங்களின் ராசிக்கு நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

பணவரவு ஏற்பட்டு கடன் பிரச்சினை ஒரளவு குறையும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.

கடகம்:

உங்களின் ராசிக்கு நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

சிம்மம்:

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

கன்னி:

உங்களின் ராசிக்கு உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

துலாம்:

உங்களின் ராசிக்கு உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும்.

தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சுப காரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்:

உங்களின் ராசிக்கு நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் ரீதியான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிட்டும்.

தனுசு:

உங்களின் ராசிக்கு நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.

மகரம்:

உங்களின் ராசிக்கு நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் மாற்று கருத்தால் மனஅமைதி குறையும்.

கூட்டாளிகளின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

கும்பம்:

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய கடன்கள் பைசலாகி மகிழ்ச்சி அளிக்கும்.

மீனம்:

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும்.

சுப காரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் குறையும்.

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...