ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் அதிகரிக்கும் குதிரைலாடம்

Date:

Share post:

ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் அதிகரிக்கும் குதிரைலாடம். ஒரு வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல்கள் தான். இந்த எதிர்மறை ஆற்றல்களுக்கு நாம் நிறைய பெயரை வைத்திருக்கின்றோம்.

கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு, மருந்து வைப்பது இப்படி எதிர்மறை ஆற்றலுக்கு பல உருவங்களை கொடுக்கின்றோம்.

கண்ணுக்குத் தெரியாத இந்த கெட்ட சக்திகளிடம் இருந்து, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஆன்மீக ரீதியாக, தாந்திரீக ரீதியாக பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது.

அதில் ஒரு சுலபமான பரிகாரம் தான் நிலை வாசலில் குதிரை லாடத்தை வைப்பது என்பது.ஆனால் நிறைய பேருக்கு இந்த குதிரை லாடம் எப்படி முறையாக பயன்படுத்துவது என்பது தெரிவதில்லை.

குதிரை லாடத்தினை எந்த முறைப்படி, நம்முடைய வீட்டில் வைத்துக் கொண்டால் எதிர்மறை ஆற்றலின் தாக்கத்திலிருந்து நம் வீட்டை பாதுகாக்கலாம் என்பதைப் பற்றிய சில விஷயங்களைத் தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

குதிரைகளுடைய கால்களில், பாதங்களில் வைக்கக்கூடிய ஒரு இரும்பு பொருள்தான் இந்த குதிரை லாடம்.

குதிரைகள் ஓடும் போது அதனுடைய கால்கள் தேயாமல் இருப்பதற்காக இந்த லாடத்தை குதிரைகளுடைய கால்களில் அடித்து வைத்திருப்பார்கள்.

ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் அதிகரிக்கும் குதிரைலாடம் இது நம்மில் நிறைய பேருக்கு தெரிந்ததுதான்.அந்த குதிரை பல இடங்களுக்கு சென்று ஓடி, அந்த லாடம் நன்றாகத் தேய்ந்து போய் இருக்கும்.

அந்த தேய்ந்து போன குதிரை லாடதிற்கு தான் சக்தி அதிகம். பழைய லாடத்தை நம் வீட்டில் வைக்கும் போது, அது நமக்கு பாதுகாப்பு வளையமாக அமையும்.

அந்த பழைய குதிரை லாடத்திற்கு இயற்கையாகவே எதிர்மறை சக்திகளை விரட்ட கூடிய தன்மை உண்டு என்றும் சொல்லப்படுகின்றது.இரும்பு வைத்துக் கொண்டால் கெட்ட சக்தி நம்மை அண்டாது என்று சொல்லுவார்கள் அல்லவா.

பெண்கள் வீட்டில் தீட்டான சமயத்தில் கூட இரும்பை பக்கத்தில் வைப்பார்கள்.

இதைப்போல் அசைவம் சமைத்து வெளியிடங்களுக்கு எடுத்து செல்லும்போது, பாதுகாப்பாக இருக்க வேண்டும், பேய் பிசாசு பிடித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக கூட ஒரு சிறிய ஆணியை அந்த அசைவ சாப்பாடு உடன் வைத்து அனுப்புவார்கள்.

சாதாரண இரும்பை விட பல மடங்கு சக்தி கொண்டது தான், இந்த இரும்பில் செய்யப்பட்ட, குதிரை காலில் இருக்கக்கூடிய லாடம்.

பெரும்பாலும் இந்த குதிரை லாடம் நிறைய பேருக்கு கிடைக்கலாம்.ஆனால் அந்த குதிரைலாடம் தோஷம் இல்லாததாக இருக்கவேண்டும்.

நோய்வாய்ப்பட்டு இறந்த குதிரைகள், ஏதேனும் விபத்தின் மூலம் எதிர்பாராமல் இறந்த குதிரைகளில் இருந்து எடுக்கக்கூடிய குதிரை லாடம் தோஷம் நிறைந்ததாக இருக்கும்.

தோஷம் நிறைந்த லாடத்தினை நாம் பயன்படுத்தும்போது, அதிலிருந்து நமக்கு பலன் முழுமையாக கிடைக்காது என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதுவே குதிரையில் லாடத்தினை சரியாக பயன்படுத்தும் முறை.

இப்படி செய்தால் மட்டுமே அதனுடைய பலனை முழுமையான நம்மால் அடையமுடியும். நம்முடைய வீட்டினை கெட்ட சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கு இது ஒரு சக்தி வாய்ந்த வளையமாக அமையும்.

ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் அதிகரிக்கும் குதிரைலாடம்

பயன்கள்:
  • அதிர்ஷ்ட வசீகரம்
  • தீய சக்திகளைத் தடுக்கும்
  • வீட்டிற்கு பாதுகாப்பு நேர்மறையை ஈர்க்கிறது
  • பயன்படுத்தப்பட்ட குதிரைக் காலணி காந்தம் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் மேம்படுத்துகிறது.

தமிழில் குதிரை லாடத்தின் நன்மைகள் பற்றி மேலும் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...