இறப்பு என்றால் என்ன? இறப்பிற்கு பின் ஆத்மா எங்கு செல்கிறது?

Date:

Share post:

இறப்பு என்றால் என்ன? இறப்பே வாழ்க்கையின் இறுதி முடிவு. நாம் அதை ஒதுக்கி விடவும் முடியாது. விலகவும் முடியாது. என்ன நடக்க போகிறது என யூகிக்க முடியாது. நாம் தற்போது இறப்பைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அது உடல் சம்பந்தப்பட்டதா? ஆன்மீக மாற்றமா? எது எப்படியிருப்பினும் நாம் அறிந்திடாத ஒன்று. இறப்பை பற்றி ஆழமாக யோசித்தால் விசித்திரமான உலகத்தில் சில வித்தியாசங்களை அறிய முயலலாம்.

சிவபெருமான் பார்வதிதேவிக்கு இறப்பை பற்றி கூறிய அறிகுறிகள்.

சிவபுராணத்தின்படி, பார்வதிதேவி சிவபெருமானிடம் இறப்பிற்குப் பின்னர் ஒருவரின் ஆன்மா உடலை விட்டு பிரிந்தபின் என்ன நடக்கும் என கேட்டார். அதற்கு சிவபெருமான் 17 வகையான அறிகுறிகளை கூறினார்.

சிவபெருமானின் கூற்றின்படி ஒருவரது உடல் வெளிறிய மஞ்சள் அல்லது வெள்ளை அல்லது சிறிது சிவப்பாக மாறுவது அவர் மரணத்திற்கு அருகில் உள்ளார்

ஒருவர் தன் பிரதிபலிப்பை தண்ணீரிலோ, எண்ணையிலோ அல்லது கண்ணாடியிலோ காண முடியாவிட்டால் அவரின் நாட்கள் எண்ணப்படுகிறது.

ஒருவர் அவரது ஆயுளை விட ஒரு மாதம் அதிகமா வாழ்ந்து விட்டால் அவரால் தன் நிழலை காண இயலாது. அவரது தலையில்லாத நிழலை மட்டுமே காண இயலும். ஒருவர் கருப்பு வண்ணத்தை மட்டும் கண்டால் அவரது இறப்பு அருகே உள்ளது என அறியலாம். ஒருவரது இடது கை ஒரு

வாரத்திற்கு இழுத்தவாறு இருந்தால் அவர் ஒரு வாரத்திற்குள் இறந்து விடுவார். ஒருவர் சூரியன் சந்திரன் மற்றும் வானத்தை சிவப்பு நிறங்களில் கண்டால் அவரது இறப்பு ஆறு மாதங்களுக்குள் வந்து விடும்.

ஒருவரது வாய், நாக்கு, காதுகள், கண்கள் மற்றும் மூக்கு ஆகிய உறுப்புகள் கல் போல மாறிவிட்டால் அவருக்கு இறப்பு நெருங்கிவருகின்றது என்று அர்த்தம்.

இறப்பு-என்றால்-என்ன?

மரணத்தை பற்றி பகவத்கீதை:

இறப்பு என்றால் என்ன என்பது “ஒருவன் தன் அழுக்கான ஆடைகளை களைவதன் மூலம் அவனது ஆன்மா அந்த உடலில் இருந்து புதிய உடலுக்குள் நுழைகிறது. எந்தவொரு ஆயுதத்தாலும் வெட்ட முடியாது; எரிக்க முடியாது; எந்த ஒரு நீரும் நனைக்க முடியாது; எந்த ஒரு காற்றும் அவனை உலர வைக்க முடியாது; அவன் வெட்ட முடியாதவன்.

எரிக்க முடியாதவன். நனைக்க முடியாதவன்; உலர வைக்க முடியாதவன். அவன் நித்யமானவன்; எங்கும் வியாபித்திருப்பவன்; நிலையானவன்; இயக்கமற்றவன்; அவன் நித்திய நேரத்திலிருந்து வந்தவன்; கண்ணுக்கு தெரியாதவன்; சிந்திக்க முடியாததும் மாற்ற முண்டாக்க முடியாததும் ஆதலால் நீங்க துக்கப்பட கூடாது; பிறந்த எல்லாருக்கும் இறப்பு நிச்சயம். இறந்த ஒருவனுக்கு பிறப்பும் நிச்சயம் துக்கப்படுவது தவிர்க்க முடியாதது.

இறப்பை பற்றி கௌதம புத்தர்
இறப்பே வாழ்க்கையின் இறுதி முடிவு
இறப்பை பற்றி கௌதம புத்தர்:

இந்த உலகத்தில் உள்ள வடிவங்களும் மாயைகளும் நமது அறிவால் உருவாக்கப்பட்டது. அவைகளும் நமது மாயைக்கு உட்பட்டவை. ஒரு மனிதன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், உயிருடன் இருந்தாலும் இறந்தாலும், உண்மையான வடிவமற்ற உலகத்தில் நமது அறிவுக்குட்பட்ட, நீங்கள் கேட்கலாம், இறப்பிற்கு பின் மனிதன் வாழ்வானா என்று, நான் சொல்வேன் இல்லை, எந்த ஒரு அறிவாலும் புரிந்து கொள்ள கூடியது ஒரு மனிதன் இறக்கும் போது அனைத்தும் இறக்கிறது. இப்போது நீங்கள் கேட்கலாம், ஒரு மனிதன் இறக்கும் போது ஒட்டுமொத்தமாக இறக்கிறானா என்று, நான் சொல்வேன் இல்லை, எதற்கு இறைக்கிறானோ எதனால் இறக்கிறானோ அனைத்தும் மாயை.

இங்கே கிளிக் செய்யவும்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...