ராசிபலன் – 19 ஜூன் 2022

Date:

Share post:

ராசிபலன் – 19 ஜூன் 2022

ராசிபலன் – 19 ஜூன் 2022
நல்ல நேரம்

காலை: 07:30- 08:30 வரை

மாலை: 03:30- 04:30 வரை

ராசிபலன் – 19 ஜூன் 2022

மேஷம்:

தன் முக அழகைக் கவனிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட உங்களுக்கு தொழிலில் திடமான வளர்ச்சி இருக்கும், வியாபாரத்தில் எடுக்கும் முயற்சி நல்ல பலன் அளிக்கும். இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஓய்வு நேரத்தில் விளையாட்டின் மீது ஆர்வம் வந்து வேலையாடுவீர்கள்.

இன்று செல்வ நிலையில் வளமான வரவு உண்டு, எதிர்காலத்திற்காக முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். திருமண வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும், இன்றைய தினம் மகிழ்ச்சியாக நகரும்.

அமைதியை கடைப்பிடிக்க வேண்டும், நட்பு வட்டாரம் மூலம் நன்மை வரும். ஏற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம்:

உங்களுக்கு இதுவரை மனதில் ரணமாக இருந்த கவலைகள் குறைந்தும் முகத்தில் புன்னகை பிறக்கும். முக்கிய பணி செய்ய நினைக்கும் உங்களுக்கு சில தடைகள் இருக்கும், அதைக் கடக்கும் மனத்தைரியம் உருவாகும்.

உடல்நிலை நன்றாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும், வருமானம் அதிகமாகும். இன்று எதிர்பார்த்த உதவி கிடைக்கும், உங்கள் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகமாக இருந்தாலும், பின்னாளில் பாராட்டப் பெறுவீர்கள்.

தைரியமாக செயல்படுவதால் இன்று வெற்றி உங்கள் கைவசம் இருக்கும். துணிவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம்:

பேச்சு சாதுரியமும் நிதானமும் கொண்ட உங்களின் யதார்த்தமான அணுகுமுறை இன்று சற்று சாதகமாக இருக்கும், ஆனால் தொழிலில் தாமதமாக வேலைகள் நடக்கும். தெளிவான திட்டமிடல் வேண்டும்.

இன்று உங்களின் அளவுக்கு மிஞ்சிய உணர்ச்சிவசம் மனக்குழப்பத்தை உருவாக்கும். வழக்கத்தை விட அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகமாகக் காணப்படும். இறை பிராத்தனை நன்மை வகுக்கும். குடும்பத்தில் நெருக்கம் அதிகமாகும்.

நிதி வளர்ச்சி அமோகமாக இருக்கும். சிறப்பான உடல்நலம் ஆனந்தமான நாளாக மாற்றும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

கடகம்:

மனதில் பிரகாசமான எண்ணங்களைக் கொண்ட உங்களுக்கு இன்று மந்தமான நாளாக இருக்கும், தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை வரும். இன்று செலவுகள் சுமாராக இருக்கும், செல்வ நிலை உயரும்.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கடக இராசுக்காரருக்கு ஆரோக்கியம் உயரும்.உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது. திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், ஆரோக்கியமான உறவுக்கு வெளிப்படையான பேச்சு உரையாடல் வழி செய்யும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.

உங்கள் தொழிலில் நீங்கள் செய்யும் முயற்சிகள் இன்று வெற்றி அளிக்காது, விடாமுயற்சி தேவைப்படும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம்:

அழகான தோற்றமும் மன தைரியமும் கொண்ட சிம்ம இராசிக்காரரே இன்று பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். இரத்த சொந்தத்தில் இன்று பாசத்துடன் நடந்து கொள்ளுவார்கள்.

உங்களுக்கு செல்வ நிலை சீராக இருப்பதால் உங்கள் பணத்தை லாபம் தரும் இடத்தில் சேமிப்பது பலன் தரும். புதிய நட்பு உருவாகும். வெளியில் செல்லும்போது முன்கோபத்தைத் தவிர்க்கவும், ஏனென்றால் அது அமைதி கெடும் சூழல் உண்டாகும்.

உடல்நலம் நன்றாக இருந்தாலும் திடீரென உடல்நலக் குறையை உருவாக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி:

வசிகர பேச்சால் அனைவரையும் கவரும் குணத்தைப் பிறப்பிலிருந்து கொண்ட உங்களுக்கு இன்று பல பிரச்சனைகள் யாவும் தீர்ந்து, ஏற்ற இறக்கமான நாளாக இருக்கும்.

தொழிலில் முழுமூச்சுடன் சுறுசுறுப்பாக வேலை செய்து, புகழின் உச்சத்திலிருந்தாலும், ஆனால் கைவிடுவீர்கள். நீங்கள் ஹோமம் போன்ற புனித சடங்குகளில் கலந்து கொள்வீர்கள். இன்று விருந்தினர் வருகையால் நன்மை உண்டு.

நிலையான நிதி நிலை இருக்கும். சிறப்பான ஆரோக்கியம் இருக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

துலாம்:

சந்தோஷமான வாழ்வை எதிர்பார்த்த உங்களுக்கு இன்று வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும், உத்தியோகத்தில் இருப்பவருக்கு இன்று சற்று ஓய்வு கிடைக்கும். இன்று பணம் கையில் கொஞ்சம் அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள்.

குடும்பத்தில் நிலைமை அவ்வளவாக சரியில்லை என்றாலும் மனம் நிம்மதியாகத் தான் இருக்கும். கணவன் மனைவி உறவில் பெரியதாக பேச்சுவார்த்தையில்லாமல் அமைதியான சூழல் மட்டுமே இருக்கும். கல்வியில் பாராட்டு கிடைக்கும். அதிகமான நேரத்தை எதிர்காலத்தைப் பற்றி யோசித்து குழப்பமடைவீர்கள்.

குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், மருத்துவ செலவு இருக்கும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்:4

விருச்சிகம்:

அறிவியல் சிந்தனை அதிகம் கொண்ட விருச்சிக இராசிக்காரரே, ஆரோக்கியத்தில் குறை ஏதுமில்லை ஆனால் உங்கள் தாயின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்காது, எனவே இன்று செலவைக் குறைத்து கொள்வது பணப் பற்றாக் குறை தராது. பொறுமையாக இருப்பது இன்று ரொம்ப அவசியம். குடும்ப வாழ்க்கை அருமையாக இருக்கும்.

கணவன் மனைவி உறவில் இருந்த சிறிய பிரச்சனை சரியாகும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்:9

தனுசு:

குடும்பத்தின் மீது தீரா அன்புடன் அளவில்லா பாசத்திற்கு கொண்ட தனுசு இராசிக்காரரே இன்று உங்களிடம் போதுமான அளவு பணம் கையில் இருந்தாலும், செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டில் இன்று அன்பு அதிகரிக்கும்.

உங்கள் காதல் வாழ்க்கை சந்தோஷம் அதிகமாக இருக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும், நிம்மதியான மன நிலை இருக்கும்.

மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் வரும். தன லாபம்!

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை

அதிர்ஷ்ட எண்:4

மகரம்:

உங்களின் பொறுமையான குணத்துக்கு இன்று நல்ல அங்கீகாரம் கிடைக்கும், மனம் இன்றைய தினம் அமைதி நாடும். உங்கள் காதல் விவகாரத்தில் பிரச்சனை வரும் அதனால் திடீர் திருமணம் கைகூடும் சூழ்நிலை வரும்.

உங்களின் அன்பான வார்த்தை வீட்டில் இன்பமான சூழலைத் தரும். தொழில் போட்டிகளை திறம்பட சமாளிப்பீர்கள். செல்வ நிலையில் இன்று பாதிப்பில்லை, எதிர்பார்த்த நேரத்தில் பண உதவிக் கிடைக்கும். தொழிலில் லாபம் வரும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கும்பம்:

எப்போதும் சந்தோஷமாக இருக்க நினைக்கும் உங்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமாக இருக்கும், கைவைக்கும் காரியத்தில் ஜெயம் தான். தொழிலில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மாற்றம் இருக்கும்.

இன்று நிதி நிலை ஏற்றம் இறக்கமாக இருக்கும், செலவு ரொம்ப அதிகமாக இருக்கும். இன்று காதல் வாழ்க்கை செழிக்கும். நீங்கள் யதார்த்தமாகச் செய்யும் செயலின் விளைவு நன்மையாக இருக்கும் அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

உடல்நலத்தில் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5

மீனம்:

எப்போதும் கலகலப்பாக இருக்கும் உங்களுக்கு இன்று பழைய நினைவுகள் கொஞ்சம் சந்தோஷத்தை அளிக்கும். தொழிலில் புதுமையான சிந்தனைகள் தோன்றும், ஓய்வு நேரம் அதிகமாக இருக்கும்.

மருத்துவச் செலவு அதிகரிக்கும், அதைத் தவிர்க்க உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுங்கள். நண்பர்களுடன் வெகு தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும். குடும்பத்தினரின் உதவி மனதுக்கு நிம்மதியாக இருக்கும்.

திருமண வாழ்க்கை மிகவும் அழகாகத் தோன்றும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...