சர்வதேச யோகா தினம்

Date:

Share post:

சர்வதேச யோகா தினம்

2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகா என்பது இந்தியாவில் உருவான உடல், மன மற்றும் ஆன்மீகப் பயிற்சியாகும்.

இந்தியப் பிரதமர் 2014 இல் தனது ஐ.நா உரையில், ஜூன் 21 ஆம் தேதியை பரிந்துரைத்தார்.

ஏனெனில் இது வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாள் மற்றும் உலகின் பல பகுதிகளில் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

இந்த ஆரம்ப முன்மொழிவைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு “யோகா தினம்” என்ற தலைப்பில் வரைவுத் தீர்மானத்தை ஐநா ஏற்றுக்கொண்டது.இந்த ஆலோசனைகள் இந்தியாவின் பிரதிநிதிகளால் கூட்டப்பட்டது.

2015 ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டது. ஏப்ரல் 2017 இல், UN தபால் நிர்வாகம் (UNPA) சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் வகையில் ஒரே தாளில் 10 ஆசனங்களின் முத்திரைகளை வெளியிட்டது.

முதல் சர்வதேச யோகா தினம்:

முதல் சர்வதேச யோகா தினம் 21 ஜூன் 2015 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ஆயுஷ் அமைச்சகம் இந்தியாவில் தேவையான ஏற்பாடுகளை செய்தது.

84 நாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் உட்பட 35,985 பேர், புது தில்லியில் உள்ள ராஜ்பாத்தில் 35 நிமிடங்களுக்கு 21 ஆசனங்களை (யோகா ஆசனங்கள்) செய்தனர்.

இதுவரை நடத்தப்படாத மிகப்பெரிய யோகா வகுப்பாகவும், அதிக எண்ணிக்கையிலான – 84-பங்கேற்கும் நாடுகளாகவும் ஆனார்கள்.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள நகரங்களில் இதே போன்ற நாட்கள் நடத்தப்படுகின்றன.

சென்னையில் யோகா தினம்:

சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு, அவர்கள் ஆலோசனைப்படி சென்னை மாநகராட்சியின் வார்டு 104, மண்டலம் 8க்கு உட்பட்ட அண்ணாநகர் மேற்கு ஜே பிளாக்கில் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடலை விளக்கும் வகையில் டீ-ஷிர்டில் “திராவிட மாடல்” என்னும் எழுத்து ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ திரு.அ.வெற்றிஅழகன் B.E, M.B.A, M.L.A சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் தமிழக நிதியமைச்சராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் பேரன் ஆவார்.

அவர் 2009 – 2012 வரை பச்சையப்பாவின் அறக்கட்டளையின் நிதி அறங்காவலராகவும் இருந்துள்ளார். தற்போது அவர் சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக உள்ளார்.

அவர் ஒரு தொழிலதிபர், கல்வியாளர் மற்றும் சமூக தொழில்முனைவோரும் ஆவார். மேலும் அவர் திமுகவின் வர்த்தகப் பிரிவு மாநில இணைச் செயலாளராகவும் உள்ளார்

நிகழ்ச்சிக்கு வார்டு கவுன்சிலர் திரு.டி.வி.செம்மொழி MC, தலைமை வகித்து, சுமார் 100 பேருக்கு டி-சர்ட், யோகா மேட் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்தார்.

இந்நிகழ்ச்சியில் திரு.கூ.பீ.ஜெயின் MC அவர்கள், 8வது மண்டல குழு தலைவர் மற்றும் 104வது வட்ட செயலாளர்கள் திரு.சொ.முருகேசன், திரு.பி.லோகுபாபு மற்றும் திரு.ஜெ.தங்கராஜ் கலந்து கொண்டனர்.

மேலும் சென்னை குடிநீர் துணை பகுதி பொறியாளர் திரு.சுரேஷ் அவர்கள், சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் திரு.அசோக் அவர்கள், சுகாதார அதிகாரி திரு.பிரபு மற்றும் சுகாதார ஆய்வாளர் திருமதி.மீனா அவர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்றுநர் திருமதி.மல்லிகா மற்றும் திருமதி.சங்கீதா அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மேலும் ஜே-பிளாக் சங்கத் தலைவர், செயலாளர் மற்றும் பிற உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காலை 06:00 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி சில மணி நேரம் யோகா பயிற்சி செய்து எம்எல்ஏவின் உரையுடன் இனிதே நிறைவு பெற்றது.

Click here

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...