குதிகால் வெடிப்புகள் / பிளவுகள்

Date:

Share post:

குதிகால் வெடிப்புகள் / பிளவுகள்

பாதம், பாதத்தின் விலிம்புப்பகுதியில் உள்ள தோல் உறிந்து தகடுகள் போல் ஏற்ப்படுவதால் குதிகால் வெடிப்புகளேற்படுகிறது, சில வேலைகளில் அதிக ஆழமான வெடிப்புகள் ஏற்ப்படுவதால் அவை வலியுள்ளவையாகவும் மற்றும் இரத்தம் வெளியேறும் வண்ணமாகவும் இருக்கும்.

க்ராக் எனப்படும் குதிகால் வெடிப்புகள் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும்.

காரணங்கள்:

குதிகால் வெடிப்புகள் எந்த ஒரு நபரையும் பாதிக்கும், ஆனால் ஆபத்துக்காரணிகளாவன:

  • வரட்சியான சிதோஷன நிலையில் வாழ்வது
  • பருமனான உடல்
  • தொடர்ந்து காலணிகள் இன்றி நடப்பது அல்லது சாண்டல்களை அணிவது அல்லது பின்புறம்
  • திறந்த நிலையில் உள்ள ஷூக்களை அணிவது.
  • செயலற்ற வியர்வை சுரப்பிகள்

பல கால் நோய் நிலைகளைப் போன்று, குதிகால் வெடிப்புகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் இது ஆபத்தானதாகலாம் மற்றும் வெடிப்புகள் ஆழமானதாகலாம் அல்லது வெடிப்புகளில் நோய்த்தொற்று ஏற்படலாம். மிகக்குறிப்பாக, சர்க்கரை நோய் அல்லது ஈடிணக்கம் செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு மண்டலம் உள்ள மக்களில் இது ஆபத்தானதாகலாம்.

குதிகால் வெடிப்புகள் / பிளவுகள்

சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்பு:

கால்களை ஒழுங்காக தவராமல் ஈரப்படுத்துவது குதிகால் வெடிப்புகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்தும். ஒரு முறை இவை ஏற்பட்டால் , தினமும் நுறைக்கற்களை பயன்படித்தி தடித்து உறியும் வண்ணம் உள்ள தோலினை குறைக்கலாம். காலணிகள் இன்றி செல்வது அல்லது பின்புறம் திறந்த நிலையில் உள்ள ஷூக்களை அணிவது, சாண்டல்களை அணிவது அல்லது தடிமனான தோலினாலான ஷூக்களை அணிவதை தவிற்கவும். அதிக அதிர்வுகளை இழுத்துக்கொள்ளும் ஷூக்களை அணிவது நிலைமையை மேம்படுத்த உதவும்.

குறைந்தது ஒரு நாளில் இரண்டு முறை கால்களை ஈரப்படுத்துவது மற்றும் உறங்கும் போது ஈரக்கால்களுக்கு மேல் கால் உறைகளை அனிவதும் உதவும்.

குதிகால் வெடிப்பை இயற்கையாக வீட்டிலேயே அகற்றுவது எப்படி?

பெரும்பாலானோர் முகத்திற்கு கொடுக்கும் கவனிப்பை பாதங்களுக்கு கொடுக்க மறந்து விடுகிறார்கள். இதனால் தான் பாத வெடிப்பு ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் இந்த பிரச்சனை வருகிறது. நமது உடலில் மற்ற பகுதிகளை காட்டிலும் பாதம் விரைவில் வறண்டு விடும். அதனால், அதை பாதுகாப்பதும் நமது கடமையாகும்.

இந்த பாத வெடிப்பை போக்குவதற்காக கடைகளில் க்ரீம்கள் விற்கப்படுகின்றன. இருந்தாலும், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து க்ரீம் தயார் செய்ய முடியும். பாத வெடிப்பு குணமாக க்ரீம் எப்படி தயார் செய்வது (குதிகால் வெடிப்புக்கான வீட்டு வைத்தியம்) என்று பார்க்கலாம்.

குதிகால் வெடிப்புகள் / பிளவுகள் மறைய வீட்டு வைத்தியம்:

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுண்ணாம்பு, இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டையும் எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் க்ரீம் ரெடி. தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக விளக்கெண்ணெய் இருந்தால் கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு, கால்களை 10 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து, பழைய டூத் பிரசால் பாதங்களில் இருக்கும் அழுக்கை நன்றாக தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.

பின்னர் துணியால் பாதங்களை நன்றாக துடைத்துவிட்டு நாம் தயாரித்து வைத்த க்ரீமை பாத வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே வைத்து, மறுநாள் காலை கால்களை கழுவிடுங்கள்.

இவ்வாறு இந்த முறையை தொடர்ந்து இரண்டு வாரங்கள் செய்து வந்தால் கால்களில் உள்ள பாத வெடிப்புகள் காணாமல் போய், மென்மையான பாதங்களை பெறலாம்.

வீடியோக்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...