தலைப்பு செய்திகள்: 23-June-2022

Date:

Share post:

தலைப்பு செய்திகள்: 23-June-2022

19.00 PM

கொரோனா அதிகரிப்பு எதிரொலி:

கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக தமிழகத்தில் ஜூலை மாதம் 10-ம் தேதி 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

18.00 PM

50 கோடி ரூபாய் மதிப்புள்ள காளத்தீஸ்வரர் கோவில் சொத்து மீட்பு

திருவள்ளூரில் உள்ள காளத்தீஸ்வரர் ஆலயத்தின் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆக்ரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சொத்து கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

17:30 PM
சிவகங்கை: மாடுகள் முட்டியதில் 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெரு நாட்டார்களின் சார்பில் 74ம் ஆண்டு 300க்கும் மேற்பட்ட காளைகள் பற்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் போது காளைகள் முட்டியதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியை சிவகங்கை, தேவகோட்டை, திருப்புத்தூர், சிங்கம்புணரி, காரைக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

17:15 PM
கடலூர்: பட்டாசு கொட்டகையில் வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேர் உடலுக்கு உழவர் நலம் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வெடி விபத்தில் காயமடைந்தவர்களையும் குடும்பத்தினரையும் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

17:00 PM
சென்னை: வளர்ப்பு தந்தைக்கு, 8 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு, 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஷபி, இரண்டாவது மனைவியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் பழைய வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி எம்.ராஜலட்சுமி பிறப்பித்த தீர்ப்பில், ஷபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்

16:45 PM
டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தர படுத்தி காலம் வரை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

16:30 PM
பழனி அருகே ஊராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்வது குறித்து உறுப்பினர்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

16:15 PM
திருப்பத்தூர் மாவட்டம்: ஜெஇஇ மெயின்ஸ் தேர்வில் மாணவர்கள் வெளிநடப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியில் பொதிகை கலை கல்லூரி அமைந்துள்ளது. கல்லூரியில் இந்திய அளவில் ஜெஇஇ மெயின்ஸ் பேப்பர் டு தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வில் பி ஆர்க் என்கின்ற கட்டிடக்கலை தேர்வில் கேள்வித்தாள் சரிவர இல்லாததாலும், கல்லூரி நிறுவனம் நெட்வொர்க் ப்ராப்ளம் என்று கூறியதாலும் மாணவர்களால் சரிவர தேர்வை எழுத முடியவில்லை. இதன் காரணமாக சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதாமல் வெளிநடப்பு செய்தனர்.

16:10 PM
வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘கடலூர், பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெர்வித்து கொள்கிறேன். விபத்தில் காயமடைந்த வசந்தா என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

16:00 PM
மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரியின் 122 வது பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகிரியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

16:00 PM
வள்ளியூரில் புதிய பேருந்து நிலையம் நவீனமாக்கும் பணிகள்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 12.13 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலைய நவீனமாக்கும் பணியினை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

16:00 PM
வரும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்த முடிவு எடுக்கப்படும்

வரும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் பொதுக்குழு கூட்டப்படுவது குறித்து இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள் என்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார்.

15:45 PM
பொதுக்குழுவை கூட்ட அவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை: ஓபிஎஸ் தரப்பு

பொதுக்குழுவை கூட்ட அவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை என்றும் அதை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் அளிக்கப்பட்ட பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15:30 PM
மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் இல்லாத நிலத்திற்கு போலி பத்திரம் தயார் செய்து இணை சார்பதிவாளர் துணையுடன் நிலத்தை விற்ற நபர்களிடமிருந்து தங்களுடைய நிலத்தை மீட்டு தரக்கோரி திமுக நகர மன்ற உறுப்பினர் மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

15:30 PM
ஓபிஎஸ் மேல் பேப்பர் வீசியதை பார்த்தேன் – நடிகை விந்தியா ஒப்புதல்

15:10 PM
மயிலாடுதுறை கும்பாபிஷேகத்தில் பெண்கள் நகை திருடு போகாமல் இருக்க சேலைத் தலைப்பை மூடச்சொல்லி சேப்டி பின் போட்டுவிட்ட பெண் போலீசார், சேலையால் நகையை மூடச்சொல்லி தொடர்ந்து வலியுறுத்தினர்

15:00 PM
ஓ பன்னீர்செல்வம் இல்லத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திரு நாகராஜன் உள்ளிட்டோர் வருகை. அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பெஞ்சமினை அடையாளம் தெரியாமல் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு

அவரது ஆதரவாளர்கள் தடுப்பை தள்ளி ரத்த காயத்துடன் உள்ளே நுழைத்தார் பெஞ்சமின்

14:50 PM
உதகையில் பட்ட பகலில் குடியிருப்பு பகுதிக்குள் வந்த சிறுத்தை 2 கரவை மாடுகள் வேட்டையாட முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

14:45 PM
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டதாகக் கூறி கோவையில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

14:30 PM
தன்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனது ,மகன் மற்றும் சகோதரியுடன் பெண் ஒருவர் தாம்பரம் காவல் ஆனையரகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

13:45 PM
கோவையில் நடைபெற்ற மாநகராட்சி சுகாதாரக்குழு கூட்டத்தில் ஆயுர்வேதிக், சித்தா மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கு ரூ.25 லட்சம் தொகை வழங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கடலூர் எம். புதூரில் வெடி விபத்து – வெடி தயாரித்து கொண்டு இருந்த போது ஏற்பட்ட விபத்தால் நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல்.

13:30 PM
வரும் 30ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முடிவுகளை பொதுக்குழு அங்கீகரிக்காவிட்டால் அப்பதவிகள் காலாவதியாகிவிடும்.

ஓபிஎஸ் விரும்பும் அந்த இரட்டை தலைமை பதவிகளுக்கு எந்த சட்ட அங்கீகாரமும் கிடைக்காது. ஆனால் அடுத்த பொதுக்குழு ஜூலை நடக்க இருக்கிறது,இதனால் பதவி காலாவதியாக வாய்ப்பு

12:30 PM
கூட்டத்திலிருந்து வெளியேறிய ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்களும், காகிதங்களும் வீசப்பட்டதாக தகவல். ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு நடக்கும் என அறிவிப்பு

12:15 PM

சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு என கூறி ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் பொதுக்குழுவிலிருந்து வெளியேறினர். ஒற்றைத் தலைமையின் நாயகன் எடப்பாடி பழனிசாமி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொதுக்குழுவில் புகழாரம்

11:45 AM
அனைத்து வகை தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மேடையில் கோஷம். பொதுக்குழு கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை

11:15 AM
இபிஎஸ் பொதுக்குழுவுக்கு வந்தபோது ‘வேண்டாம் வேண்டாம் இரட்டைத் தலைமை வேண்டா’ என அவரது ஆதரவாளர்கள் விண்ணதிர கோஷங்கள் எழுப்பினர்

11:00 AM
எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

10:45 AM
பொதுக்குழுவில் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டதால் வைத்திலிங்கம் மேடையில் இருந்து இறங்கி சென்றார். அதிமுக பொதுக்குழு அரங்கினுள் வந்த ஓபிஎஸ்-க்கு எதிராக தொண்டர்கள் எதிர்ப்பு முழக்கம்.

10:30 AM

அதிமுக பொதுக்குழு கூட்டம் : போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஓபிஎஸ்-இபிஎஸ் வாகனம்.

வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் பலத்த பாதுகாப்பு. மண்டபத்திற்கு உள்ளே, வெளியே, இணைப்பு சாலைகளில் மொத்தம் 2000 போலீஸ் குவிப்பு.

அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், வன்முறைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது

10:15 AM
மழைக்கால பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. புதுச்சேரியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 500 க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஓட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

09:50 AM
அதிமுக பொதுக்கூட்டம் எதிரொலி

பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வானகரம் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.

வேலைக்கு செல்பவர்கள் பள்ளி செல்பவர்கள் என அனைவரும் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது..

09:45 AM
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரி மாநிலத்தில் இன்று பள்ளிகள் திறப்பு

09:30 AM
அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெறவுள்ள நிலையில், பூவிருந்தவல்லி முதல் மதுரவாயல் வரை சுமார் 5 கி.மீ அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல்.

பள்ளிக்கு செல்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதி. தொண்டர்கள் வருகை. பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ்-இபிஎஸ் புறப்பட்டனர்

08:00 AM
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வேன், வரவுசெலவுத் திட்டக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்,அதை நான் தான் செய்ய வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம், ஓபிஎஸ் இல்லத்தின் முன் தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!

07:15 AM
தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக 23-ம் தேதி தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

07:00 AM
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 2,500 போலீசாரின் பாதுகாப்போடு அ.தி.மு.க. பொதுக்குழு இன்று (வியாழக்கிழமை) கூடுகிறது. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.

06:45 AM
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

06:30 AM
பொதுக்குழுவிற்கு தடை கோரிய மேல்முறையீடு வழக்கு
அதிமுக பொதுக்குழு நடத்த எந்த தடையும் இல்லை. திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்தலாம். பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம். ஆனால், 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைப்பு செய்திகள்: 23-June-2022

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...