செய்திகள்: 24 June 2022

Date:

Share post:

செய்திகள்: 24 June 2022

19:00 PM

முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தால் மட்டுமே முடிவெடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் பள்ளிக் கல்வியின் ஊராட்சி மன்றங்களில் பங்கும் பொறுப்பும் என்கிற தலைப்பில் 100 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நடைபெறும் இரண்டு நாட்கள் பயிற்சி பணிமனையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார்.

அப்போது கொரோனா வைரஸ் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, கொரோனா வைரஸ் தொற்று குறித்து இதுவரை, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை, அவ்வாறு வந்தால் அதற்கு ஏற்றார்போல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

18:45 PM
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தமிழகத்தைத் தவிர கேரளா, கர்நாடகா என அண்டை மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே வழக்கு விசாரணை நடத்த மேலும் கூடுதல் கால அவகாசம் தேவை என தமிழ்கா அரசு கோரிக்கை விடுத்தது.

கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பொறுப்பு நீதிபதி ஸ்ரீதர், வழக்கினை எதிர்வரும் ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

18:15 PM

44வது செஸ் ஒலிம்பியாட்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிகளுக்கு ரூ.1 கோடி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

17:30 PM
பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுகள் கலந்து ஏரிகளிலும் நீர் மாசடைவதை தடுக்க வேண்டும், புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது, ஏரி குளம் ஆறுகள் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மோர்தானா அணை நீரை

கோவில் திருப்பணி என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு எதிரான காவல்துறை விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

17:00 PM

மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16:15 PM

டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, நீலகிரியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடந்த 2016 ம் ஆண்டு தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16:00 PM
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து வேளாண்மை துறை சார்ந்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி வழங்கினார்.

15:30 PM
தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடந்த 2016 ம் ஆண்டு தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், 2016-2021 வரையிலான ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்துவிட்டதால், வழக்கை தொடர்ந்து நடத்த எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

15:15 PM

நாகை: புத்தகத் திருவிழா துவங்கியது

நாகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் புத்தகத் திருவிழா துவங்கியது . புத்தகத் திருவிழாவில், பொன்னியின் செல்வன், பாரதியார் கவிதைகள், நீதிநூல் கஞ்சியம் உள்ளிட்ட 110 பதிப்பகங்களின் புத்தகங்கள் அரங்கத்தில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. புத்தக குவியல்களை பார்வையிட மக்கள் கூட்டம் கூட்டமான வந்த வண்ணம் உள்ளனர்.

15:00 PM

நீலகிரியை தொடர்ந்து டாஸ்மாக் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுத்து ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் நகல் மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் விருப்பத்தின் பேரில் அஞ்சல் வழியாக இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும், ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை நாளை, அதாவது ஜூன் 25 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

14:45 PM
ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும்

ஆவின் கடைகளில் ஆவின் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என்றும் மற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

14:30 PM
ஓபிஎஸ் அதிமுக-வின் பொருளாளர் மட்டும்தான்: சி வி சண்முகம்

ஓ பன்னீர்செல்வம் அதிமுக-வின் பொருளாளர் மட்டும்தான் என்றும் அவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கிடையாது என்றும் சி வி சண்முகம் கூறியுள்ளார்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் குருதி வங்கியில் புதிதாக ரத்த அணுக்கள் பகுப்பு கருவியினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்

14:15 PM
ஊட்டி உருளைக்கிழங்கு விலை அதிகரிப்பு

தற்போது நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், ஊட்டி உருளைக்கிழங்கின் விலை தற்போது 1500 லிருந்து 2000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் கோலார் இருந்து வரும் உருளைக்கிழங்கின் விலை ரூ. 1120-1150 வரையும், ஆக்ரா உருளைக்கிழங்கு ரூ. 1110-1130 வரையும் விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

14:00 PM
ஓபிஎஸ் பெயர் மற்றும் படம் நீக்கம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகம் மற்றும் சுவர் விளம்பரங்களில் ஓபிஎஸ் பெயர் மற்றும் படம் நீக்கப்பட்டுள்ளது.

14:00 PM
திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த ஈழத் தமிழர்களில் ஒருவரான உமா ரமணன் என்பவர் இன்று தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீ குளித்துள்ளார். இது குறித்து அறிந்த அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

13:00 PM
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல். வேட்புமனு தாக்கலின்போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

ஓ. பன்னீர்செல்வத்தை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் எனவும், வைத்திலிங்கத்தை முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் எனக்கூறி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேட்டி

12:30 PM
கொடநாடு வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

11:45 AM
யஷ்வந்த் சின்ஹாவுக்கு பாதுகாப்பு

எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளாரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுத்தது மத்திய அரசு

11:30 AM
மீராமிதுன் ஜாமின் மனு தள்ளுபடி

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11:15 AM
ஈபிஎஸ் ஆலோசனை

சென்னை இல்லத்தில் தனது ஆதரவாளர்களான பொள்ளாச்சி ஜெயராமன், வைகைச்செல்வன், தங்கமணி உள்ளிட்டோருடன் ஈபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கே.சி.வீரமணி, பா.வளர்மதி, கே.பி.அன்பழகன் ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் நாடியுள்ள நிலையில், ஈபிஎஸ் தீவிர ஆலோசனை செய்து வருகிறார்.

11:00 AM
மாமன்னன் திரைப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் 2ம் கட்டப் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

அதிமுகவிடம் ஆதரவு கோரினார் திரளபதி முர்மு

டெல்லி சென்றுள்ள நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரையை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரளபதி முர்மு நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

பட்டாசு ஆலை வெடிவிபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

கடலூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் அடுத்த எம்.புதூர் கிராமத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் இடத்தில் நேற்று பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த வசந்தா என்பவர் இன்று காலை உயிரிழந்தார்.

செய்திகள்: 24 June 2022

10:15 AM
ஓ.பி.எஸ் மனு தாக்கல்

ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் இருக்கும் தேர்தல் ஆனையத்தில் மனு அளித்துள்ளார்

தமிழகத்தில் புதியதாக கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை என அமைச்சர் மா.சுப்பரமணியன் தெரிவித்துள்ளார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

எலக்டிரிக் வாகனங்கள் தீப்பிடிப்பதை தவிர்க்க முடியாது என ஓலா நிறுவன சிஇஓ பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

09:15 AM

மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது. 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் 2-வது நாளாக பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

08:15 AM

மாற்றுத்திறனாளி உலமாக்கள் ஓய்வூதியம் பெரும் வயதை 50லிருந்து 40ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

08:00 AM

உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு
கடலூர் அருகே கோப்பர்குவாரி மலை பகுதியில் உள்ள எம்.புதூர் கிராமத்தில் வனிதா மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

செய்திகள்: 24 June 2022

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...