தலைப்பு செய்திகள்: 25-June-2022

Date:

Share post:

தலைப்பு செய்திகள்: 25-June-2022

நான் முதல்வன் திட்டம் எதற்காக? மாணவர்களுக்கு விளக்கிய முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நான் முதல்வன்” என்ற திட்டத்தின் கீழ், 12ஆம் வகுப்பு படித்தவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும், கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்த நிகழ்ச்சி ஒரு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் பெறக்கூடிய நிலையில் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.

கள்ளம் கபடம் இல்லாத உங்கள் முகங்களில் இருக்கும் இந்த இயல்பான அழகுதான் இனிமையான அனுபவத்தைத் தருகிறது.

தமிழக அரசு அர்ச்சகர் பள்ளிகளை மீண்டும் தொடங்க உள்ளது

இந்து சமய அறநிலைய துறை (HR & CE) பிரிவு 14 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை நடுப்பகுதியில் அர்ச்சகர் பயிற்சிக் கல்லூரிகளை (அர்ச்சகர் பயிர்ச்சி பள்ளி) மீண்டும் தொடங்க உள்ளது.

2021 ஆம் ஆண்டு மீண்டும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சாதி வேறுபாடின்றி அனைத்து இந்துக்களுக்கும் அர்ச்சகர் திட்டங்களை வழங்குவதன் மூலம் சமூக நீதியை உறுதிசெய்ய நிறுவனங்களை புதுப்பிக்க உறுதியளித்தனர்.

அர்ச்சகர் பதவியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மேலாதிக்கத்திற்கு இடையூறு விளைவித்து, சமூக நீதியை உறுதி செய்வதற்காக திமுக முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் அவர்களின் பல முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தத் திட்டம் 2007 இல் தொடங்கப்பட்டது.

“ஜூலை இரண்டாவது வாரத்தில் அர்ச்சகர் பயிற்சி கல்லூரிகளை மீண்டும் தொடங்க உள்ளோம். ஆறு கல்லூரிகளுக்குள் 210 கல்லூரி மாணவர்கள் சேர்ந்துள்ளனர்,” என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு குறிப்பிட்டார்.

அக்னிபாத் திட்டம் – தமிழக காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்தவகையில் தமிழக காங்கிரஸ் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

சாமானியர்கள் முதல் தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள்வரை பலரும் இத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.

ஆனால் திட்டத்தை திரும்பப் பெறுவதற்காக சாத்தியமே இல்லை என்கிறது மத்திய அரசு. எனவே நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்துவருகின்றன.

ண்டி கிங்ஸ் மருத்துவமனை விரைவில் கொரோனா சிகிச்சை மையம்

கிங்ஸ் மருத்துவமனை விரைவில் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படுமென்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் கார் நிறுவன பராமரிப்பு நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிலையில் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

முடிந்தது டெல்லி மீட்டிங் – ஆதரவை மீட்க சுற்றுப்பயணம் செல்லும் ஓபிஎஸ்

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை கோஷமும், பன்னீருக்கு எதிரான கோஷமும் அதிகளவில் எழுப்பப்பட்டது.

அதுமட்டுமின்றி 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடத்தப்படுமென்றும் கூறப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் பொதுக்குழு முடிந்த அன்றே டெல்லி கிளம்பிய ஓபிஎஸ் அங்கு சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது மோடி, அமித்ஷா உள்ளிட்டோருடன் ஓபிஎஸ், அவரது மகன் ஓ. பி. ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் இருந்தனர்.

அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள்; பாதுகாக்க வனஆர்வலர்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் , கமுதி உள்ளிட்ட பகுதிகளில் சிட்டுக்குருவிகளின் இனம் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருப்பதால் அதனை பாதுகாக்க வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பறவை இனங்களிலேயே மிகச் சிறியதாகவும் அனைவரையும் கவரும் வகையில் ஒலி எழுப்பும் பறவை சிட்டுக்குருவிகள் தான்.

இவை புழுக்களை உண்டு வாழ்வதால் சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்த பறவையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.பொதுவாக மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் வயல் வெளிகளிலும் சிட்டுக்குருவிகள் அதிகம் காணப்படும்.

நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்கள், சாக்கு மூட்டைகளில் சேமிக்கப்படும் அதிலுள்ள துளைகள் வழியே தானியங்கள் சிதறும். அவற்றை சிட்டுக்குருவிகள், காகம் போன்ற பறவையினங்கள் உண்டு வாழும்.

ஆனால் தற்போது அனைத்து தானியங்களும் பிளாஸ்டிக் பைகளில் பொதி செய்யப்படுவதால் சிட்டுக்குருவிகளுக்கு தேவையான தானியங்கள் கிடைக்காமல் போய்விட்டது.

தலைப்பு செய்திகள்: 25-June-2022

காற்றாலை கத்திகள் – இரண்டு புதிய கம்பெனிகளை திறந்துவைத்த அமைச்சர்

NTC குழுமம் Boxory Logistics மற்றும் Cargonix Xpress உடன் இரண்டு புதிய வணிகத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,NTC குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சந்திரமோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் .

இக்குழுமம் 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தொடங்கப்பட்ட ஆண்டு முதல் தற்போதுவரை பல்வேறு கட்ட வளர்ச்சிகளை NTC லாஜிஸ்டிக் குழுமம் பெற்றுள்ளது.

24 ஆண்டுகளாக இந்திய தொழில்துறை வளர்ச்சியில் பல்வேறு பங்களிப்புகளை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.

ஜீ தமிழ் நியூஸ் நடத்தும் மாபெரும் கல்விக் கண்காட்சி

மாபெரும் கல்விக் கண்காட்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்க இருக்கிறார்.

தொலைக்காட்சியின் மாபெரும் கல்விக் கண்காட்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது.

+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக ‘நாளைய இலக்கு’ என்ற பெயரில் இந்தக் கல்விக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேர்கோட்டில் அணிவகுத்து நிற்கும் கோள்கள்

பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இது மனித கண்களுக்குத் தெரியும் என்பது கூடுதல் செய்தி.

நேற்று காணப்படத் தொடங்கிய இந்த நிகழ்வை இன்னும் நான்கு நாட்கள் வரை வானில் காணலாம் என்றும் வானியற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நமது சூரிய மண்டலத்தில் உள்ள ஐந்து முக்கிய கிரகங்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்கும் அரிய கிரக இணைப்பு ஏற்பட்டுள்ளது.

அசாம் வெள்ளம்: சுமார் 45 லட்சம் பேர் பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் உள்ள 3,510 கிராமங்களைச் சேர்ந்த 33,03,316 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 91658.49 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் 5.03 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அசாமின் நாகோன் மாவட்டத்தின் பல பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால், பலர் கரைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

அசாமின் நாகோன் மாவட்டத்தில் சுமார் 5.03 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வெள்ள நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

நாகோன் மாவட்டத்தில் உள்ள ராஹா வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகள் இன்னும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

தலைப்பு செய்திகள்: 25-June-2022

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...