தினம் ஒரு திருக்கோயில்-அமிர்தகடேசுவரர்

Date:

Share post:

தினம் ஒரு திருக்கோயில்-அமிர்தகடேசுவரர்

அமிர்தகடேசுவரர்

இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்.

இந்தத் தலம் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது வீரட்டாணத்தலமாகத் திகழ்கிறது.

இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 47ஆவது சிவத்தலமாகும்.

அமிர்தலிங்கம்

அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும்.

இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார் என்பது தொன்நம்பிக்கை

வேண்டியதை வேண்டியபடி அருளும் கற்பக விருட்சமாக அருள்புரிகிறாள், அன்னை அபிராமியம்மை.

சரபோஜி மன்னர் ஆட்சிக்காலத்தில் பக்தர் ஒருவருக்காக அபிராமி அம்பாள் `தை அமாவாசையை’ முழுப் பௌர்ணமியாக்கி `அபிராமி அந்தாதி’ அருளச் செய்த தலம்.

இங்கு அன்னை அபிராமி தன்னை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் இருள்நீக்கி ஒளியேற்றி, அவர்கள் வேண்டியதை எல்லாம் அருள்புரிகிறாள்.

திருக்கோயிலில் வருடாவருடம் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹாரப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

இதை தரிசித்தால் ஆயுள் பலம் கூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்தத் தலத்தில் அம்மையும் அப்பனும் நேருக்கு நேர் நோக்கியபடி சந்நிதி கொண்டருள்கிறார்கள்.

மூலவர் மேற்கே பார்த்தும் அபிராமி அம்பாள் கிழக்கே பார்த்தும் அமைய இத்தலம் நித்தியத் திருக்கல்யாணத் தலமாக திகழ்கிறது.

பூர்ணாபிஷேகம் 100 வயது பூர்த்தி, கனகாபிஷேகம், சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் திருக்கடவூரில் செய்துகொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

இந்தச் சடங்குகளின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவகிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர் பக்தர்கள்.

அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் யமன் வீசிய பாசக்கயிற்றின் தடத்தை இன்றும் சுவாமிக்கு பால் அபிஷேகம் காணலாம்.

திருக்கடவூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள் அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர்.

இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதிகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சந்நிதி உள்ளது.

சித்தர்கள் பலர் வழிபாடு செய்த தலம் இது. அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர். நவகிரக சந்நிதி இங்கு கிடையாது. கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.

கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதலாம் ராசராசன் முதல் மூன்றாம் ராசராசன் வரைப் பல சோழ மன்னர்கள் கோயிலுக்கு நிவந்தம் கொடுத்திருக்கிறார்கள்.

பாண்டிய மன்னர்களான சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் மற்றும் குலசேகரப் பாண்டியன் ஆகிய மூவரின் கொடைத்தன்மையை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

சிறப்புகள்:

சிவபெருமான் மார்க்கண்டேயருக்காக இயமனை உதைத்துத் தள்ளியதலமாதலால், மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை இத்தலத்தில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

தை அமாவாசை திதியை அம்பிகையின் முக அழகை தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் பௌர்ணமி என்று தவறாக சரபோஜி மன்னரிடம் சொல்ல, அதனால் கோபமுற்ற மன்னரிடம் இருந்து காக்கும்படிக்கு

அமாவாசையை பௌர்ணமியாக மாற்றிக் அபிராமி அந்தாதி பாடி மன்னருக்கு காட்டிய அற்புதம் நிகழ்ந்த தலம். இங்கு நவக்கிரக சந்நிதி இல்லாதது சிறப்பாகக் கூறப்படுகிறது.

வழிபட்டோர்:

அகத்தியர், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலம்.

சிவத்தலங்களுள் மார்க்கண்டேயர் வழிபட்ட இத்தலம் 108 வதாகவும், அருகிலுள்ள திருக்கடவூர் மயானம் 107 வதாகவும் அமைகின்றன.

தினம் ஒரு திருக்கோயில்-அமிர்தகடேசுவரர்

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...