ஜுலை-8ல் பொன்னியின் செல்வன் டீசர்

Date:

Share post:

ஜுலை-8ல் பொன்னியின் செல்வன் டீசர்

ஜுலை-8ல் பொன்னியின் செல்வன் டீசர்

டைரக்டர் மணிரத்னம் இயக்கிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு தயாராக உள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

செப்டம்பர் 30 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் ரிலீசாக உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் படமாக பொன்னியின் செல்வன் உள்ளது.

இரண்டு பாகங்களாக தயார் செய்யப்பட்டுள்ள பொன்னியின் செல்வனின் முதல் பாகம் தயாராகி விட்டது. இரண்டாம் பாகத்தை 2023 ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஜுலை-8ல் பொன்னியின் செல்வன் டீசர்

பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் இருக்கும் அழகான போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதுவரை வெளியான போஸ்டர்களிலேயே இதுதான் கொஞ்சம் பார்க்கும் படியாக ராயலாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஜுலை-8ல் பொன்னியின் செல்வன் டீசர்

டீசருக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருக்கிறார்கள்.

ஆனால் இதுவரை டீசர் ரிலீஸ் பற்றி எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை.

ஆனால் தஞ்சையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த டீசர் வெளியீட்டு விழா பிளான் கைவிடப்பட்டதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.

சென்னையில் டீசர் ரிலீசா?

நிஜமாகவே படக்குழு தஞ்சையில் தான் டீசரை வெளியிட திட்டமிட்டதா என தெரியாது.

ஆனால் தஞ்சை கோயில் சென்டிமென்ட் காரணமாக பலரும் பட விழாவில் பங்கேற்க தயங்கியதால் சென்னை நேரு ஸ்டேடியத்தில் டீசர் வெளியீட்டை நடத்த படக்குழு ஏற்பாடு செய்து வருவதாகவும்,

இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

போஸ்டர் வெளியிடும் படக்குழு

ரசிகர்கள் டீசரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் படத்தின் ப்ரொமோஷனாக, முக்கிய கேரக்டர்களின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

முதல் நாளில் ஆதித்ய கரிகாலன் ரோலில் நடிக்கும் விக்ரமின் போஸ்டர், இரண்டாம் நாளில் வந்தியத் தேவன் ரோலில் நடிக்கும் கார்த்தியின் போஸ்டர் ஆகியன வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து இன்று, நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயின் போஸ்வரை வெளியிட்டுள்ளனர்.

நாளைக்கு யாருடைய போஸ்டர்

அடுத்து யாருடைய போஸ்டரை வெளியிட போகிறார்கள். அருண்மொழி தேவனின் போஸ்டரை தான் நாளை வெளியிட போகிறார்கள் என ரசிகர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் டீசர் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி அனைவரையும் அசர வைத்துள்ளது.

ஜுலை-8ல் பொன்னியின் செல்வன் டீசர்ஜுலை 8 ல் டீசர்

லேட்டஸ்ட் தகவலின் படி ஜுலை 8 ம் தேதி சென்னையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட உள்ளதாம்.

இதில் படத்தில் யாரெல்லாம் எந்த கேரக்டரில் நடிக்கிறார்கள் என்ற விபரத்தை படக்குழு வெளியிட உள்ளதாம்.

படத்தில் நடித்தவர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜுலை-8ல் பொன்னியின் செல்வன் டீசர்

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...