“சைக்கிள் கேப்”பில் நுழைந்த விசிக

Date:

Share post:

“சைக்கிள் கேப்”பில் நுழைந்த விசிக..

“மோடி சகாக்கள்”.. பெரும் ஆபத்து.. எங்கேயும் ஓட முடியாது.. பகீர்

சென்னை: “சர்வாதிகாரிகள் யாரும் மக்களின் அறச்சீற்றத்திலிருந்து தப்பித்து ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.

இன்று இலங்கை. நாளை இந்தியா? இன்று பக்சே சகோக்கள். நாளை மோடி சகாக்கள்?” என்று விசிக காட்டமாக கூறியுள்ளது.

கடந்த மே மாதமே இலங்கையில் ராஜபக்சே விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது..

அவரது குடும்பத்தை இலங்கை மக்கள் அடியோடு வெறுத்து ஒதுக்கி விட்டனர்..

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக,

அதிபர் ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தி, ராஜபக்சேவுக்கு அதிர்ச்சியை தந்தனர்.

திருமாவளவன்
கலவரம் மிகப்பெரிய அளவில் உருவானதால், வேறு வழியில்லாமல், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜபக்சே பதவி விலகலை வரவேற்று கொண்டாடினர் அந்நாட்டு மக்கள்.. நம் தமிழகத்திலும், “தமிழினித்தின் சாபம்தான் இன்று வரலாறாக திருப்பி அடித்திருக்கிறது” என்று தலைவர்கள் கர்ஜித்தனர்.

அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் ஒரு ட்வீட் போட்டிருந்தார்..

ஃபாசிசவாதம்

அதில், “ராஜபக்‌ஷே குடும்பம் தப்பிப் பிழைப்பதற்குத் தலைதெறிக்க ஓடுகிறது. இது இனவாத ஃபாசிசத்தின் எதிர்விளைவே ஆகும்.

ஒரே தேசம்-ஒரே கலாச்சாரமென சிங்கள இனவெறியர்கள் பன்மைத்துவத்துக்கெதிராக நடத்திய ஒருமைத்துவ கொடுங்கோன்மை-தமிழர்க்கு எதிரான ஃபாசிச இனவாத ஒடுக்குமுறைகளே முதன்மையான காரணங்களாகும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த ட்வீட்டை சிறுத்தைகள் அப்போது பெரிதும் வரவேற்றார்கள்..

திருமாவளவன்

"சைக்கிள் கேப்"பில் நுழைந்த விசிக

“மதவாதம் பேசியவர்களுக்கு, இப்போது தூக்கம் கெட்டுப்போயிருக்கிறது! அவர்களின் அடிவயிறு, ‘பதக் பதக்’ கென்று இருக்கிறது! சர்வாதிகாரிகளின் இறுதிக்கால நிலை, அவர்களின் கண்முன் தோன்றி, மின்னலென மறைகிறது!

உலகின் சர்வாதிகார மனநோயாளிகளுக்கெல்லாம் ஸ்ரீ இலங்காதேவி பாடம் நடத்திக் கொண்டிருக்கிறாள்.. தமிழினத்தை அழித்து, இலங்கை வாழ நினைத்தது இன்று என்னவானது?

முசுலீம்களை அழித்து இந்துத்வா வாழ நினைப்பது நாளை? இன்று நீ ..நாளை நான்” என்று சிறுத்தைகள் திரண்டு வந்து பதிவிட்டனர்.

கிச்சன் – மளிகை பொருட்கள்

இந்நிலையில், இலங்கையிலை மீண்டும் பரபரப்பு சூழ்ந்துள்ளது.

ராஜபக்ச பதவி விலக வேண்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் இன்று நடத்திய பிரம்மாண்ட பேரணிக்கு பிறகு, அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.

அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து நீந்தினர்.

இன்னொரு குழுவினரோ, ராஜபக்சேவின் மாளிகைக்குள் இருந்த கிச்சனுக்குள் நுழைந்து, அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சமைக்க ஆரம்பித்துவிட்டனர்.

பெட்ரூமில்

மேலும் சிலரோ, ராஜபக்சேவின் பெட்ரூமில் நுழைந்து, முக்சிய சாவிகளை தேடி கொண்டிருக்கிறது.

கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் சூழலில், மாளிகையின் கிச்சனில் ஏராளமான உணவுப் பொருட்கள் இருந்ததாக போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள்.

இதனால், இலங்கையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன.

மோடி சகாக்கள் இதனிடையே, விசிக பொருளாளர் வன்னியரசு, இலங்கை விவகாரம் குறித்து கருத்தை பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய ட்வீட்டில், “ஒரே நாடு- ஒரே மொழி- ஒரே மதம் என நாட்டை கட்டமைக்க முயற்சிக்கும் சர்வாதிகாரிகள் யாரும் மக்களின் அறச்சீற்றத்திலிருந்து தப்பித்து ஓடவும் முடியாது;ஒளியவும் முடியாது.

இன்று இலங்கை. நாளை இந்தியா? இன்று பக்சே சகோக்கள். நாளை மோடி சகாக்கள்? என்று முதல் ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

இன்று நீ – நாளை நான்

"சைக்கிள் கேப்"பில் நுழைந்த விசிக

அடுத்ததாக 2 ட்விட்களை அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார்.

அதில், இனவாதமும் மதவாதமும் இன்று மக்கள் புரட்சியை சந்தித்து கொண்டிருக்கிறது இலங்கை தேசம்.

சனாதிபதியின் அலறி மாளிகையை மக்கள் கைப்பற்றி உள்ளே குடியேறி இருக்கிறார்கள்.

பக்சே சகோதரர்களின் சர்வதிகாரத்துக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்க கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

மத-இனவெறியோடு நாட்டை ஆட்சி செய்தால் அந்த நாட்டில் இப்படி தான் மக்கள் புரட்சி வெடிக்கும்.அதற்கு ஒரே சாட்சியம் இலங்கை.

நாளை இதே நிலை இந்தியாவுக்கும் ஏற்படலாம். மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதவழியில் மாற்ற முயற்சிப்பது அழகிய இந்தியாவுக்கு பேராபத்தாகும்” என்று எச்சரித்துள்ளார்.

“சைக்கிள் கேப்”பில் நுழைந்த விசிக

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...