தமிழகத்தில் பரவும் BA.2.75 ஓமிக்ரான்

Date:

Share post:

தமிழகத்தில் பரவும் BA.2.75 ஓமிக்ரான்

டெல்லி: BA.2.75 எனப்படும் புதிய வகை ஓமிக்ரான் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக டாக்டர் என்.கே அரோரா முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக மூன்றாம் அலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக ஓமிக்ரான் கொரோனா லேசான கொரோனா பாதிப்பையே ஏற்படுத்தியது.

வைரஸ் பாதிப்பு விரைவாகக் கட்டுக்குள் வந்துவிட்டது. இதையடுத்து கட்டுப்பாடுகள் மெல்ல நீக்கப்பட்ட நிலையில், மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தனர்.

புதிய ஓமிக்ரான் வகை

தமிழகத்தில் பரவும் BA.2.75 ஓமிக்ரான்

இந்தச் சூழலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் இந்தியாவில் BA.2.75 என்ற புதிய ஓமிக்ரான் வகை கண்டறியப்பட்டு உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் BA.2.75 கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பும் இதை உறுதி செய்தது.

நாட்டில் இதுவரை, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் எனப் பல மாநிலங்களில் BA.2.75 ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

என்.கே.அரோரா

இது இந்தியாவில் அடுத்த கொரோனா அலையை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது தொடர்பாக INSACOGஇன் இணைத் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “BA.2 உடன் ஒப்பிடும்போது 20-30 சதவீதம் வரை இந்த புதிய BA.2.75 ஓமிக்ரான் வேகமாகப் பரவுகிறது.

இருந்த போதிலும், இதுவரை ஒரே கிளஸ்டரிலிருந்தோ அல்லது குறிப்பிட்ட பகுதியிலிருந்தோ அதிகளவில் வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை.

தமிழகத்தில் பரவும் BA.2.75 ஓமிக்ரான்

மோசமான பாதிப்பு?

இந்திய புகிய வேரியண்ட் கொரோனா பரவலை அதிகரிக்கவில்லை. அதேபோல இந்த புதிய வகை ஓமிக்ரான் தீவிர நோய் அபாயத்திற்கும் வழிவகுக்கவில்லை.

இந்த வழக்குகள் அனைத்தும் பரவலாக உள்ளன. ஓரிரு மாவட்டங்களில் மட்டும் இந்த வகை ஓமிக்ரானால் அதிக பாதிப்பு இருந்தால் நாம் கவலைப்படலாம்.

ஆங்காங்கே தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே, இது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என நம்மால் கூறிவிட முடியாது.

தமிழகத்தில் பரவும் BA.2.75 ஓமிக்ரான்

நான்காம் அலை

இப்போது இருக்கும் சூழலில் இந்தியாவில் கொரோனா 4ஆம் அலை ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த வைரஸ் பாதிப்பு அதிகரிப்பை ஒமிக்ரான் மூன்றாவது அலையின் ஒரு பகுதியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் எந்தவொரு புதிய அலையும் ஒரு புதிய வகை கொரோனா உடனேயே தொடர்பு உடையதாக இருக்கும்.

இப்போது நாம் காண்பது ஓமிக்ரான் பாதிப்பின் நீட்சியே! இந்த புதிய துணை வேரியண்ட் குறித்து இப்போது நாம் கவலைப்படத் தேவையில்லை.

உயிரிழப்புகள் இந்த புதிய வேரியண்ட் ஏதேனும் கடுமையான அல்லது தீவிரமான நோய்களை ஏற்படுத்துமா என்பதே முக்கியமானது.

அதாவது இந்த ஓமிக்ரான் பாதிப்பு நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கும் சூழலுக்குத் தள்ளப்படுமா என்பதே கேள்வி.

ஆனால், இப்போது பார்க்கும் உயிரிழப்புகள் பெரியளவில் அதிகரிக்கவில்லை.

கேன்சர், இதயம், நுரையீரல் போன்ற பாதிப்புகளைக் கொண்டவர்களுக்கே உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

காரணம் என்ன இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் முதலே கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் அதிகளவில் பயணங்களை மேற்கொள்வது, அதிகளவிலான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது, துணை வேரியண்ட்கள் ஆகியவை தான் இதற்குக் காரணம்.

பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் எதாவது சிக்கல் உள்ளதா என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார்.

தமிழகத்தில் பரவும் BA.2.75 ஓமிக்ரான்

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...