தினம் ஒரு திருக்கோயில்-திருமணஞ்சேரி

Date:

Share post:

தினம் ஒரு திருக்கோயில்-திருமணஞ்சேரி

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் உள்ளவர்களுக்குக் கூட கல்யாண வரம் தரும் திருமணஞ்சேரி திருத்தலத்தை தெரியும்.

புராதனமான இந்த ஆலயம், இன்றைக்கும் சாந்நித்தியத்துடனும் புகழுடனும் திகழ்கிறது.

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் உள்ளவர்களுக்குக் கூட கல்யாண வரம் தரும் திருமணஞ்சேரி திருத்தலத்தை தெரியும்.

புராதனமான இந்த ஆலயம், இன்றைக்கும் சாந்நித்தியத்துடனும் புகழுடனும் திகழ்கிறது.

தினம் ஒரு திருக்கோயில்-திருமணஞ்சேரி

திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடந்த ஊர் என்று அர்த்தம். அதாவது, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த தெய்வ சக்தி நிறைந்த பூமி இது. கன்னிகா தானம் செய்து நடத்தி வைத்தவர் ஸ்ரீமகாவிஷ்ணு.

இந்த தெய்வத் திருமணத்திற்குப் பின் சிவனும் – பார்வதியும், விஷ்ணுவும் – லட்சுமியும் நால்வருமாக அங்கேயே வாசம் செய்கிறார்கள் என்று ஐதீகம்!

இப்படிப் பெருமை பெற்ற தலம் திருமணஞ்சேரி. கிழக்கே விக்கிரமன் என்னும் காவிரியாறு, மேற்கில் கிளை நதியான காளி வாய்க்கால்.

இரண்டுக்கும் நடுவில் அமைந்த திருத்தலமே திருமணஞ்சேரி. பூமியில் பசுவாகப் பிறக்கும்படி பார்வதி சாபம் பெற்றாள்.

அப்படி பசுவான பார்வதிதேவி இங்கே வந்தபோது, அந்தப் பசுவை மேய்க்கும் இடையனாக விஷ்ணுவும் உடன் வந்தார்.

சாப விமோசனம் பெற்ற பின் பார்வதி சிவபெருமானை மணந்தார். அப்போது விஷ்ணுவே பார்வதியை சிவனுக்கு நீர்வார்த்து கன்யாதானம் செய்து வைத்தார்

நான்முகனான ஸ்ரீபிரம்மா, புரோகிதர் ஸ்தானத்தில் இருந்து சிவ பார்வதி திருமண வைபவத்தை நடத்தி வைத்தார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இந்தத் திருமணக் காட்சியை தூணில் சிற்ப வடிவமாகத் தரிசிக்கலாம்!

திருமணஞ்சேரியில் மணந்துகொண்டதால் இங்குள்ள சிவனின் திருநாமம் கல்யாண சுந்தரேசுவரர். உத்ஸவரின் திருநாமம் உத்வாக நாத ஸ்வாமி.

அம்பிகை கோகிலாம்பாள். நடத்தி வைத்த மைத்துனர் விஷ்ணுவின் திருநாமம் ஸ்ரீலட்சுமி நாராயணர்.

ஸ்ரீதேவி, பூதேவி. சகிதமாக இருக்கும் உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீவரதராஜப் பெருமாள்.

சிவன் கோயிலுக்கு அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் இருப்பது மேலத் திருமணஞ்சேரி. அங்கேதான் திருமணத்திற்கு வந்த முப்பத்து முக்கோடி தேவர்களையெல்லாம் விஷ்ணு வரவேற்றார்.

அதனால் அது எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றது. கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் முக்கியமான திருவிழா அவரது திருக்கல்யாணம்தான்.

அந்தத் திருக்கல்யாணத்திற்கு இன்றைக்கும் சீர் வரிசைகள் லட்சுமி நாராயணப் பெருமாள் குடிகொண்டிருக்கும் எதிர்கொள்பாடியிலிருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன.

வழக்கத்திற்கு மாறாக, இந்த ஊரில் பெருமாள் மேற்கே பார்த்து இருக்கிறார். அதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

திருமணத்திற்காகக் கல்யாணசுந்தரரும் கோகிலாம்பாளும் கிழக்கு நோக்கி அமர, அதை நடத்தி வைத்த மைத்துனர் மகாவிஷ்ணு மேற்கே பார்த்து அமர்ந்தாராம்.

இங்கே அவர் லட்சுமியைப் பக்கத்திலோ அல்லது தன் திருமார்பிலோ தாங்கவில்லை. தாயாரை தன் மடியிலேயே தாங்கிய கோலத்துடன் அழகு ததும்பக் காட்சி தருகிறார்.

திருமணஞ்சேரி பரிகாரத் தலமாக விளங்குகிறது. லட்சுமி நாராயணர் கேட்டதைக் கொடுக்கும் வரதராஜனுமாவார்.

தினம் ஒரு திருக்கோயில்-திருமணஞ்சேரி

ஸ்ரீதேவி – பூதேவி சமேதரான இவரை வணங்கி வழிபட்டால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

இங்கே பெருமாள் கோயிலில் உள்ள தன்வந்திரி பகவானுக்கு ஹஸ்த நட்சத்திரம் மற்றும் புதன் கிழமைகளில் மூலிகைத் தைலாபிஷேகம் செய்வதும், நெய் தீபமேற்றி 11 முறை வலம் வருவதும் உடல் ஆரோக்யத்தை அளிக்கும்.

ராகு தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் ஐந்து தலை நாகருக்கு தீபமேற்றி வழிபடுகிறார்கள்.

இப்படி சிவனும் விஷ்ணுவும் அருகருகே கோயில் கொண்ட திருமணஞ்சேரிக்கு வந்து தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்.

நல்ல வரன் அமைந்து, இல்வாழ்க்கையில் சிறந்து வாழலாம் என்கின்றனர்

கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள திருமணஞ்சேரிக்கு வாருங்கள்.

கும்பாபிஷேகம் இன்று நடைபெற்று, மாலையில் இருந்து தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் மண்டலாபிஷேக பூஜையில் ஏதேனும் ஒருநாளில் வந்து கலந்து கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்.

கல்யாண வரங்களையும் கும்பாபிஷேகப் பலன்களையும் தந்தருள்வார் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர்!

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...