தினம் ஒரு திருக்கோயில்-திங்களூர்

Date:

Share post:

தினம் ஒரு திருக்கோயில்-திங்களூர்

தேவார வைப்புத்தலம் பாடல் பெற்ற திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில்

அறிவியல் ரீதியாக பார்க்கும்போது சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் மனிதர்களின் சிந்தனை, செயல்களில் மாறுபாடுகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது சித்தர்களும்,வானியல் சாஸ்திர வல்லுநர்கள் கூறியுள்ளனர். சந்திரனை தனது முடியில் சூடி சந்திரசேகரன் என்கிற பெயரில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அப்படி சிவபெருமானும் நவகிரகங்களில் சந்திர பகவானும் ஒருசேர அருள்புரியும் திங்களூர் அருள்மிகு கைலாசநாதர் கோயிலின் சிறப்புகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இந்த திங்களூர் கைலாசநாதர் கோயில் இருக்கிறது.

இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் கைலாசநாதர் என்கிற பெயரிலும், அம்பாள் பெரியநாயகி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

இக்கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் இருக்கிறது. தீர்த்தம் சந்திர புஷ்கரணி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. தேவாரம் பாடிய திருநாவுக்கரசரை மட்டுமே அனைவரும் அறிவர்.

ஆனால் திங்களூரில் வாழ்ந்த சிறந்த பக்தரான அப்பூதியடிகளும் அவரின் மனைவியான தேன்மொழி தேவிக்கும் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளில் மூத்தவர் மூத்த திருநாவுக்கரசு என்றும், இளைய மகன் இடையே திருநாவுக்கரசு என்கிற பெயரிலும் அழைக்கப்பட்டனர்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிற கொள்கை முழக்கம் கொண்ட அப்பூதியடிகள், திருநாவுக்கரசர் என்கிற பெயரில் தண்ணீர் பந்தல், அன்னதானம் கூடம் அமைத்து மக்களுக்கு சேவை செய்து வந்தார்.

ஒருமுறை அப்பூதியடிகளின் மூத்த மகனான மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டியது. அவரை தேவாரம் பாடிய திருநாவுக்கரசர் காப்பாற்றியதாக வரலாறு கூறப்படுகிறது. அப்பூதியடிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் சிலைகள் இன்றும் திங்களூர் கோயிலில் காணலாம்.

பெயர்
புராண பெயர்(கள்): திங்களூர்
பெயர்: திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில்

அமைவிடம்

ஊர்: திங்களூர்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: கயிலாசநாதர்
தாயார்: பெரிய நாயகி
தீர்த்தம்: சந்திர புஷ்கரிணி

பாடல்
பாடல் வகை: தேவார வைப்புத்தலம்

வரலாறு
அமைத்தவர்: சோழர்கள்

நவகிரகத் தலங்களுள் சந்திரன் தலம் திங்களூர் ஆகும். தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ.தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.

தல வரலாறு

தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெற வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தார்கள்.

மந்திர மலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது,ஆலகால விஷம் வெளிப்பட்டது.

அசுரர்கள் வாசுகியின் தலைப்பக்கத்திலும் தேவர்கள் வால் பக்கத்திலும் நின்றுகொண்டு இருந்தனர்.தேவர்களைக் காப்பாற்றுவதற்காக இறைவன் அந்த விஷத்தை தானே அருந்தினார்.

ஆனாலும் நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்துவிட்டனர்.அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான்.

அப்பூதி அடிகள்

இத்தலம் அப்பூதி அடிகள் நாயனார் அவதாரத் தலம்.அப்பூதி அடிகள் நாயனார், திருநாவுக்கரசரின் பெயரில் தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்திய தலமிது.

திங்களூரில் அப்பூதி அடிகள் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்து வந்தார்.

ஒருமுறை திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளின் இல்லத்துக்கு வருகை புரிந்தார்.

திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும், என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக் கொண்டார்.

அதற்காகத் தோட்டத்தில் சென்று வாழை இலை பறித்து வருமாறு அப்பூதி அடிகள் சிறுவனான தமது மகனை அனுப்பி வைத்தார்.

ஆனால் வாழைத்தோப்பில் பாம்பு கடித்து சிறுவன் இறந்து விட்டான். தமது துயரத்தைத் திருநாவுக்கரசரிடம் காட்ட விரும்பாத அப்பூதி, பிணத்தைத் துணியால் மூடி வைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு உணவு பரிமாறினார்.

ஆனால் நிலைமையை உணர்ந்துகொண்ட திருநாவுக்கரசர் சிறுவனின் பிணத்தைக் கோவிலுக்கு எடுத்துச் சென்று இறைவன் முன் கிடத்தி இறைவனை மனமுருகப் பாடினார்.

சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் பத்தும் “திருப்பதிகம்” என்றழைக்கப் படுகின்றன.

கோவிலின் சிறப்பம்:

குழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் நிகழ்ச்சி அன்னப்பிரசானம் என்பர். அன்னபிரசன்னம் சடங்கு செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற கோயிலாக கேரள மாநிலம் குருவாயூர் கோயில் இருக்கிறது.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு அன்னப்பிரசானம் சடங்கு செய்வதற்கு மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக இந்த திங்களூர் கைலாசநாதர் கோயில் இருக்கிறது.

அஸ்வினி, மிருகசீரிடம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திர தினங்களிலும், சந்திரஹோரை வேளைகளிலும் இக்கோயிலில் குழந்தைகளுக்கு சந்திரனையும், பசுவையும் காண்பித்து ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் பால், தேன் கலந்து குழந்தைக்கு சோறூட்டும் சடங்கை செய்கின்றனர்.

புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் சந்திரனின் கிரகணங்கள் இறைவன் சிலை மீது விழுமாறு அமைக்கப்பட்டு இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.

மனம் சம்பந்தமான குறைபாடுகள் தீர, குழந்தை பாக்கியம் உண்டாக இங்கு செல்லுங்கள்

இறைவன்: கைலாசநாதர்
இறைவி : பெரியநாயகி
சந்திரன் தென்கிழக்கு திசை நோக்கி இருக்கிறார்.
சந்திரனின் நிறம் : வெண்மை
வச்திரம்: வெள்ளைத்துணி
தான்யம்; நெல்
உணவு: தயிர் சாதம்
மலர்: வெள்ளை அரளி

கோயில் முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் திங்களூர் தஞ்சாவூர் மாவட்டம் – 613204
தொலைபேசி எண் 4362 – 262499

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...