நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்

Date:

Share post:

நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்

பிரதாப் போத்தன் காலமானார்

நடிகர் பிரதாப் போத்தன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பணிபுரிந்துள்ளார்.

பல விருதுகளுக்கு சொந்தக்காரரான பிரதாப் போத்தன் இன்று நம்முடன் இல்லை. அதாவது அவர் உடல்நலக் குறைவால் இன்று 8 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.

அதாவது 70 வயதான அவர் உடல்நலக் குறைவால் இன்று 8 மணி அளவில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் இருந்துள்ளார்.

கடைசியாக பிரதாப் போத்தன் மம்முட்டியின் CBI5 The Brain என்ற படத்தில் நடித்திருந்தார்.

திருமண வாழ்க்கை

நடிகை ராதிகாவை 1985ம் ஆண்டு திருமணம் செய்தார், ஆனால் இருவரும் 1986ம் ஆண்டே பிரிந்தார்கள்.

பின் அமலா சத்யநாத் என்பவரை மறுமணம் செய்த பிரதாப் 2012ம் ஆண்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார்.

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 70. இந்த நிலையில் அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் மார்த்தாண்டன், ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் முதல் முறையாக கமல்ஹாசன் நடித்த வெற்றி விழா திரைப்படத்தில் ஸ்டெடி கேமராவை பயன்படுத்தியவர் பிரதாப் போத்தன்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரதாப் போத்தன் தான் இயக்கிய ‘மீண்டும் ஒரு காதல் கதை’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார். அவருக்கு வயது 69. சென்னையில் உள்ள வீட்டில் அவர் உயிர் பிரிந்தது.

1980களில் ஆரம்பித்து மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார்.

மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றார்.

தமிழில் அவர் அழியாத கோலங்கள், மூடுபனி, இளமைக் கோலம், வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, மதுமலர், குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள்,

சொல்லாதே யாரும் கேட்டால், நெஞ்சில் ஒரு முள், வா இந்த பக்கம், தில்லு முல்லு, ராணி, பனிமலர், அபர்ணா, வாழ்வே மாயம், அம்மா, எச்சில் இரவுகள், ஒரு வாரிசு வருகிறது, சட்டம் சிரிக்கிறது,

நன்றி மீண்டும் வருக, யுத்த காண்டம், புதுமைப் பெண், மீண்டும் ஒரு காதல் கதை, சிந்து பைரவி, மனைவி ரெடி, ஜல்லிக்கட்டு, பேசும் படம், என் ஜீவன் பாடுது, பெண்மணி அவள் கண்மணி, ராம், படிக்காதவன் (தனுஷ்),

ஆயிரத்தில் ஒருவன், சர்வம், அலெக்ஸ் பாண்டியன், பூஜை, ரெமோ, பொன்மகள் வந்தாள், கமலி ஃப்ரம் நடுக்காவேரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் இவர் ரித்துபேதம், டெய்ஸி, ஒரு யாத்ரமொழி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு க்ரீன் ஆப்பிள் என்ற விளம்பர நிறுவனம் இருக்கிறது.

நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...