அண்ணன் “அன்பகம்” கலைக்கு பிறந்தநாள்

Date:

Share post:

அண்ணன் “அன்பகம்” கலைக்கு பிறந்தநாள்

திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தின் பெயரை அடைமொழியாகக் கொண்ட அண்ணன் கலை, பல வருடங்களாக இளைஞரணியின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியவர் என்பதுடன்,

தமிழக முதல்வர் திமுக தலைவர் தளபதி அவர்களின் பயணத்திட்டங்களை திட்டமிடுவது, ஒருங்கிணைப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொண்டு வந்தவர்.

தமிழக முதல்வர் திமுக தலைவர் தளபதி அவர்கள் இளைஞரணி செயலாளராக இருந்தபோது அதன் தலைமையகமான அன்பகத்தில் நடக்கும் அனைத்து விவகாரங்களையும் அண்ணன் கலை தான் கவனித்து கொள்வது வழக்கம்.

அதனாலேயே அவருக்கு அன்பகம் கலை என்று பெயர் பெற்றார்.

தளபதிக்கு பிறகு இளைஞரணி செயலாளராக பதவி ஏற்ற அண்ணன் உதயநிதிக்கும் நம்பிக்கைக்குரியவராக அண்ணன் கலை இருந்து வருகிறார்.

இளைஞரணியில் ஆரம்ப காலத்திலிருந்தே அகிலம் போற்றும் முதல்வர் தளபதி அவர்களின் நிழலாக இருந்த அண்ணன் அன்பகம் கலையை,

கட்சியின் 18, 19 விதிகளின்படி திமுக துணை அமைப்புச் செயலாளராக, பொது செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் நியமித்தார்.

சோதனை காலங்களில் அன்பான கலைநயதோடு திமுகவின் தளபதி கரங்களை உயர்த்தி பிடித்த அண்ணன் அன்பகம் கலை அவர்களின் மகன் டாக்டர் கலை கதிரவன் – சந்தியாபிரசாத் திருமணம் அகிலம் போற்றும் முதல்வர், கழகத் தலைவர் அவர்கள் அறிவாலயத்தில் 20/02/2022 திருமண விழாவை முன்நின்று நடத்தி மணமக்களை வாழ்த்தினார்.

மணவிழாவில் வாழ்த்திய முதல்வர், அண்ணன் கலை அவர்களை பற்றி கூறியதாவது,

“அன்பகம் கலையின் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பகம் கலையைப் பற்றி இங்கு ஒவ்வொருவரும் எடுத்து சொன்னபோது நான் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதே சமயத்தில் நேற்று மாலையில் இதே அரங்கத்தில் அன்பகம் கலையின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

சிறையில் இருந்து கோபாலபுரம் வரை தொடர்ந்து என்னை பின்தொடர்ந்து வந்து முழங்கியவர்தான் அன்பகம் கலை.

அன்றுமுதல் இன்று வரை 47 ஆண்டு காலம் எந்த சூழ்நிலையிலும் நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் எம்.எல்.ஏ.வாக இருந்து இருக்கிறேன்.

மேயராக பதவி வகித்துள்ளேன். கட்சியில் பல பொறுப்புகளில் இருந்துள்ளேன். உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்-அமைச்சராகவும், இப்போது முதல்- அமைச்சராகவும் இருக்கிறேன்.

ஆனால் ஒரு தடவை கூட அன்பகம் கலை என்னிடம் இதை செய்து கொடுங்கள் என்று கேட்டதில்லை. ஏனென்றால் அவரது குணம் அப்படி.”

இவர் திமு கழகம் பல்வேறு சோதனைகளை சந்தித்த கால கட்டங்களில் கழக தலைவர் தளபதி அவர்களின் கரங்களை உயர்த்தி பிடித்த அண்ணன் திரு.அன்பகம் கலை அவர்களின் பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

இவர் மென்மேலும் பொறுப்புகளை வகித்து சிறப்புற கட்சி பணியாற்றிட அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவன்,
சிந்திங்க9நியூஸ்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...