அண்ணாநகரில் வந்தது “ஹாப்பி ஸ்ட்ரீட்

Date:

Share post:

அண்ணாநகரில் வந்தது “ஹாப்பி ஸ்ட்ரீட்

சென்னையில் வந்தது “ஹாப்பி ஸ்ட்ரீட்”, சென்னை மாநகராட்சியின் மாஸ் ஏற்பாடு!

சென்னை: ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி மக்களை பயணிக்க வைக்கும் முயற்சியாக சென்னையில் இன்று ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

அண்ணாநகர்

சென்னயில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடங்களில் ஒன்று அண்ணா நகர். சென்னை நகரின் பிரதான இடமாக விளங்கும் இப்பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் முயற்சியாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை அண்ணா நகரில் நேற்று ‘ஹேப்பி ஸ்ட்ரீட்‘ நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹேப்பி ஸ்ட்ரீட்

இதன்படி அந்த பகுதியில் பஸ், மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

அதாவது ஸ்மார்ட் போன்களில் இல்லாத விளையாட்டுகளான பம்பரம் விடுதல், கோலிக்குண்டு அடித்தல் போன்ற ஜாலியான விளையாட்டுக்களும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

போக்குவரத்து தடை

போக்குவரத்து தடை செய்யப்பட்ட இடங்கள் இதனையொட்டி, அண்ணாநகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, 2-வது நிழற்சாலையில் புளுஸ்டார் சந்திப்பு முதல் 2-வது நிழற்சாலை,

3-வது பிரதான சாலை சந்திப்பு (நல்லி சில்க்ஸ்) வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சி

தொடர்ந்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டு சைக்கிளிங் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உடல் செயல்பாடுகள் என சொல்லப்படும் பிஷிக்கல் ஆக்டிவிட்டிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த துவங்கப்பட்டுள்ள சிறந்த முயற்சி இதுவாகும்.

மக்கள் நடைப்பயிற்சி, சைக்கிளிங், ஜாக்கிங் போன்றவற்றில் மக்கள் ஈடுபடும் வகையில் சென்னை ஈ.சி.ஆர் மற்றும் பெசண்ட் நகர் ஆகிய பகுதிகளில் சில குறிப்பிட்ட இடங்களில் மோட்டார் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மகிழ்ச்சியுடன் நடைப்பயிற்சி, சைக்கிளிங், ஜாக்கிங் போன்றவற்றில் ஈடுபடலாம்.

மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

மிகுந்த உற்சாகம் அளித்தது ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறுகையில், “இது ஒரு மகிழ்ச்சியான தருணம்.

காலையில் எப்போதும் இந்த சாலை மிகவும் பரபரப்பாக இருக்கும். கார், மோட்டார் சைக்கிள், பஸ் என எப்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் இரைச்சல், ஒலி மாசு அதிக அளவில் இருக்கும்.

தற்போது இவை இல்லாமல் அமைதியாக உள்ளது. மக்களின் உடல் இயக்க செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம் போன்றவையும் நடத்தப்படுகின்றன.

ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளும், பேட்மிண்டன், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.

இதில் கலந்து கொண்டது மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடியதாக இருந்தது” என்றனர்.

8 இடங்களில் நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த சுகநாதன் கூறுகையில், ”ஹேப்பி ஸ்ட்ரீட் என்பது ஜாலியாக தெருவில் விளையாடுவதே ஆகும்.

நாம் விரும்பிய விளையாட்டை தெருவில் விளையாடலாம். பேஸ்கட் பால், கிரிக்கெட், டென்னிஸ் என விரும்பிய விளையாட்டை விளையாட முடியும். பம்பரம், கோலிக்காய் என நமக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடலாம்.

மொத்தம் உள்ள 52 ஞாயிற்றுக்கிழமைகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இதில் 5 வாரங்கள் இதே இடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மீதியுள்ள ஒவ்வொரு 5 வாரங்களுக்கு ஒரு இடம் என இதேபோல் மேலும் 8 இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

இதற்காக சென்னையில் உள்ள 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.

சிந்திங்க9நியூஸ்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...