தினம் ஒரு திருக்கோயில்-திருநீர்மலை

Date:

Share post:

தினம் ஒரு திருக்கோயில்-திருநீர்மலை

திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்

வாழ்வில் ஒருமுறையேனும் திருநீர்மலை திவ்விய க்ஷேத்திரத்துக்கு வந்து, நான்கு வித பெருமாளையும் கண்ணாரத் தரிசித்து வேண்டினால், நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

பெருமாளின் கோயில்களில் மிக முக்கியமான கோயில்களும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில்களும் திவ்விய தேசங்கள் என்று போற்றப்படுகின்றன. மொத்தம் 108 திவ்விய தேசங்கள் என்று போற்றி வணங்கி வருகிறோம். அப்படியான அற்புதத் தலங்களில், திருநீர்மலை திருத்தலமும் ஒன்று.

அஷ்ட சயனங்கள்:

பெருமாளின் அஷ்ட சயன திருக்கோலங்கள் அமைந்துள்ள திருத்தலங்கள் உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ர சயனம் என்பார்கள். திருவள்ளூர் திருத்தலத்தில் வீர சயனம் என்று போற்றுவார்கள்.

திருக்கடல் மல்லை என்று புகழப்படும் மாமல்லபுரத்தில், தல சயனம் என்கிறது ஸ்தல புராணம்.

திருக்குடந்தை திருத்தலத்தில் உத்தாயன சயனம் என்றும் திருப்புல்லாணி திருத்தலத்தில் தர்ப்ப சயனம் என்றும் சொல்லுவார்கள்.

வைஷ்ணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீரங்கம் தலத்தைத்தான் சொல்லுவார்கள்.

அத்தகைய பெருமைமிக்க தலத்தில், புஜங்க சயனமாக பெருமாள் திருக்காட்சி தருகிறார்.

திருச்சித்திரக்கூடம் என்று கொண்டாடப்படும் சிதம்பரத்தில், போக சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள்.

எட்டாவதாக திருநீர்மலை திருத்தலத்தில், மாணிக்க சயனக் கோலத்தில் சேவை சாதிக்கிறார் பெருமாள்.

சென்னை பல்லாவரம், பம்மலுக்கு அருகில் உள்ளது திருநீர்மலை திவ்விய க்ஷேத்திரம்.

அரங்கன் குடிகொண்டிருக்கும் இந்தத் தலத்தை, ஸ்வயம் வயக்த க்ஷேத்திரம் என்று சிலாகிக்கிறது ஸ்தல புராணம்.

அதாவது, மனிதர்களால் உண்டுபண்ணாமல் தானே ஏற்பட்ட சிலாமேனி என்று அர்த்தம்.

சைவ திருக்கோயில்களில் சுயம்பு மூர்த்தம் என்று சொல்வது போல், வைஷ்ண தலங்களில், ஸ்வயம் வயக்தம் என்பார்கள்.

இப்படி ஸ்வயம் வயக்த க்ஷேத்திரங்களாக, ஸ்ரீரங்கம் திருத்தலம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், ஸாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி, தோத்தாத்ரி எனப்படும் திருநீர்மலை முதாலான க்ஷேத்திரங்களைச் சொல்லுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

பொதுவாக, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பார் பெருமாள்.

கிடந்த கோலத்தில் சேவை சாதிப்பார். இருந்த கோலத்திலும் நடந்த கோலத்திலுமாகக் காட்சி தருவார். இங்கே திருநீர்மலை திவ்விய திருத்தலத்தில் நான்குவிதமாகவும் திருக்காட்சி தருகிறார் பெருமாள் என்பது இந்தத் தலத்தின் இன்னொரு மகத்துவம்.

கோவில் அமைப்பு:

காண்டவ வனத்தில் தோயாத்ரி மலைவாசல்னு அலங்கார நுழைவு வாசல் உள்ளது. நல்ல அகலமான படிக்கட்டுகள், ஒரே சீரான உயரமுடைய 200 படிகள் உள்ளன.

பாதி தூரத்தில் வலப்பக்கம் பிரியும் இடத்தில் நான்கு படி இறங்கி எட்டிப்பார்த்தால் சிறியதாக ஆஞ்சநேயர் சந்நிதி ஒன்று உள்ளது.

https://cdn.sindinga9news.com/wp-content/uploads/2022/07/20100830/thiruneermalai-03.jpg

இந்த மண்டபம் எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி மற்றும் ‘கல்கி’ சதாசிவம் தம்பதியர் கட்டிய மண்டபம். அவர்களின் திருமணம் இந்தக் கோவிலில் தான் நடந்தது.

உள்ளே நுழைந்தால் வெளிப்பிரகாரத்தில் இடதுபக்கம் ஆதிசேஷனுக்குத் தனிச்சந்நிதி உள்ளது.

வலதுபக்கம் கொடிமரம் கடந்து ஒரு பத்துப் படிக்கட்டுகள் ஏறிப்போனால் படியின் முடிவில் பெரியதிருவடி சிறியதாக நிற்கும் சந்நிதி உள்ளது.

அவருக்கு நேர் எதிரே கருவறையில் ரங்கநாதர் தெற்கு நோக்கி பள்ளிகொண்டுள்ளார்.

கருவறைப் படிக்கட்டின் இரண்டு பக்கமும் பாவை விளக்கேந்தும் பழங்காலப் பெண்டிர் சிலைகள் உள்ளன.

சயன கோல பெருமாள் பெயர்கள்
1. ஜல சயனம் – திருப்பாற்கடல்
2. தல சயனம் – மல்லை
3. புஜங்க சயனம் (சேஷசயனம்) – திருவரங்கம்
4. உத்தியோக / உத்தான சயனம் – திருக்குடந்தை
5. வீர சயனம் – திருஎவ்வுள்ளூர்
6. போக சயனம் – திருச்சித்ரகூடம் (சிதம்பரம்)
7. தர்ப்ப சயனம் – திருப்புல்லாணி
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை) – ஸ்ரீவில்லிபுத்தூர்
9. மாணிக்க சயனம் – திருநீர்மலை.

தனிச்சந்நிதியில் தாயார் ரங்கநாயகி உள்ளார்.

உட்பிரகாரத்தில் பால நரசிம்மர் சந்நிதி உள்ளது.

இவரைச் சாந்த நரசிம்மர் என்றும் சொல்கிறார்கள். ஹிரண்யவதம் முடிந்ததும் கோபம் அடங்காமல் சிலிர்த்த உடலோடு நின்ற சிம்ஹத்தைக் கண்டு ப்ரஹலாதனுக்கு உள்ளூர நடுக்கம் ஏற்பட்டது.

பாலகன் முகத்தில் பயத்தைப் பார்த்ததும் ‘ஐயோ! குழந்தையைப் பயப்பட வச்சுட்டேனே’ என்று இரக்கம் தோன்ற, அவனுக்குச் சமமாக, அவனுக்கேற்ற உருவத்தில் தானும் குழந்தையாக மாறி இரண்டு கைகளுடன் இங்கே வீற்றிருக்கிறார்.

இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார்.

இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரைத் தரிசிக்கலாம்.

சென்னை தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருநீர்மலை உள்ளது. பல்லாவரம் சென்று, அங்கிருந்து திருநீர்மலை வழியாக செல்லும் பஸ்களில் 5 கி.மீ., சென்றால் இக்கோவிலை அடையலாம்.

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோவில்,
திருநீர்மலை – 600 044.
காஞ்சிபுரம் மாவட்டம்.
பேசி: +91-4422385484, 9840595374, 9444020820

பெருமாள் இங்கே சுயம்புவாக தோன்றியார். இது எட்டு சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்றாகும்.

மற்ற ஏழு சுயம்பு க்ஷேத்ரங்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, ஸாளக்ராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி. சுயம்பு மூர்த்தி என்பதால் இங்கே மூலவருக்கு அபிஷேகம் இல்லை.

கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் மட்டும் தைலக்காப்பு உண்டு. சாம்பிராணித் தைலம் மட்டும் பூசப்படுகிறது.

ஸ்ரீநீர்வண்ணப் பெருமாளாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். அதேபோல, ஸ்ரீசாந்த நரசிம்மராக இருந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

மாணிக்க சயனத்தில், ஸ்ரீரங்கநாதராக கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார். த்ரிவிக்கிரம பெருமாளாக நடந்த திருக்கோலத்தில் காட்சி தந்து அருளுகிறார்.

இத்தனை பெருமைகளையும் ஒருங்கே பெற்ற திருத்தலமாக திகழ்கிறது திருநீர்மலை புண்ய க்ஷேத்திரம்.

வாழ்வில் ஒருமுறையேனும் திருநீர்மலை திவ்விய க்ஷேத்திரத்துக்கு வந்து, நான்கு வித பெருமாளையும் கண்ணாரத் தரிசித்து வேண்டினால், நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

திருமண யோகம் விரைவில் கிடைக்கப் பெறலாம். கல்யாணத் தடைகள் மொத்தமும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

வால்மீகி முனிவருக்கும் தொண்டைமான் மன்னருக்கும் இங்கே திருக்காட்சி தந்து வரமருளிய திருத்தலம் எனும் பெருமைமிக்கது திருநீர்மலை.

திருநீர்மலைக்கு வந்தால், திருப்பங்களும் நல்ல மாற்றங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

#தினம் ஒரு திருக்கோயில்-திருநீர்மலை #சுயம்பு பெருமாள் #நான்குவிதமாகவும்திருக்காட்சி #ஸ்வயம் வயக்தம் #பெருமாளின் அஷ்ட சயனங்கள்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...