திமுக இளைஞரணிக்கு பிறந்தநாள்

Date:

Share post:

திமுக இளைஞரணிக்கு பிறந்தநாள்

திமுக இளைஞரணிக்கு பிறந்தநாள்

இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஓர் அரசியல் இயக்கம், தனக்கான இளைஞர் அணியைத் தோற்றுவித்தது என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

கோபாலபுரத்தில் ஒரு முடிதிருத்தம் செய்யும் நிலையத்தில், நம்முடைய மாண்புமிகு. முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் 1968 -ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.’ தான் கழகத்தின் நாற்றங்காலாக விளங்கும் இளைஞர் அணியின் தாய்விதை.

1980-ம் ஆண்டு மதுரை ‘ஜான்சி ராணி பூங்கா’வில் நடைபெற்ற பிரம்மாண்ட மாநாட்டில், தி.மு.க. இளைஞர் அணியை மு.க.ஸ்டாலின் தி.மு.கழகத்தின் தலைவர் முத்தமிழறிஞர் கருணாநிதி அவர்கள் தலைமையில் தொடங்கினார்கள்.

தொடர்ந்து, 1982-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு விழாவில், தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இளைஞர் அணியின் மாநில அமைப்பாளராக முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டார்.

கழகத் தலைவர் அவர்கள், அன்றைய இளைஞர் அணி அமைப்பாளராக தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பயணித்து, தமிழகத்தில் திராவிட சிந்தனைமிக்க இளைஞர்களையும் தொண்டர்களையும் ஒருங்கிணைத்து இளைஞர் அணியையும்-கழகத்தையும் வலுப்படுத்தினார்.

தமிழகம் முழுவதும் தலைவர் அவர்கள் பம்பரமாய் சுற்றிச்சுழன்ற உழைப்பும் பங்களிப்பும் விரைவிலேயே அவரை இளைஞர் அணியின் செயலாளர் எனும் பொறுப்பில் அமர்த்தியது.

திமுக இளைஞரணிக்கு பிறந்தநாள்

தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.கழகத்தின்பால் பற்றும் கொள்கைப்பிடிப்பும் மிக்க இளைஞர்களை மிகச்சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்கும் பணிப்பொறுப்புகளை வழங்கி, இயக்கத்தை வலுப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, மூன்று பத்தாண்டுகள் இளைஞர் அணியின் செயலாளராக கழகத்தின் நோக்கங்களை, செயல் திட்டங்களை நிறைவேற்றுவதில் உற்றத்துணையாக இருந்ததுடன் போராட்டங்களிலும், பேரணிகளிலும், மாநாடுகளிலும் தேர்தல்களிலும் இளைஞர் அணியின் பங்குப் பணியை உறுதிப்படுத்தினார்.

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொடர்ந்து, வெள்ளக்கோவில் திரு.சாமிநாதன் அவர்கள் இளைஞர் அணிச் செயலாளராக சிறப்புற செயல்பட்டார். 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் கழக இளைஞர் அணிச் செயலாளராக திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார்.

திமுக இளைஞரணிக்கு பிறந்தநாள்

திரு.உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் அணியின் செயலாளராக திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பணிப் பொறுப்பை ஏற்றதும், இளைஞர் அணியில் 30 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்ததுடன்,

அதற்கான பணியையும் தொடங்கி, அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார், திரு.உதயநிதி ஸ்டாலின். இளைஞர் அணி தொடங்கப்பட்டு,

இன்றைக்கு மூன்றாம் தலைமுறை இளைஞர்கள் சாரை சாரையாக கழக இளைஞர் அணியில் இணைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் மேன்மைக்காக உழைத்து வருகின்றனர்.

இளைஞர் அணி செயலாளர்

திமுக இளைஞரணிக்கு பிறந்தநாள்

இளைஞர் அணி செயலாளரானதும், உதயநிதி ஸ்டாலினுக்கு கழகத் தலைவர் அளித்த முதல் பணி, இளைஞர் அணியில் தொகுதிக்கு 10 ஆயிரம் என, 30 லட்சம் முழு நேர உறுப்பினர்களைக் கழகத்தில் சேர்க்க வேண்டும் என்பதுதான்.

அந்தப் பணிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களை கழகத்தின் பக்கம் ஈர்த்து வந்தார் கழக இளைஞர் அணி செயலாளர் அவர்கள்.

அதுமட்டுமன்றி, இளைஞர் அணி பொறுப்புகளை பல ஆயிரம் கிளைக் கழகங்கள் வரை உருவாக்கி, இளைஞர் அணியின் எண்ணிக்கை பல்கி பெருக செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் அடிமை அ.தி.மு.க. அரசால் கைவிடப்பட்டிருந்த ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பெரும்பணியை இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மக்களோடு மக்களாகப் பயணித்து, மக்களின் அன்பைப் பெற்ற இளைஞர் அணிச் செயலாளர், 20, நவம்பர், 2020 அன்று

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருக்குவளை இல்லத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரகடனமாக அறிவித்து முதல் ஆளாகத் தொடங்கினார்.

அன்று தொடங்கி, சுமார் 6 மாத காலம் அவர், தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் சென்று கழக வேட்பாளர்கள், கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்ட போதும், தமிழ்நாடு முழுவதும் அவர் மேற்கொண்ட பிரச்சாரம் ஓயவில்லை. தமிழ்நாட்டின் தென்கோடியில் அவர் மேற்கொண்ட பரப்புரை டெல்லி செங்கோட்டை வரை எதிரொலித்தது.

சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ல் கழகம் மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட இளைஞர் அணிச் செயலாளர் அவர்கள் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

18.08.2021 அன்று முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினராக இளைஞர் அணி செயலாளர் அவர்கள் நிகழ்த்திய ‘கன்னிப்பேச்சு’ அனைத்துத் தரப்பின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

திமுக இளைஞரணிக்கு பிறந்தநாள்

‘தி.மு.கழக இளைஞர் அணியில் இணைவோம்!’ தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் -கழகத் தலைவர் அவர்கள் வழியில் தமிழ்நாட்டு மக்களின் மேன்மைக்காக உழைக்கவும், சமூக நீதி-சமதர்மம் கொண்ட சமுதாயத்தை அமைக்கவும் தி.மு.கழக இளைஞர் அணி அயராது உழைத்துக்கொண்டிருக்கிறது.

திமுக இளைஞரணிக்கு பிறந்தநாள்

வாழ்த்தும்,

சிந்திங்க9
சிந்திங்க9நியூஸ்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

#திமுக இளைஞரணி #தொடங்கிய நாள் இன்று #முத்தமிழறிஞர் கலைஞர் #உதயநிதி ஸ்டாலின் #மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...