ராசிபலன்-22-ஜூலை-2022

Date:

Share post:

ராசிபலன்-22-ஜூலை-2022

பஞ்சாங்கம்

22-07-2022, ஆடி 06, வெள்ளிக்கிழமை, நவமி திதி காலை 09.33 வரை பின்பு தேய்பிறை தசமி.

பரணி நட்சத்திரம் மாலை 04.24 வரை பின்பு கிருத்திகை.

நாள் முழுவதும் சித்தயோகம்.

அம்மன் வழிபாடு நல்லது.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00.

ராசிபலன்-22-ஜூலை-2022

மேஷம்

உங்களின் ராசிக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. அனைத்து தேவைகளும் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும்.

நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை உண்டாகும். வீட்டில் பெற்றோருடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிட்டும். வேலையில் புதிய நட்பு கிடைக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு தொழில் ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெளிவட்டார நட்புகளால் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

கடகம்

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

எதிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு நீங்கள் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும்.

அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் பிரச்சினைகள் குறையும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உத்தியோக ரீதியாக மனஉளைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

துலாம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சுபசெலவுகள் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிட்டும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எதிர்பாராத பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும்.

வேலையில் பணிச்சுமை அதிகமாகும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். புதிய வாய்ப்புகள் கிட்டும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.

நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நினைத்த காரியம் நிறைவேறும்.

மீனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும்.  பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

#பஞ்சாங்கம் #ராசிபலன் #ஜோதிடம்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...