ஆண்டாளின் பிறந்தநாளாம் ஆடிப்பூரம்

Date:

Share post:

ஆண்டாளின் பிறந்தநாளாம் ஆடிப்பூரம்

அம்மனின் பிறந்தநாளாம் ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.அம்மன் பிறந்தநாள்

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது.

ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும்.

பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள். ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும்.

சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.

தேவி உலகிற்கு தோன்றிய நாள்

மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர்.

இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் ஆடிப்பூரத்தன்று வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூசை நடைபெறும்.

திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது.

ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நன்னாளில் ஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணம் கைகூடும், அம்பிகையை வணங்கி வளையல் வாங்கிக் கொடுத்தால் திருமணமான பெண்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடிப்பூரம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் எப்படி விரதம் இருந்து அம்பிகையை வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

ஆடி மாதம்

அம்மனின் பிறந்தநாளாம் ஆடிப்பூரம்

ஆடி மாதம் அம்பாளை வழிபாடு செய்வதற்கான உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில்தான் அம்மன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.

அன்றைய தினம், அம்மன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெறுவதோடு, அம்பாளுக்கு வளையல்கள் அணிவிக்கும் நிகழ்வும் நடத்தப்படும்.

இந்த நாளில் பக்தர்கள், பலரும் வளையல்களை வாங்கிச் சென்று, அம்பாள் வழிபாட்டிற்கு கொடுப்பார்கள். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும்.

அன்னைக்கு வளைகாப்பு

அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாகவும் ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

அம்மன் கோவில்களில் பிரசாதமாக கொடுக்கும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால், மனம் போல் மாங்கல்யம் அமையும். ஆடிப்பூரம் நாளில் வேறு என்னென்ன விஷேசங்கள் நடைபெறும் என்று பார்க்கலாம்.

தாய்மை பேறுக்காக தவமிருக்கும் பெண்கள் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவதற்காக வளையல்களை வாங்கிக் கொடுத்து தங்களுக்கும் விரைவில் வளைகாப்பு நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.

வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். ஆடிப்பூரம் நாளில் அம்மன் வளைகாப்புக்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் புத்திரபாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

ஆண்டாளின் பிறந்தநாளாம் ஆடிப்பூரம்

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

#அம்மனின் பிறந்தநாளாம் ஆடிப்பூரம் #மனம் போல் மாங்கல்யம் #புத்திரபாக்கியம் #அன்னைக்கு வளைகாப்பு

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...