தினம் ஒரு திருக்கோயில்-வீரராகவபெருமாள்

Date:

Share post:

தினம் ஒரு திருக்கோயில்-வீரராகவபெருமாள்

 தினம் ஒரு திருக்கோயில்-திருவள்ளூர்

திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது.

கோவில்

இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. இத்திருக்கோயில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும்.

கனகவள்ளி அம்மையார், கனேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுச ஆச்சாரியார், லட்சுமிநரசிம்மர் ஆகியோருக்கு இங்கு தனித்தனியே சிறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியை திருக்கல்யாணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இங்குள்ள கல்வெட்டுகள் பொ.ஊ. 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர்களின் இரண்டாவது பாதியைக் குறிப்பிடுகின்றன.

இக்கோவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என உள்ளூரில் புழக்கத்திலுள்ள புராணக் கதைகள் தெரிவிக்கின்றன. விஷ்ணுவே வீரராகவப்பெருமாளாக இக்கோவிலில் குடிகொண்டுள்ளார்.

இக்கோயிலின் இறைவன் ”வைத்திய வீரராகவர்” என்றும் அழைக்கப்படுகிறார்.

தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இறைவனுக்கு இங்கு சந்தன எண்ணெயால் மட்டும் அபிசேகம் செய்யப்படுகிறது.

தல வரலாறு

 தினம் ஒரு திருக்கோயில்-திருவள்ளூர்

புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இங்கு தவம் செய்து வந்தார்.

தினமும் அதிதிக்கு படைத்த பின்பு உண்ணபவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாக பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார்.

பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர் உண்ட களைப்பு தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார்.

அங்கே பெருமாளாக சயனித்தார். “படுக்க எவ்வுள்” என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று.

ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்கு பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள் தாயாரை மணமுடித்ததாகத் தலவரலாறு.

அதன்பின்னரே பெருமாள் பெயர் மாறிற்று, அதுவரை கிங்கிருஹேசன் எனும் பெயரே பெருமாளுக்கு முக்கிய திருப்பெயராக விளங்கிற்று

தினம் ஒரு திருக்கோயில்-வீரராகவபெருமாள்

வீரராகவப்பெருமாள் கோயில்

கிருத யுகத்தில் புருபுண்யர் என்ற முனிவர் தன் மனைவி சத்யவதியுடன் பத்ரிகாஷ்ரமத்தில் வசித்து வந்தார். அவர்களுக்கு பிள்ளைபேறு இல்லை.

எனவே அந்த முனிவர் பிள்ளைபேறு வேண்டி புத்ரகாமேஷ்டி (சாலி யாகம்) யாகம் மிகவும் பக்தியுடனும் ஈடுபாட்டுடனும் செய்ய தொடங்கினார்.

தினமும் ஒரு நாளைக்கு 1000 முறை என்ற வகையில் ஒவ்வொருமுறைக்கும் மந்திரத்தில் ஓதி நெய் எடுத்து ஹோமகுண்டத்தில் சேர்த்து ஒரு வருட காலத்த்ற்கு யாகம் செய்து முடித்தார்.

யகத்தின் இறுதி நாளன்று யாகம் முடிவு பெரும் சமயத்தில் ஸ்ரீமன் நாராயணன் ஹோம ஜ்வாலையில் தோன்றி முனிவர் செய்த ஹோமத்தில் தான் மனம் மகிழ்ந்ததாகவும் முனிவர் வேண்டுவதை தருவதாகவும் கூறினார்.

முனிவரும் தனக்கு புத்திர பாக்கியம் அளிக்க வேண்டினார். ஸ்ரீமன் நாராயணனும் அவ்வாறே புத்திர பாக்கியம் அளித்து அவ்வாறு பிறக்கும் பிள்ளைக்கு முனிவர் செய்த யாகத்தின் பெயரையே சூட்டி சாலிஹோத்திரன் என்று அழைக்குமாறும் ஆசி வழங்கி மறைந்தார்.

பிறகு முனிவரும் ஹோம பிரசாதங்களை தனது மனைவிக்கு அளித்தார். பத்து மாதங்கள் கழித்து புருபுண்யருக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

ஸ்ரீமன் நாராயணன் உத்தரவுபடி முனிவரும் அந்த குழந்தைக்கு சாலிஹோத்திரன் என்று பெயரிட்டார். சாலிஹோத்திரன் தான் வளர்ந்து வருகையில் பல்வேறு நல் முன்னேற்றங்களுக்கான அறிகுறிகளுடன் விளங்கினார்.

தை அமாவாசை

ஓர் தை அமாவாசை நாளில் சாலிஹோத்ரர் திருவள்ளூர் வந்த போது அங்கிருந்த ஹ்ருத்தாபனாசினி தீர்த்தத்தில் ப்ரம்ஹா உள்ளிட்ட தேவர்களும் வசிஷ்டர் உள்ளிட்ட முனிவர்கள் பலரும் நீராடுவத கண்டார்.

உடனடியாக ஓராண்டு காலத்திற்கு பெருமாளை குறித்து கடும் தவம் மேற்கொண்டார். ஒரு வருடம் கழித்து தவத்தை முடித்து சாலிஹோத்ரர் ஹ்ருத்தாபனாசினியில் நீராடி காலை பூஜைகளை துவங்கினார்.

ஒரு வருடகாலம் உணவும் நீரும் இன்றி தவமேற்கொண்டதால் அரிசி மாவு சிறிது எடுத்து அதில் கொஞ்சம் பிரசாதம் தயார் செய்தார்.

அத மூன்று பாகங்களாக்கி முதல் பகுதியை ஸ்ரீமன் நாராயணனுக்கும், இரண்டவது பகுதியை விநியோகத்திற்கும், மூன்றாவது பகுதியை தனக்கும் வைத்துக்கொண்டார்.

ஹ்ருத்தாபனாசினி

இங்குள்ள திருக்குளம் ஹ்ருத்தாபனாசினி மிகவும் புனிதமானதாகும்.

இத்திருக்குள்த்தை பார்த்தாலோ, தொட்டாலோ, நீராடினாலோ மனதில் உள்ள அணைத்து வேதனைகளும் தீரும் அளவிற்கு புனிதமானதாகும்.

கங்கை, கோதாவரி நதிகளை விட புனிதமாக கருதப்படுகிறது. ஏனைய திருக்குளதின் நடுவில் உள்ள மண்டபத்தில் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

திருவள்ளூர் பல்வேறு முனிவைகள் வாழ்ந்த அடர்ந்த காடாக இருந்தமையால் பிகூஷாரண்யம் என்று புராண காலத்தில் அழைக்கப்பட்டது.

கடந்த 1999 இல் கோபுரங்கள் அணைத்தும் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு கும்பாவிஷேகம் நடைபெற்றது.

இத் திருக்கோயிலின் கோபுரத்தின் சிற்பங்களில் இந்து சமய பண்பாட்டையும் திராவிடர்களின் கலையையும் காண்பது கண் கொள்ளக் காட்சியாகும்.

தினம் ஒரு திருக்கோயில்-வீரராகவபெருமாள்

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

# தினம் ஒரு திருக்கோயில்-வீரராகவபெருமாள் #திருவள்ளூர் #தை_அமாவாசை #ஹ்ருத்தாபனாசினி #சாலிஹோத்ரர்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...