ராசிபலன்-06-ஆகஸ்ட்-2022

Date:

Share post:

ராசிபலன்-06-ஆகஸ்ட்-2022

பஞ்சாங்கம்

06-08-2022, ஆடி 21, சனிக்கிழமை, நவமி திதி பின்இரவு 02.11 வரை பின்பு வளர்பிறை தசமி.

விசாகம் நட்சத்திரம் மாலை 05.51 வரை பின்பு அனுஷம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

ராசிபலன்-06-ஆகஸ்ட்-2022

மேஷம்

உங்களின் ராசிக்கு பகல் 12.06 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் என்பதால் தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும்.

மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வியாபார ரீதியான பயணங்களில் சற்று கவனம் தேவை.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும்.

பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திடீர் என்று வரும் நல்ல செய்தியால் திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும்.

பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத  இடமாற்றம் கிடைக்கப்பெற்று மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.

கடகம்

உங்களின் ராசிக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப்பலன் உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு முடியும் என்று நினைத்த காரியம் பாதியிலேயே தடைபடலாம். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டு என்றாலும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

துலாம்

உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வண்டி வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அமையும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் ரீதியாக அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபம் கிடைக்கும்.

வியாபாரத்தில் ஈடுபடுவோர் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

மகரம்

உங்களின் ராசிக்கு தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் விஷயமாக வெளியூர் நபர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும்.

சொத்து ரீதியான விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளையும் விரயங்களையும் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்

உங்களின் ராசிக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு பகல் 12.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நிதானமாக செயல்பட்டால் தொழிலில் உள்ள சிக்கல்கள் ஓரளவு குறையும்.

ராசிபலன்-06-ஆகஸ்ட்-2022

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

#ராசிபலன்-06-ஆகஸ்ட்-2022 #ஜோதிடம்-06-ஆகஸ்ட்-2022 #பஞ்சாங்கம்-06-ஆகஸ்ட்-2022

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...