அறுகம்புல் பொடியின் மருத்துவ பயன்கள்

Date:

Share post:

அறுகம்புல் பொடியின் மருத்துவ பயன்கள்

மழைக்காலம் என்பதால் அறுகம்புல்லுக்குப் பஞ்சமே இறுக்காது. அதுவும் கிராமப்புறங்களில் சொல்லவே வேண்டாம்.

அந்த அளவிற்கு அதிகமாகவும், எளிமையாகவும் கிடைக்கக்கூடியது. இந்த புல் வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய பல பயன்கள் இருக்கின்றது.

அவை என்ன என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பதிவு கொஞ்சம் பெரிதாக இருந்தாலும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் மலைக்காமல் படிக்கவும்.

பொடியின் பயன்கள்:

அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடிய ஒரு வகை புல் ஆகும்.

இந்த அறுகம்புல்லானது குறுகலான நீண்ட இலைகளை உடையது. நேராக வளரக்கூடிய தண்டுகளையும் கொண்டுள்ளது.

இது வயல் வெளிகளிலும், வரப்புகளிலும், வெட்டவெளி நிலப்பரப்புகளில் வளரக்கூடிய ஒரு புல் வகையாகும்.

இது விதைகளின் மூலமாகவும், சல்லி வேர் முடிச்சுகள் மூலமாகவும் இனவிருத்தி ஆகின்றது.

பொடியின் பயன்கள்:

மாதவிடாய் பிரச்சனைகள்:

தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் அறுகம்புல் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்துக் குடிக்க வேண்டும்.

இதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள், இரத்தப் புற்று நோய், இருமல், வயிற்று வலி, மூட்டு வலி போன்ற நோய்களைக் குணமாக்கும்.

நரம்புத் தளர்ச்சி:

பொடியைத் தண்ணீரில் குடிப்பதன் மூலம் சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றைக் குறைக்கும்.

வாய்வு கோளாறு:

வாய்வு கோளாறு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் அறுகம்புல் ஜூஸ் குடிப்பதன் மூலம் வாயுக் கோளாறு குணமாகும்.

மேலும் இது உடல் உஷ்ணத்தைத் தனித்து உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கும் மற்றும் குடல் புண்களை ஆற்றும்.

புற்றுநோய்:

ஆரம்ப கால புற்றுநோய்க்குக் காலை, மாலை சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன்,

ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியை அரை தேக்கரண்டி வெண்ணெய்யுடன் சாப்பிட, ஆரம்ப புற்றுநோய் சரியாகும்.

இதய நோய்:

ரத்த அடைப்பு, உள்ளவர்கள் வெந்நீரில் அறுகம்புல் பொடியினை சாப்பிடச் சரியாகும்.

வாதம்:

கபத்தைத் தடுக்க அறுகம்புல் பொடி தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். கபம் வாதம் பித்தம் இவை மூன்றையும் சமன் செய்வதற்கு உதவுகிறது.

வாதத்திற்கு அறுகம்புல் பொடி உடன் மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிட வேண்டும். பித்தத்திற்கு அறுகம்புல் பொடியுடன் இஞ்சி சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

கபத்திற்கு அறுகம்புல் பொடி உடன் திப்பிலி பொடியுடன் சாப்பிட வேண்டும்.

சரும பிரச்சனை:

சொறி, சிரங்கு, படை, பூச்சிக்கடி, தேள், பூரான் கடிக்கு, ஐம்பது கிராம் அறுகம்புல், ஐம்பது கிராம் குப்பைமேனி பொடி செய்து கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

காலை, மாலை சாப்பிட்டு வருவதன் மூலமாகச் சரும பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

வெள்ளை வெட்டை:

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை வெட்டைக்கு, ஐம்பது அறுகம்புல் பொடி ஐம்பது கிராம் கடுக்காய் பொடி சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

அதனைத் தினமும் காலை, மாலை, சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன், ஒருடம்ளர் தண்ணீரில், ஒரு தேக்கரண்டி பொடி போட்டு குடித்து வரவும்.

அவ்வாறு குடித்து வருவதன் மூலமாக நாளடைவில் வெள்ளை வெட்டை குணமாகும்.

தீராத சளி இருமல்:

குழந்தைகளுக்குத் தீராத சளி இருமலுக்கு அறுகம்புல் துளசி இரண்டையும் சிறிதளவு சேர்த்து

அதனைச் சிறிது தண்ணீரில் ஊற வைத்து காலையில் குழந்தைகளுக்குக் கொடுக்க சளி, இருமல் தீராத சளி,இருமல் சரியாகும்.

உடல் உஷ்ணம்:

அறுகம்புல் பொடி, கஸ்தூரி மஞ்சள் தூள், பச்சை பயிறு மூன்றும் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

கலந்து வைத்த பொடி கொண்டு குளித்து வருவதன் மூலமாக உடல் உஷ்ணம், சொறி, சிரங்கு, அலர்ஜி, அரிப்பு, அனைத்தும் சரியாகும்.

தேவையற்ற கொழுப்பு:

அறுகம்புல் பொடியைக் காலை மாலை சாப்பிடுவதன் மூலமாக உடலில் உள்ள தேவையற்ற நீர், தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.

கை கால் வீக்கத்திற்கும், அருகம் புல் சாப்பிடச் சரியாகும்.

பசி உணர்வு:

எவ்வளவு சாப்பிட்டாலும் ஒரு சிலருக்குப் பசி உணர்வு அடங்காது. இவர்கள் அதிக அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் அதீத பசி உணர்வினை கட்டுப்படுத்த தினசரி அறுகம்புல் ஜூஸ் அருந்தி வந்தால் போதும்.

எலும்பு உறுதி:

மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் எலும்பின் உறுதிக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று.

இந்த இரண்டும் அறுகம்புல்லில் நிறைந்து காணப்படுகிறது. எனவே அருகம் புல் ஜூஸை காலை குடித்து வருபவர்களுக்கு எலும்பு உறுதியாக இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான மருத்துவ தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

அறுகம்புல் பொடி ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...