கோடீஸ்வரர்களாக மாற்றும் குபேரன் ஆலயங்கள்

Date:

Share post:

குபேரன் ஆலயங்கள்

கோடீஸ்வரர்களாக மாற்றும் குபேரன் ஆலயங்கள்!

குபேரன் என்பவனுக்கு என்று தனிக் கோயில் சென்னை வண்டலூரில் இந்தியாவிலேயே லட்சுமி உள்ளது.

தினமும் காலை 5.30 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் இறைவனை தரிசிக்கலாம்.

குபேரன், சிரித்த முகத்துடன், அன்னை லட்சுமி, துணைவியார் சித்தரிணியுடன் இங்கு காட்சி அளிக்கிறார்.

குபேரன் சன்னதியை அடுத்து லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவ கிரகங்களுக்கு என தனித்தனி பிராகாரங்களும் உள்ளன.

இங்கு ஒரு கோசாலையும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் என்பதால், பசுக்களுக்கு பழங்கள் அளித்தால். குபேரனுக்கு செய்யும் பூஜையாகவே கருதப்படுகிறது.

செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், அதனை காக்கும் குபேரனையும் தீபாவளி திருநாளில் ஒரு சேர தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழிக்கும். அதேபோல திருப்பதிக்கு செல்லும் முன் ரத்னமங்கலம் குபேரன் கோயிலுக்குச் சென்று லட்சுமி குபேரனை வழிபட்டுச் செல்வதும் மிகுந்த விசேஷமாகும்.

தீபாவளி தினத்தன்று குபேர பூஜையை முன்னிட்டு இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. செல்வத்தை அள்ளி வழங்கும் குபேர தலம் குறித்து அறிந்து கொள்வோம்.

மதுரை வைகையாற்றின் வடபுறத்தில் அமைந்துள்ளது திருவாப்புடையார் கோயில். திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலாகவும் திகழ்கிறது. சகல செல்வத்திற்கும் அதிபதியாக வேண்டுமென புண்ணிய சேனன் விரும்பினான். அகத்தியரின் பாதத்தை வணங்கியவனுக்கு திருவாப்புடையாரில் உள்ள ஈசனை நோக்கி தவம் புரியச் சொன்னார்.

அவனின் தவம் பலித்தது. ஆனால் அகங்காரம் பெருகியது. பல தவறுகளை செய்தவனின் ஒரு கண்ணை ஈசன் பறித்தார். மீண்டும் தவம் செய்தான். ஈசனும் அவனை மன்னித்து இன்றிலிருந்து உன் பெயர் குபேரன். நீயே சகல செல்வங்களுக்கும் அதிபதி என்றார். இதுவே குபேரன் உற்பவித்த தலமாகும். நாமும் குபேரன் தோன்றிய தலத்திற்குச் சென்று திருவாப்புடையாரை தரிசித்து வளம் பெறுவோம்.

பெருமாளைக் குறித்து பெருந்தவம் புரிந்தான்

சிறந்த சிவபக்தனான குபேரன் ஒன்பது வகையான நவநிதிகளுக்கும், எண்ணிலடங்கா பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி தனது அழகாபுரியை ஆண்டான். இதனால் கர்வத்தோடு அலைந்தவன் ஒருநாள் கயிலாயத்திற்கு வந்தான். ஈசன் உமையோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். உலகாளும் அன்னையென்று பாராமல் அழகை ரசித்தவனின் மனதை அறிந்த உமையன்னை சினம் கொண்டாள். ‘உன் உருவம் விகாரமடைந்து, உன்னிடமுள்ள நவநிதிகளும் உன்னைவிட்டு விலகும்’ என்று சபித்தாள். குபேரனை விட்டு விலகிய நவநிதிகள், பெருமாளிடம் தஞ்சமடைந்தன. அதனாலேயே அவருக்கு வைத்தமாநிதிப் பெருமாள் எனும் திருநாமம் உண்டாயிற்று.

தன் தவறை உணர்ந்த குபேரன், பரமசிவன் மற்றும் உமையின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினான். பார்வதி தேவியோ, ‘நான் உன்னை சபித்தவாறே உன் மேனியின் விகாரம் மறையாது. ஒரு கண்ணும் தெரியாது. ஆனால், நீ இழந்த பெருஞ் செல்வங்களான நவநிதிகளும் தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள தர்மபிசுன க்ஷேத்ரத்திலுள்ள (இன்றைய திருக்கோளூர்) திருமாலிடம் தஞ்சமடைந்துள்ளன,’ என்றார். திருக்கோளூர் வந்தவன் பெருமாளைக் குறித்து பெருந்தவம் புரிந்தான்.

மனமிரங்கிய திருமால், குபேரனை மன்னித்து நவநிதிகளைத் தந்தருளினார். இன்றும் வறுமையில் வாழ்பவர்களும், செல்வம் இழந்தவர்களும், செல்வங்கள் பெருகவும் வைத்தமாநிதிப் பெருமாளை வணங்கி சகல சம்பந்துமிக்க வாழ்க்கையைப் பெறுகின்றனர். இங்கு தீர்த்தமே குபேர தீர்த்தம்தான்.

நூற்றியெட்டு திவ்ய தேசத்தில் இதுவொன்றாகும். இத்தலம் நெல்லைக்கு அருகே உள்ளது.
அருணாசல மலையை கிரிவலமாக வரும்போது குபேர லிங்கத்தை தரிசிக்கலாம். இங்கு இது ஏழாவது லிங்கமாக விளங்குகிறது.

இது குபேரனால் வழிபடப்பட்ட லிங்கமாகும். எனவே, பொருளாதாரத்தில் குன்றி இருப்போர் இந்த லிங்கத்தை வழிபட செல்வ வளம் பெருகும்.

பொதுவாக ஆலயங்களில் குபேரனின் உருவம் சிற்பமாகவோ, சுதை வடிவிலோ, கல் திருமேனியாகவோ காணப்படுவது வழக்கம். ஆனால் இங்கே, கல் தூண்கள், தேவகோட்டம், கோபுர முகப்பு என மொத்தம் 12 ராசிகளுக்காக குபேரன் சிற்ப வடிவில் காட்சி தருகிறார்.

12 ராசியினருக்கு அருள் பாலிக்கும் குபேரனை வணங்கி, செல்வச் செழிப்பு பெறலாம். வேண்டுதல் நிறைவேறியதும், குறிப்பிட்ட குபேரனுக்கு ‘குபேர ஹோமம்’ நடத்துவது ஐதீகம்.

12 குபேரர்கள் தவிர, மகா குபேரனின் சிற்பமொன்றும் ஆலய கோபுரத்தின் உட்புறம் வடக்குத் திசையில் உள்ளது. திருச்சி, துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

சந்திரகுப்தன் எனும் வைசியன் தன்னிடமிருந்த சகல செல்வங்களையும் இழந்தான். மனம் நொந்து திசை தேசம் தெரியாது ஈசனருளால், கீவளூர் தலத்தை அடைந்து, நந்தியெம்பெருமானின் காலடியில் வீழ்ந்தான்.

கோயிலை வலம் வந்தவனை, ஈசன் கருணைக் கண்களால் கண்டார்.

இத்தலத்திலேயே நித்திய வாசம் புரியும் குபேரனை, வைசியனுக்கு அடையாளம் காட்டினார்.

குபேர பட்டத்தை பெற்றான்

தனிச் சந்நதியில் அருளும் குபேரனை வணங்கி வைசியன் பெருஞ் செல்வம் பெற்றான். இத்தலம் நாகப்பட்டிணம் – திருவாரூர் பாதையில் அமைந்துள்ளது.

ராவணன் குபேரனோடு போரிட்டு குபேரனுடைய நிதிக் கலசங்களை எடுத்துச் சென்றான். இதனால் குபேரன் தன்னுடைய குபேர ஸ்தானத்தை இழந்தான்.

தேவபுரீஸ்வரரை குபேரன் செந்தாமரை புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டான்.

ஈசனின் அருளால் ராவணனிடமிருந்து குபேர கலசங்களை திரும்ப பெற்று மீண்டும் குபேர பட்டத்தை பெற்றான்.

பெரும் பணக்காரர்களாக இருந்து மீண்டும் வறுமையில் தள்ளப்பட்டோர்கள் இத்தல நாயகரான தேவபுரீஸ்வரரையும், அம்மையான மதுரபாஷினியையும் வழிபட, செல்வச் செழிப்போடு வாழ்வர் என்பது உறுதி.

திருவாரூர் – நாகப்பட்டிணம் சாலையிலுள்ள கீவளூர் எனும் தலத்திற்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.

இத்தலத்தின் பூமிக்கடியில் சிவபெருமான் இருப்பதாக ஐதீகம். எனவேதான் திருஞானசம்பந்தர் இத்தலத்தை அங்கப் பிரதட்சணமாக சுற்றிச் சென்றார். குபேரன் வழிபட்டு பேறு பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.

கும்பகோணம் – திருவாரூர் பாதையிலுள்ள சாக்கோட்டையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

 

மாசிலாமணீஸ்வரர் கோவிலை பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/en/2022/08/10/temple-a-day-maasilamaneeswarar/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...