சென்னை வானிலை செய்தி

Date:

Share post:

சென்னை வானிலை செய்தி

சென்னை வானிலை செய்தி

சென்னை:

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் நாளை (நவம்பர் 4) ம் தேதி ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை குறிப்பாக கடந்த மாதம் 30ம் தேதியில் இருந்து சென்னை மற்றும் சென்னையின் புறநகரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இந்த ஆண்டு சென்னையில் கால்வாய் புனரமைப்பு பணி நடந்த நிலையில் பெரும்பலான இடங்களில் மழைநீர் தானாகவே வடிந்தது. இருப்பினும் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. 

இதையடுத்து மாநகராட்சி சார்பில் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அக்டோபர் 29ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வருகிறது.

இயல்பை விட அதிகம் இந்த நிலையில் நேற்று மாலை வரை மழை பெரும்பகுதிகளில் மழை பெய்தது. இதனால் டூவீலர்களில் நிறுவனங்களில் சென்று வருபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக இந்த மழை பல சாதனைகளை செய்தது. நவம்பர் 2ம் தேதி நிலவரப்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு அதிக மழை பதிவானது.

மேலும் சென்னைக்கு நவம்பர் மாதம் பெய்ய வேண்டிய மொத்த மழை என்பது 350 மில்லி மீட்டராகும். ஆனால் கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் 300 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.

இதனால் இந்த மாதம் வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மாலையில் கொட்டிய கனமழை இந்த நிலையில் இன்று காலை முதல் மாலை வரை சென்னையில் பல இடங்களில் மழை பெய்யவில்லை. சூரியன் மெல்ல எட்டிப்பார்த்தது. இந்நிலையில் தான் மாலையில் மீண்டும் கனமழை பெய்யத்தொடங்கியது.

மாலை 5 மணி முதல் பல இடங்களில் மழை பெய்தது. சென்னை ராயப்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம், அயனாவரம், கேகேநகர், வடபழனி, அண்ணாசாலை, பள்ளிக்கரணை, ஈசிஆர் ரோடு உள்பட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

பள்ளி

கல்லூரிகளுக்கு விடுமுறை இந்த கனமழை இன்று இரவு பல இடங்களில் நீடிக்கும். நாளையும் பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 4ம் தேதியான நாளை ஒருநாள் மட்டும் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி அறிவிப்பு செய்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் வெறும் 10 நிமிடங்களில் 21 மி.மீ. மழை பெய்ததாக சென்னை ரெயின்ஸ் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

சென்னையில் கடந்த 31 ஆம் தேதி மாலை முதல் நேற்று வரை கனமழை கொட்டி தீர்த்தது. அதாவது 300 மி.மீ. மழை பெய்துள்ளது.

சென்னை வானிலை செய்தி நவம்பர் மாதம் பெய்ய வேண்டிய மழையின் அளவு 350 மி.மீ. ஆனால் இரு தினங்களில் 300 மி.மீ. மழை பெய்துள்ளது.

சென்னையில் இத்தனை மழை பெய்ததால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

கொளத்தூர் கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நீர் வடிகாலில் பெண் ஒருவர் தவறிவிழுந்தார். நல்வாய்ப்பாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர்.

அது போல் சென்னையில் சில இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது, சில இடங்களில் மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்படும் காட்சிகளும் உள்ளது.

முருகன் வழிபாட்டின் நோக்கும் போக்கும் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/en/2022/11/02/5187/

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...