அஷ்டபந்தனம் என்றால் என்ன?

Date:

Share post:

அஷ்டபந்தனம் என்றால் என்ன?

அஷ்டபந்தனம்

ஆலயங்களில் நடைபெறும் மிகப் பெரிய நிகழ்ச்சி குடமுழுக்கு எனப்படும் கும்பாபிஷேகமேயாகும். இது அநாவர்த்தம், ஆவர்த்தனம், புனராவர்த்தனம், அந்தரிதம் என நான்கு வகைப்படும்.

கோயில்கள் இல்லாத இடத்தில் புதியதாக ஆலயம் அமைத்து குடமுழுக்கு செய்வது அநாவர்த்தனம் என்றும், கோயில் இருந்து கால ஓட்டத்தில் மண்மேடாகி காடு அடர்ந்த இடங்களில் இருக்கும் பழைய கோயிலைப் புதுப்பித்து பொலிவு பெறச்செய்வது ஆவர்த்தம் என்றும், நடைமுறையில் அன்பர்களால் வழிபடப்பட்டு பூசைகள் நடைபெறும் கோயிலில் செய்யப்படுவது புனராவர்த்தனம் என்றும் அழைக்கப்படும்.

கோயிலுக்குள் மக்கள் இறந்துபோதல், உயிர்கள் கொல்லப்படுதல், பன்றி, குரங்கு, நாய், கழுதை போன்றவை புகுந்து சேதப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளால் உண்டாகும் குற்றம் நீங்கச் செய்யப்படுவது அந்தரிதம் எனப்படும்.

இந்த நான்கிலும் குடமுழுக்கு விழாவின் முதன்மை அங்கமாக இருப்பது பந்தன மருந்திடுதல் எனப்படும் மருந்து சாத்துதலாகும்.

 

அஷ்டபந்தனம்

 

இந்த பந்தனமருந்து எட்டுப்பொருட்களை இடித்துச் சேர்த்து கலந்து செய்யப்படுவதால் `அஷ்டபந்தன’ மருந்து என்னும் பெயர் பெற்றது.

இதற்கு அஷ்டபந்தனம் என்பதே பெயராகும் என்றாலும், மக்கள் பேச்சு வழக்கில் இதனை மருந்து என்று அழைக்கின்றனர்.

பந்தனம் என்பது இணைப்பதைக் குறிக்கிறது. எட்டுப் பொருட்களின் கலவையாக இருப்பதால் இது அஷ்டபந்தனம் எனப்படுகிறது.

இது பீடத்தையும், சிலையையும் உறுதியாக இணைப்பதால் அஷ்டபந்தனம் எனப்பட்டது. குடமுழுக்குவிழா அழைப்பிதழில் இந்த அஷ்டபந்தனத்திற்கு மதிப்பளித்து அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் என்றே பொறிப்பது வழக்கம்.

குடமுழுக்கு நாளுக்கு முந்தைய இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்படும்.

அஷ்டபந்தனம் அணிவிப்பது முக்கிய மந்திர நிகழ்வுகளில் ஒன்றாக இருப்பதால், அதற்கான அஷ்டபந்தன மருந்தை இடித்து இளகச்செய்யும் பணியைத் தூய்மையான இடத்தில் செய்ய வேண்டும்.

நல்ல நேரத்தை நிர்ணயம் செய்து கொண்டு கோயிலின் முற்றத்தில் இடத்தைப் பெருக்கித் துடைத்து மந்திரநீர் தெளித்து மந்திரப் பூர்வமாகவும், செயல் பூர்வமாகவும் தூய்மை செய்ய வேண்டும்.

இதில் தேவைக்கு ஏற்ப மரத்தாலான உரல்கள் உலக்கைகளை வைத்து பின்னர் சிவாச்சாரியாரைக்கொண்டு உரல், உலக்கை ஆகியவற்றையும் மருந்தை ஏந்திச் செல்லும் தட்டையும் உரிய மந்திரங்களால் பூஜை செய்ய வேண்டும்.

பின்னர் மருந்து உருண்டைகளை உரலிலிட்டு எருமை வெண்ணெயைச் சேர்த்து நன்கு இடிக்க வேண்டும். பெண்களுக்கு முக்கியம் அளிக்கும் வகையில் பெண்களைக்கொண்டு மருந்துகளை இடிப்பர்.

இந்த மருந்து இடிக்கும் பணி செய்வதால் நல்ல மணவாழ்வும் குழந்தைப்பேறும் கிடைக்கும் என்பதால், பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொள்கின்றனர். ஒரே உரலில் இரண்டு உலக்கைகளைக் கொண்டு மாறிமாறி இடிப்பதால் வேலை எளிதில் முடியும் என்பதால் அம்முறை கையாளப்படுகிறது.

பொதுவாக அஷ்டபந்தனம் அணிவிப்பதே சிறந்ததாகும். என்றாலும், அன்பர்கள் தங்களுக்குள்ள வசதி வாய்ப்புகள் ஏற்ப மெல்லிய வெள்ளி தங்கத் தகடுகளில் கொடி பூவேலைகளைச் செய்து அஷ்ட பந்தனத்தின் மீது பதிக்கின்றனர்.

வெள்ளியை பதிப்பது அஷ்டபந்தன ரஜிதபந்தம் என்றும், தங்கத்தைப் பதிப்பது அஷ்டபந்தன சுவர்ணபந்தனம் என்றும் அழைக்கப்படும்.

(சிலர் வெள்ளியை உருக்கி ஊற்றவேண்டும் என்பர். அது சரியானதல்ல. அஷ்ட பந்தனம் இன்றி செய்யப்படும் வெள்ளி பந்தனத்தால் பயனில்லை என்பதே பலரது கருத்தாகும்.) அஷ்டபந்தனம் செய்வதால் மந்திரப் பூர்வமாக நிலைப்படுத்தப்படும். இறைசக்தி அந்ததெய்வச் சிலை வடிவில் நீங்காது இருக்கும் என்பது நம்பிக்கையாகும்.

 

இடம் பெறும் பொருட்கள்

இனி, அஷ்டபந்தனத்தில் இடம் பெறும் பொருட்களையும், அவற்றை கலந்து மருந்து தயாரிக்கும் முறைகளையும் சிந்திக்கலாம்.அஷ்டபந்தனத்தில் இடம்பெறும் எட்டுபொருட்கள்
1. கொம்பரக்கு, 2. சுக்காங்கல், 3. குங்கிலியம், 4. நற்காலி, 5. செம்பஞ்சு, 6. ஜாதிலிங்கம், 7. தேன்மெழுகு, 8. எருமை வெண்ணெய் என்பனவாகும்.இதில் பரக்கு என்பது ஒருவகை மரத்தின் பிசின்.

இது சிவப்பாக இருக்கும். பட்டையுடன் இருப்பதே உயர்ந்ததாகும். இந்த பொருளே மற்ற பொருட்களை ஒன்றாக இணைத்துப் பிடிக்கும் அடிப்படை ஒட்டுப்பொருளாகும். எனவே இதை வாங்கும் போது தரமானதாகவும், உயர்ந்ததாகவும் வாங்க வேண்டும்.

எட்டாவதான பொருள், எருமை வெண்ணெயாகும். இதில் பசும்பாலில் இருப்பதை விட கொழுப்பு குறைவு. அத்துடன் நீர்ச் சத்தும் குறைவாக இருக்கும். நீர்ச்சத்தையும் அகற்றியே பயன்படுத்த வேண்டும்.

புதிய மண் சட்டியில் இட்டுவைத்தால் சட்டி வெண்ணெயில் உள்ள ஈரப் பதத்தையும், நீர்ச்சத்தையும் இரண்டொரு நாளில் இழுத்துக் கொள்ளும். இதற்காக பெரிய பானையைக் கவிழ்த்து அதன் மேற்பரப்பில் வெண்ணெயை அதில் தட்டி வைப்பர். இதனால் வெண்ணெயில் இருந்து நீர்ப்பகுதி விரைவில் இழுத்துக் கொள்ளும்.

முதலில் மேலே சொன்னவற்றில் அரக்கு, நற்காவி, சுக்காங்கல், குங்கிலியம், ஜாதிலிங்கம் ஆகியவற்றை தூளாக்கி தூசு தும்பு நீக்கி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உரல் குழியிலும், உலக்கையிலும் வெண்ணெயைப் பூசிக் கொண்டு ஒன்றையடுத்து ஒன்று ஒவ்வொரு பொருளாக இட்டு இடிக்க வேண்டும். இவை திரண்டு, களிமண் போல் ஆகும்.

அதை உருண்டையாக்கி சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதில் பொருளின் தூய்மை, சேர்மான அளவு, இடிக்கும் காலம் ஆகியவை முக்கியமானதாகும்.

அஷ்டபந்தனத்தைக் குறித்த பாடல் ஒன்று, அதிலுள்ள பொருட்களைப் பட்டியலிட்டுக் கூறுவதை பார்ப்போம்;

கொம்பரக்கு சுக்கான்தூள்
குங்கிலியம் நற்காவி
செம்பஞ்சு சாதிலிங்கம்
தேன்மெழுகு – தம்பழுது
நீக்கிஎருமை வெண்ணெய்
கூட்டி நன்கிடித்து
ஆக்கல் அட்டபந்தனம் ஆம்.

என்பதாகும்.

அடைமழை கால ஆபத்தை பற்றி தெரிந்து கொள்ள

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...