ஆகமங்கள் காட்டும் ஐயப்பன்

Date:

Share post:

ஆகமங்கள் காட்டும் ஐயப்பன்

ஆகமங்கள் காட்டும் ஐயப்பன்

ஏழாம் நூற்றாண்டில் சாஸ்தா

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அற்புதமான தமிழ்ப்பாடல்களைத் தேவாரம் எனும் பெயரில் தந்த அப்பர் சுவாமிகள், தாம் பாடிய பாடலில் ‘சாத்தனை’ மகனாய் வைத்தார் என சாஸ்தாவைக் குறிப்பிடுகிறார்.

சாஸ்தா பிரதிஷ்டா விதி

மலைகளில் பிரதிஷ்டை செய்யப்படும் சாஸ்தாவைப் பதினாறு திருக்கரங்கள் கொண்டவராகவும், காட்டில் பிரதிஷ்டை செய்யப்படும் சாஸ்தாவை பத்து திருக்கரங்கள் கொண்டவராகவும், நகரங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் சாஸ்தாவை எட்டு திருக்கரங்கள் கொண்டவராகவும், கிராமங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் சாஸ்தாவை இரண்டு திருக்கரங்கள் கொண்டவராகவும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என ‘சிவாகமம்’ கூறுகிறது.

அம்சுமத் பேதாகமம் சொல்லும் அழகன்

வெண்மையான திருமேனி, மூன்று கண்கள், அமைதியான தோற்றம், வெண்பட்டாடை உடுத்தி பத்மபீடத்தில் அமர்ந்து இருப்பவர்; அபய-வரத திருக்கரங்கள், ஒரு கையில் கத்தி, ஒரு கையில் கேடயம் என நான்கு விதமான திருக்கரங்களைக் கொண்டவர் என்று அம்சுமத் பேதாகமம் எனும் ஆகமநூல் கூறுகிறது.

பூர்வ காரண ஆகமம்

நீல நிறச்சடை, தூக்கி மடக்கிய இடது காலின் மீது இடதுகை, வலதுகால் கீழே தொங்கும் நிலையில், வளைதடி – வச்சிராயுதம் ஏந்திய திருக்கரங்கள், யானை வாகனம் – யானைக் கொடி, நீலவண்ணக் குதிரை, வெண்மையான காளை ஆகியவற்றையும் வாகனமாகக் கொண்டவர். நான்கு திருக்கரங்களுடன் வீர ஆசனத்திலும், யோக ஆசனத்திலும் வீற்றிருக்கும் படியான ஞானி எனப் பூர்வ காரண ஆகமம் விவரிக்கிறது.

கச்சியப்பர் துதிக்கும் சாஸ்தா

12-ம் நூற்றாண்டில் கச்சியப்பர் எழுதிய கந்தபுராணத்தில், ‘மகா சாத்தாப் படலம்’ என ஒரு படலமே அமைந்துள்ளது. சாஸ்தாவைப்பற்றி விரிவான தகவல்கள் அடங்கிய பகுதி அது.

சாஸ்தாவின் வாகனம்?

சாஸ்தாவின் வாகனம் யானை! பூரணைக்கு இறைவா ஓலம், புஷ்கலை கணவா ஓலம், வாரணத்து இறைமேல் கொண்டு வரும்பிரான் ஓலம் என்றாள் என இந்திராணியின் அபயத் துதியாகக் கந்தபுராணம் கூறுகிறது. வாரணத்து இறை – யானை மீது அமர்ந்து வருபவர். சாஸ்தாவின் வாகனம் யானை; ஐயப்பனின் வாகனம் புலி. ராமர், கண்ணனாக வந்ததைப்போல, சாஸ்தா, ஐயப்பனாக வந்தார்.

கை விடான் சேரி

சாஸ்தா தன் வீரரான மகாகாளனைக் கொண்டு இந்திராணியைக் காத்த இடமான சீகாழி (தற்போது சீர்காழி) தென்பாதித் தெருவில் இன்றும் சாஸ்தாவின் பிரசித்தமான கோவில் உள்ளது. இந்திராணியைக் கைவிடாமல் சாஸ்தா காப்பாற்றிய இடமானதால் ‘கை விடான் சேரி’ என அழைக்கப்பட்டது. தற்போது ‘கை விளாஞ்சேரி’ என அழைக்கப்படுகிறது.

அஞ்சன சாஸ்தா

ஞான ஆரண்யத்தின் ஒரு பகுதியில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்துவந்தார் அத்திரி முனிவர். கணவரின் கைங்கரியங்களுக்கு எல்லாம் உடன் இருந்து உதவி வந்தாள் அனசூயை. அந்த ஆசிரமம் அமைந்த இடம், இன்று ‘ஆசிராமம்’ என்ற பெயரில் சிற்றூராக உள்ளது.

இந்த ஊர் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கே அத்திரி முனிவர் சாஸ்தாவை வேண்டி யாகம் செய்த ஹோம குண்டம், இப்போது திருக்குளமாக அமைந்துள்ளது.

இந்தக் குளத்தில் 48-நாட்கள் நீராடினால் தீராத நோய்கள் எல்லாம் தீர்கின்றன என்பது அனுபவபூர்வமான உண்மை. இங்குள்ள சாஸ்தாவின் திருநாமம் ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’.

இரண்டு கண்களையும் இழந்த அடியவர் ஒருவர், இங்கே நாள்தோறும் சாஸ்தாவை வழிபட்டு வந்தார்.

ஒருநாள், அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவர் கண்களில் யாரோ மை தடவுவதைப் போல உணர்ந்தார்.

உறக்கம் கலைந்தது. திடுக்கிட்டு விழித்த பக்தர் திகைத்தார்; வியந்தார். அவரின் இரண்டு கண்களும் நன்றாகத் தெரிந்தன.

அதாவது, பார்வை பெற்றுவிட்டார். தன்னை மறந்து கைகளைக் கூப்பியபடிக் கண்களில் கண்ணீர் வழிய, ‘‘அஞ்சனம் எழுதியது கண்டேன் சாஸ்தா!’’ என்று கூவினார். தன் சொத்து முழுவதையும் சுவாமிக்கே எழுதிவைத்தார்.

அவர் பரம்பரையினர் இன்றும் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.

ஸ்லீப் ஆப்னியா பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/11/12/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...