தாய்மை வரம் தரும் தண்டுக்கீரை!

Date:

Share post:

தாய்மை வரம் தரும் தண்டுக்கீரை

தாய்மை வரம் தரும் தண்டுக்கீரை

கீரைகள் ஒவ்வொன்றுமே நம் உடலின் பிணி அகற்றி, உள்ளுயிரை வளர்க்கும் அற்புத கற்பகதருக்கள் என்பதை அறிந்திருந்தனர் நம் முன்னோர். அதனால்தான் வேலிகள் முதல் விடுபட்ட நிலங்கள் வரை கீரைகள் வளர்த்து உடலைப் பேணினார்கள். நம் சித்தர்கள் கீரைகளின் மேன்மையைப் பாடிக்கொண்டே இருந்தார்கள்.

 

தண்டுக்கீரை

இன்றைய தலைமுறையினருக்குக் கீரையின் அருமை தெரியவில்லை. நம் உடல் காத்து, உயிர் காக்கும் இன்றியமையாத கீரையின் பெருமைகளைத் தெரிந்துகொள்வது, நமக்கு நல்லது.

அப்படியான கீரைகளில் ஒன்றுதான் தண்டுக்கீரை, தண்டங்கீரை, கீரைத்தண்டு என்றெல்லாம் விதவிதமாக அழைக்கப்படக்கூடிய கீரை.

தண்டுக்கீரை எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு கீரை வகையாகும். இதில் வெண்கீரைத் தண்டு, செங்கீரைத் தண்டு என்று இருவகையுண்டு. இதன் தண்டு, இலைகள் உணவாகப்
பயன்படுகின்றன.இது குளிர்ச்சி தன்மையுடையதால் சளி, இருமல் இருக்கும்போது இதை தவிர்ப்பது நல்லது. தண்டுக்கீரையை பொரியலாக அல்லது பாசிப்பருப்புடன் சேர்த்து வேகவைத்து கூட்டாகவும் சமைத்து சாப்பிடலாம். இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இளமையுடன் இருக்கலாம்.

 

பயன்கள்

இதில், உடலுக்குத் தேவையான கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. இதன் விதைகளிலிருந்துத் தயாரிக்கப்படும் அலிகிரியா என்ற பிரபலமான இனிப்பை, மெக்சிகோவில் உண்கின்றனர். இதை ஸ்பெயினில் மகிழ்ச்சிக்குரிய இனிப்பாக உண்டு மகிழ்கின்றனர். புகழ்பெற்ற ஜான் மில்டன் தன்னுடைய ‘பேரடைஸ் லாஸ்ட் ‘நூலில், ‘தண்டுக் கீரை (Amaranthus) சொர்க்கத்தில் இருந்து ஏதேன் தோட்டத்துக்கு மனிதனை மகிழ்விக்க கொண்டு வரப்பட்டது‘ என்று கூறுகிறார்.

நூறு கிராம் தண்டுக்கீரையில் 45 கலோரி ஆற்றல், கார்போஹைட்ரேட் – 11 கிராம், புரதம் – 7 கிராம், (புரதங்களில் குறிப்பாக டிரிப்டோபென், சிஸ்டீன், டைரோசின், லைசின், ஆர்ஜினின், குளுட்டத்தியோன் நிறைந்துள்ளன), கால்சியம்-750 மி.கி, இரும்புச்சத்து – 17 மி.கி, பாஸ்பரஸ்-165 மி.கி, வைட்டமின்கள் ஏ,தயமின், ரிபோஃபிளேவின், நிக்கோடினிக் அமிலம், போலிக் அமிலம், தாமிரச்சத்து ஆகியவை உள்ளன.

வெண்கீரைத் தண்டைச் சாப்பிட்டுவர, உடல் வெப்பம், மூல நோய், ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும். உடலில் நோய் அணுகாதவாறு பாதுகாக்கும்.
செங்கீரைத்தண்டு வெப்ப நோய்களை நீக்கி, குறிப்பாக பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (அதிக ரத்தப்போக்கு), நோயைப் போக்கும். இக்கீரைகளின் குணங்களை அகத்தியர் தன்னுடைய பொருட்பண்பு நூலில் இவ்வாறு கூறுகிறார்;

‘‘வெண்கீரைத்தண்டு வியாதியற்ற நற்கறியாங்
கண்காணா தோடிவிடுங் காந்தமெல்லாங்- கண்காணும்
மூலமதற் கேட்கும் முசியா எரிவகற்றுந்
தாலமதில் அக்குணத்தைச் சாற்று” (அ.கு)


மேலும் இன்னொரு பாடலில்
‘‘செங்கீரைத் தண்டதுதான் தீராத பித்தத்தைப்
தாங்காமல் ஓட்டிவிடுந் தையலர்க்கு-பொங்கும்
பெரும்பாட்டை நீக்கும் பெரிய கறியாந்
தரும்பாட்டு வெப்பகற்றுந் தான்” (அ.கு).

என்கிறார்.

நலன்கள்

மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப் போக்கு உள்ள பெண்களுக்கு செங்கீரைத் தண்டுச் சாற்றுடன், வாழைப்பூச் சாறு சம அளவில் 30 மி.லி வீதம் காலை, மாலை கொடுத்து வந்தால் ரத்தப்போக்கு நிற்பதுடன், உடல் சோர்வையும் நீக்கும்.

செங்கீரைத் தண்டில் தைராய்டு சுரப்பியை ஒழுங்காகச் செயல்பட வைக்கும் தைரோசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது நாம் உண்ணும் உணவில் உள்ள அயோடின் உடன் சேர்ந்து தைராக்ஸின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

ஆகவே, குறை தைராய்டு நோய் உள்ளவர்கள் இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

செங்கீரைத்தண்டில் குளுட்டத்தியோன் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் அமிலம் இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் தோலுக்கு நல்ல வனப்பையும், வசீகரத்தையும் தந்து, நல்ல நிறத்தைத் தரும்.

இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், தோலில் உள்ள சுருக்கங்கள், வறட்சி நீங்கி, தோல் பளபளப்பாக மாறும்.

மூலநோய் உள்ளவர்கள் தண்டுக் கீரையுடன், சின்ன வெங்காயம், சீரகம், மிளகு சேர்த்து பொரியலாக சாப்பிட்டுவந்தால், நாட்பட்ட மலச்சிக்கல் நீங்கி, மூலநோய் குணமாகும்.

 

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...