சட்டங்கள் அறிவாய் பெண்ணே!

Date:

Share post:

சட்டங்கள் அறிவாய் பெண்ணே!

சட்டங்கள்

இந்தியாவில், இந்திய குடியுரிமை பெற்ற திருமணமான தம்பதிகளுக்கு வாடகைத் தாய் முறை அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், உதவி இனப்பெருக்க தொழில் நுட்பச் சட்டத்தின் (ART) அடிப்படையில் அனைத்து திருமணமான தம்பதிகள், லிவ்-இன் பார்ட்னர்கள், திருமணமாகாத பெண்கள், சிங்கிள் அம்மாக்கள், வெளிநாட்டினருக்கும் வாடகைத்தாய் முறை வசதியுள்ளது.

நமது நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, வாடகைத் தாய்க்கு 1000க்கும் குறைவான கிளினிக்குகள் உள்ளன.

அதே சமயம், ARTக்கு 40,000க்கும் அதிகமான மருத்துவ மையங்கள் உள்ளன. இந்தியாவில் மருத்துவ சுற்றுலாவின் ஆதாரமாக ART மாறியுள்ளது. இந்த சேவையை வழங்கும் கிளினிக்குகளின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் கேமட் நன்கொடை, செயற்கை கருவூட்டல், இன்-விட்ரோ கருத்தரித்தல், இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் விந்தணு ஊசி மற்றும் மரபணு சோதனை அனைத்தும் கிடைக்கின்றன.

நம் சமூகத்தில் இன்று இருக்கும் பாலின சார்புக்கு இணங்க, இந்த சட்டங்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக திருமணமான ஆணும் பெண்ணும் இந்த முறையின் மூலம் குழந்தையைப் பெற அனுமதிக்கிறது.

இதனால் பைனரி அல்லாத மற்றும் ஒரே பாலின தம்பதிகள் இந்த சட்டத்தை பயன்படுத்த முடியாது. நவ்தேன் சிங், யுனியன் ஆஜப் இந்தியா, 2018ம் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என்று அறிவித்தாலும், ஓரினச்சேர்க்கை தம்பதிகள் இந்த சட்டத்தின் வரம்பிற்குள் வரமாட்டார்கள். அவர்களுக்கு இது பொருந்தாது.

 

LGBTQ

இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளின் கீழ் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுள்ள சமூகத்தில் சமத்துவத்தை மேம்படுத்துவதில் LGBTQ சமூகம் முக்கியமானது என்பதை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும்.

பேபி மஞ்சியமடா வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா (2008) வழக்கில் குழந்தைகள் பெறமுடியாத பெற்றோர்களுக்கு வாடகைத்தாய் முறையினை உச்ச நீதிமன்றம்  அங்கீகரித்தது.

இந்த வகை வாடகைத்தாய் முறை 2002ம் ஆண்டு இந்தியாவில் சட்டப் பூர்வமாக்கப்பட்டது. இருப்பினும், இந்த செயல்முறையை வணிகமயமாக்குவதற்கான சட்டங்களும் நிர்வாக அமைப்புகளும் இல்லாததால் மோசமான மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலைக்கு வழிவகுத்தது.

2009ம் ஆண்டு இந்திய சட்டம் இதனை உணர்ந்து, மக்களின் நலன்களுக்காக அரசாங்கம் அதற்கான விதிமுறைகளை கொண்டு வந்தது. 228வது அறிக்கையில், இந்தியக் குடும்பத்தில் மனைவியால் குழந்தை பெற முடிந்தால் மட்டுமே மதிக்கப்படுகிறாள் என்பதை சுட்டிக்காட்டியது.

இதனால் இந்தியாவில் நிலவும் ஏழ்மை, வாடகைத் தாய்களை மலிவாக்கியது. இது பல்வேறு நிலைகளில் அவர்களுக்கு பாதிப்பினை வழிவகுத்தது.

வாடகைத் தாயின் சேவைகள் சந்தைப்படுத்தப்படும்போதுதான் அது வணிகமயமாக்கப்படுகிறது. இதன் மூலம் மருத்துவக் கட்டணங்கள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் கூடுதலான பணம் ஆகியவற்றைப் பெறுகிறார்.

இதனை மனதில் கொண்டு வாடகைத் தாய் முறையைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றாலும், அதைத் தடை செய்வது தீர்வாகாது. அரசாங்கம் சட்டங்களை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் முயற்சிக்க வேண்டும்.

இதை வணிகமயமாக்குவதில் உள்ள மற்றொரு சிக்கல் என்னவென்றால், இங்கு வாடகைத் தாய் ஒப்பந்தத்தில் கருத்தில் கொள்ளப்படும் பொருள் ஒருவரின் வாழ்க்கை.

எனவே, பெற்றோர் மற்றும் வாடகைத்தாயிற்கு இடையே எழுதப்படும் ஒப்பந்தம் இருவருக்கும் பாதகம் ஏற்படாத வகையில் விதிகள் எழுதப்பட வேண்டும்.

இதன் மூலம் ஒரு பெண்ணால் ஒரு முறை மட்டுமே வாடகைத்தாயாக இருக்க முடியும். அவரை வணிக ரீதியாக வருமான ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது.

அனைத்து உரிமம் பெற்ற வாடகைத் தாய் கிளினிக்குகள் மற்றும் இணையத்தில் பதிவு செய்தால், அந்த பெண்ணால் அவள் வாழ்நாளில் ஒரு முறைக்கு மேல் வாடகைத் தாயாகச் செயல்படுவதை தடுக்க முடியும்.

இஸ்ரேல், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வணிக வாடகைத் தாய்மைக்கான கட்டுக்ேகாப்பான சட்டங்கள் உள்ளன. இவை மாநில அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.

வணிக வாடகைத் தாய் முறையை சட்டப்பூர்வமாக்குவது, வாடகைத் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதிப்பு ஏற்படாமலும் இதனை சந்தைமயமாக்குவதை குறைக்க உதவும்.

வணிக வாடகைத் தாய் முறை சட்டப்பூர்வமாக்கப்பட்டால், நிதி ரீதியாக பின்தங்கியவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டைக் காட்டிலும் சட்டவிரோத வாடகைத் தாய்மை முறையினை தடுக்க உதவுகிறது.

இந்தியாவில் வாடகைத்தாய் என்பது ஒரு சிக்கலான பணி. நடைமுறையைத் தொடங்குவதற்கு முன்பே பல சட்டக் கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு வாடகைத் தாய் ஒரு சிறந்த வழி என்றாலும், அது மக்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

 

10 மாதங்களில் 55 லிட்டர் தாய்ப்பால் தானம் பற்றி தெரிந்து கொள்ள

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...