10 மாதங்களில் 55 லிட்டர் தாய்ப்பால் தானம்!

Date:

Share post:

10 மாதங்களில் 55 லிட்டர் தாய்ப்பால் தானம்!

10 மாதங்களில்

 

சிந்து மோனிகா

சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிந்துகோயம்புத்தூரைச் சேர்ந்தவர் சிந்து மோனிகா. பொறியியல் பட்டதாரியான இவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இவரின் அசாத்திய செயலால் தற்போது சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

‘‘நான் ஐ.டி துறையில் வேலை ெசய்வதால், குழந்தைக்கு நினைத்த நேரம் தாய்ப்பால் கொடுக்க முடியாது. அதனால் அதனை பம்ப் செய்து பாட்டிலில் அடைத்து வைத்திடுவேன். அப்படித்தான் நான் என் குழந்தைக்கு தாய்ப்பாலினை தவறாமல் கொடுத்து வந்தேன்.

குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம் என்பதில் நான் ெராம்பவே கவனமாக இருந்தேன். ஆனால் என் குழந்தை குடித்தது போக… எனக்கு அதிகப்படியான பால் சுரந்தது. அவை வீணாகிறது என்று என் குழந்தைக்கு அதிகப்படியாக புகட்ட முடியாது, என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் வீணாக கீழே கொட்டிவிடுவேன்.

ஒவ்வொரு முறை கீழே கொட்டும் போது மனம் பதைபதைக்கும். அப்போதுதான் அந்த நினைவு என் கண் முன்னே தோன்றியது. எனக்கு குழந்தை பிறந்த போது முதல் ஆறு நாட்கள் என்னால் என் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் போனது. அந்த நாட்கள் நான் மட்டுமில்லை, என் குழந்தையும் தாய்ப்பால் இல்லாமல் கொஞ்சம் கஷ்டப்பட்டாள்.

அந்த வலி என்ன என்று எனக்கு தெரியும். என்னைப்போல் பல தாய்மார்கள் அந்த வலியினை ஒவ்வொரு பிரசவத்தின் போது அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் என்னால் முடிந்த உதவியினை செய்ய விரும்பினேன். அவ்வாறு தவிக்கும் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்க நினைத்தேன்.

 

தாய்ப்பால் தானம்

வீணாக போகும் தாய்ப்பால்… வேறு குழந்தைக்காவது கிடைக்கட்டுமே என்று நினைத்தேன். எனக்கு குழந்தை பிறந்த 99 நாட்களிலேயே தாய்ப்பால் தானம் குறித்து தெரிய வந்தது.

தாய்ப்பால் தானம் 10 மாதங்களில் கொடுப்பதற்காகவே ‘அமிர்தம்’ என்ற அமைப்பு இயங்குவது குறித்து கேள்விப்பட்டேன். அவர்களை அணுகினேன்.

100 நாளில் இருந்தே என் தாய்ப்பாலினை தானமாக கொடுக்க ஆரம்பித்து விட்டேன்.

இப்போது 10 மாதங்களில் சுமார் 55 லிட்டர் தாய்ப்பாலை கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக கொடுத்து இருக்கிறேன்.

அது 1500 பச்சிளம் குழந்தைகளை சென்றடைந்திருக்கிறது என்று நினைக்கும் போது எதையோ சாதித்து விட்டோம் என்று மனநிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது’’ என்கிறார் சிந்து.

இவருடைய இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், ஆசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இரண்டுமே சான்றிதழ்கள் மற்றும் மெடல்கள் வழங்கியுள்ளன.

 

அமிர்தம் அமைப்பின் நிறுவனர் ரூபா

‘‘அமிர்தம் அமைப்பின் நிறுவனர் ரூபா தான் எனக்கு எல்லா விவரங்களையும் சொல்லிக் கொடுத்தார். குறிப்பாக தாய்ப்பாலை எப்படி சேமிக்க வேண்டும் என்ற விவரங்களையும் சொல்லிக் கொடுத்தார்.

அவரின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு மாத இறுதியிலும் அமைப்பினை சேர்ந்த தொண்டர்கள் வந்து நான் சேமித்து வைத்திருக்கும் தாய்ப்பாலை வாங்கிக்கொண்டு போவார்கள்.

என்னுடைய இந்த செயலுக்கு என் கணவர், மாமியார் மற்றும் என் பெற்றோர் அனைவரும் ஆதரவு அளித்தனர்.

அவர்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவம் என்ன என்று புரிந்ததால்தான் என்னுடைய இந்த செயலுக்கு முழு ஆதரவு கொடுத்தனர்.

நான் மட்டுமில்லாமல் இதன் முக்கியத்துவத்தை என் உறவினர்களிடமும் வலியுறுத்துவேன்.

 

தாய்ப்பால்

பொதுவாக ரத்த தானம் எல்லாரும், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தாய்ப்பாலை அப்படி எல்லாம் தானம் கொடுக்க முடியாது.

பிரசவித்த மற்றும் பாலூட்டும் தாய்மார்களால் மட்டும்தான் அந்த தானத்தை செய்ய முடியும்.

அவ்வாறு செய்யும் தாய்மார்களுக்கு கொஞ்சம் பரந்த மனம் வேண்டும்.

பலர் தாய்ப்பால் தானம் கொடுப்பதால் தங்களின் குழந்தைக்கு போதிய தாய்ப்பால் இல்லாமல் போகும் என்ற தவறான மூட நம்பிக்கைகளில் இருக்கிறார்கள்.

அந்த குழப்பம் நீங்க ஒவ்வொரு பாலூட்டும் தாய்மார்களும் தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்று பாருங்கள்.

அங்கு பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் எமர்ஜென்சி வார்டுக்கு சென்றால், ஆபரேஷன் செய்த நிலையில் அம்மா ஒரு புறம் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க, குழந்தைக்கு வேறொரு இடத்தில் சிகிச்சை அளித்துக்கொண்டு இருப்பார்கள்.

அந்த குழந்தையை சுற்றி பல உறவினர்கள் இருந்தாலுமே, யாரும் அந்த குழந்தையை தொட்டுக்கூட பார்க்க முடியாத நிலை. கண்ணாடிப் பேழையில் இருக்கும் குழந்தையை  தூரத்தில் இருந்துதான் பார்க்க முடியும்.

குறை மாதத்தில் பிறந்த குழந்தையாக இருக்கும் இந்த குழந்தைகளுக்கு ஆரோக்கியமே தாய்ப்பால்.

அது அவர்களின் ஊட்டச்சத்தினை அதிகரிக்க ரொம்பவே உதவியாய் இருக்கும். பொதுவாக அம்மாக்கள் சந்தோஷமான சூழ்நிலையில் இருக்கும் போது தான் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

 

குழந்தைகளுக்கான ரத்த அழுத்தம் , தீர்வு பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/11/24/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...