மழைக்கு இதமான ரச வகைகள்!

Date:

Share post:

மழைக்கு இதமான ரச வகைகள்!

மழைக்கு

இனி வரும் காலம் மழை மற்றும் பனிக்காலம்தான். இந்த காலத்தில் நம்மை கவனமாக பார்த்துக்கொள்வது அவசியம். அதனாலேயே நம் வீட்டில் தினமும் ரசம் வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். மிளகு, சீரகம், பெருங்காயம், பூண்டு தட்டிப் போட்டு வைக்கும் இந்த ரசம் ஜீரண சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் மழைக் காலத்தில் சளி பிடிக்காமல் இருக்கவும் உதவும். பொதுவாக நம் வீட்டில் மிளகு, தக்காளி மற்றும் கொள்ளு ரசம்தான் அதிகமாக செய்வது வழக்கம். ரசத்தில் பல வகை இருப்பதால், அதனை தோழியருக்காக வழங்கியுள்ளார் சமையல் கலை நிபுணர் மீனாட்சி.

மழைக்கு இதமான நெல்லிக்காய் ரசம்

தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் – 5 (அ) 4,
அல்லது அரை நெல்லிக்காய் – 25,
இஞ்சி – சிறு துண்டு,
தக்காளி – 1,
பெருங்காய தூள் – ½ ஸ்பூன்,
மிளகு,
சீரகத் தூள் – 2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லி – சிறிதளவு அரிந்தது.

செய்முறை:

நெல்லிக்காயை கொட்டை நீக்கி, 1 டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி வைக்கவும். அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்பு மிளகு, சீரகத்தூள் சேர்த்து, நெய்யில் சீரகம் தாளித்து இறக்கவும். சுவையான நெல்லிக்காய் ரசம் தயார்.

கற்பூரவள்ளி ரசம்

தேவையானவை:

கற்பூரவள்ளி இலை – 10,
கறிவேப்பிலை – 2 கொத்து,
தக்காளி – 1,
புளி கரைசல் – ½ கப்,
உப்பு,
மஞ்சள் தூள் தேவைக்கு,
மிளகு,
சீரகத் தூள் – 2 ஸ்பூன்,

தாளிக்க:

நெய் – 1 ஸ்பூன்,
ஓமம் – ¼ ஸ்பூன்.

செய்முறை:

கற்பூரவள்ளி, கறிவேப்பிலையை கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி வைக்கவும். பின்பு பாத்திரத்தில் பொடியாக அரிந்த தக்காளி, புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள், வடிகட்டிய கற்பூர வள்ளி சாறு, ஒரு டம்பளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு மிளகு, சீரகப் பொடி சேர்த்து, நெய், ஓமம் தாளித்து கொட்டவும். சுவையான ரசம் தயார்.

பூண்டு பருப்பு ரசம்

தேவையானவை:

உரித்த பூண்டு – 50 கிராம்,
தக்காளி – 2,
புளிகரைசல் – ½ கப்,
வேகவைத்த பாசிப்பருப்பு – 1 குழி கரண்டி,
பெருங்காயம் – 1 ஸ்பூன்,
உப்பு,
மஞ்சள் தூள் – தேவைக்கு,
கொத்தமல்லி – சிறிது,

தாளிக்க:

நெய் – 1 ஸ்பூன்,
கடுகு,
சீரகம்,
மிளகுத் தூள்.

செய்முறை:

உரித்த பூண்டுடன் தக்காளி அரைத்து, புளி கரைசல், தக்காளி பூண்டு அரைத்த விழுது சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து பூண்டு வேகும் வரை கொதிக்க விட்டு, பின்பு அதில் 1 குழி கரண்டி வேக வைத்த பாசிப் பருப்பு சேர்த்து, கடுகு தாளித்து, கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான பூண்டு ரசம் தயார்.

மழைக்கு இதமான எலுமிச்சை ரசம்

தேவையானவை:

எலுமிச்சம் பழம் – 2,
வேகவைத்த துவரம் பருப்பு – 2 குழி கரண்டி,
இஞ்சி – 1 ஸ்பூன்,
கீரிய பச்சைமிளகாய் – 2,
கொத்தமல்லி – ½ கப்,
தக்காளி – 2,
மஞ்சள் தூள்,
உப்பு – தேவைக்கு,
மிளகு,
சீரகத் தூள் – 2 ஸ்பூன்,

தாளிக்க:

நெய்,
கடுகு,
சீரகம் – 1 ஸ்பூன்.

செய்முறை:

பாத்திரத்தில் பொடியாக அரிந்த தக்காளி, கொத்தமல்லி, துருவிய இஞ்சி, கீரிய பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள் தூள், இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும். பின்பு அதில் வேகவைத்து மசித்த பருப்பை கலந்து மிளகு, சீரகம் சேர்த்து, தேவைப்பட்டால் 1 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். இதில் எலுமிச்சை பழத்திற்கு பதிலாக ஆரஞ்சு (அ) நார்த்தங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.

வேப்பம் பூ ரசம்

தேவையானவை:

காய்ந்த வேப்பம் பூ – 6 ஸ்பூன்,
புளி தண்ணீர் – 4 டம்ளர், (புளி நெல்லிக்காய் அளவு),
காய்ந்த மிளகாய் – 2,
சீரகம் – 1 ஸ்பூன்,
நெய் – 2 ஸ்பூன்,
பெருங்காயம் ½ ஸ்பூன்,
உப்பு,
மஞ்சள் தூள் – தேவைக்கு.

செய்முறை:

புளி தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். வாணலியில் நெய் விட்டு சீரகம், கிள்ளிய காய்ந்த மிளகாய், வேப்பம் பூ சேர்த்து நன்கு வறுக்கவும். இதனை கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கி விடவும். சுவையான வேப்பம் பூ ரசம் தயார்.

மழைக்கு இதமான மூலிகை ரசம்

தேவையானவை:

வெற்றிலை – 2,
துளசி இலை – 15,
புதினா இலை – 15,
கறிவேப்பிலை – 15 இலை,
பூண்டு – 10 பல்(தோலுடன்),
மிளகு,
சீரகம் – 1 ஸ்பூன்,
ஓமம் – ½ ஸ்பூன்,
புளி – சிறு எலுமிச்சை அளவு,
தக்காளி – 1,

தாளிக்க:

நெய் – 2 ஸ்பூன்,
சீரகம்,
கடுகு – 1 ஸ்பூன்,
சுவைக்கு – உப்பு,
மஞ்சள் தூள்,
பெருங்காயம் – ½ ஸ்பூன்.

செய்முறை:

புளியை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். மிக்ஸி ஜாரில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும், ஊறவைத்த புளியுடன் அரைத்து, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். பின்பு நெய்யில் கடுகு, சீரகம், தாளிக்கவும். சுவையான மூலிகை ரசம் தயார். குளிர் காலத்திற்கு மிகவும் சிறந்தது.


பைனாப்பிள் ரசம்

தேவையானவை:

பைனாப்பிள் துண்டுகள் – 2 கப்,
தக்காளி – 2,
கீரிய பச்சைமிளகாய் – 2,
கொத்தமல்லி,
கறிவேப்பிலை – ½ கப் (பொடியாக அரிந்தது),
உப்பு,
மஞ்சள் தூள்,
பெருங்காயம் – தேவைக்கு,
மிளகு,
சீரக தூள் – 2 ஸ்பூன்,

தாளிக்க:

நெய் – 2 ஸ்பூன்,
கடுகு – ½ ஸ்பூன்.

செய்முறை:

மிக்ஸியில் பைனாப்பிள், தக்காளி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த விழுதுடன் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கீரிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின்பு நெய்யில் கடுகு தாளித்து கொட்டவும். சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.

திடீர் ரசம்

தேவையானவை:

புளி – 1  எலுமிச்சை அளவு,
உப்பு, பெருங்காயம்,
மஞ்சள் தூள்,
காய்ந்த மிளகாய் – 4,
கறிவேப்பிலை – 2 கொத்து,
தாளிக்க – சீரகம்,
எண்ணெய்.

செய்முறை:

புளியை ஊறவைத்து 3 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். கரைசலில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து புளி வாசனை போகும் அளவு கொதிக்க விடவும். சிறிய வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து சேர்க்கவும். திடீர் ரசம் தயார்.

கிராமத்து ரசம்  

தேவையானவை:

புளி – 1 எலுமிச்சை அளவு,
மிளகு – 1 ஸ்பூன்,
சீரகம் – 2 ஸ்பூன்,
தனியா – 1 ஸ்பூன்,
பூண்டு – 10 பல்,
கறிவேப்பிலை – 2 கொத்து,
காய்ந்த மிளகாய் – 4,
உப்பு,
மஞ்சள் தூள் தேவைக்கு.

செய்முறை:

மிக்ஸியில் புளி தவிர மற்ற பொருட்களை கரகரப்பாய் அரைத்துக் கொள்ளவும். புளியை 4 டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். இத்துடன் அரைத்த விழுது சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்பு கடுகு தாளித்து எடுக்கவும்.

மோர் ரசம்

தேவையானவை:

புளித்த மோர் – 4 டம்ளர்,
இஞ்சி – 1 துண்டு,
மிளகு,
சீரகத் தூள் – 2 ஸ்பூன்,
உப்பு,
பெருங்காயம்,
மஞ்சள் தூள் – தேவைக்கு,
கடுகு – ½ ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – 1 கொத்து,
எண்ணெய் – 2 ஸ்பூன் தாளிக்க.

செய்முறை:  

மோரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து நுரைக்க சூடு பண்ணி இறக்கவும். சிறிய வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், இஞ்சி துறுவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து அதில் சேர்க்கவும். சுவையான மோர் ரசம் தயார்

 

மண்ணீரல் குறைபாடு பற்றி தெரிந்து கொள்ள

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...