சிலநாள் சைவம் உண்டு… சிலநாள் அசைவம் உண்டு!

Date:

Share post:

சிலநாள் சைவம் உண்டு… சிலநாள் அசைவம் உண்டு!

சிலநாள் சைவம்

காதலையே சிலநாள் சைவம் அசைவம்னு பிரிச்சுப் பார்த்தவுங்க நம்ம கவிஞர்கள்.  உணவை மட்டும் விட்டுடுவோமா என்ன? நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை சைவம் அசைவம்னு பிரிச்சுப் பார்க்கும் பழக்கம் பல காலங்களாகவே தொன்றுதொட்டு தொடர்ந்துகிட்டேதான் இருக்கு. நான் வெஜிடேரியனுங்கோ என சைவ உணவங்களை தேடிச் செல்பவர்களுக்கு மட்டுமான சேதிதாங்க இனி வரப்போகிற மேட்டர்ஸ்.அசைவ உணவுப் பிரியர்கள் சைவ உணவை உண்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

சாலட்

சைவம்தானே என நினைத்து நாம் பெரிதும் விரும்பி உண்ணும் வெஜிடபிள் சாலட்டில் காய்கறிகள் மட்டும்தானே இருக்குனு கண்ணை மூடி ரசித்து.. ருசித்து.. சுவைத்து சாப்பிடுகிறீர்களா? ருசிக்காக அதில் இணைக்கும் சாஸில் முட்டை சேர்க்கப்பட்டுள்ளது. அட நான் சாப்பிடுற சாஸ்ல முட்டையா?! சான்ஸே இல்லைன்னு வாதம் பண்ணாதீங்க. எல்லாவிதமான சாஸும் முட்டை கலந்துதாங்க தயாராகுது.

சூப்

கடையில் வாங்கிக் குடிக்கும் சூப்புக்கு மட்டும் எப்படி மனமும்.. சுவையும் தூக்கலா இருக்குன்னு நாக்கை சப்புக் கொட்டி மழை நேரத்தில் சிலாகிக்கிறீங்களா? அட, ஆமாங்க. சூப்பில் கலந்திருக்கும் சாஸில் சுவை மற்றும் மணத்திற்காக மீனில் இருந்து தயாராகும் சுவையூட்டிகள் கலந்திருக்கு.

சீஸ்

தோசையில் இருந்து 2K கிட்ஸ் விரும்பி உண்ணும் பீட்ஸா வரை சீஸ் சேர்த்து தயாராகும் உணவே இப்ப இல்லை என்கிற அளவுக்கு சீஸ் வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. இந்த சீஸில் விலங்குகளின் குடல்களில் இருந்து எடுக்கப்பட்ட என்சைம்ஸ் என்கிற நொதி கலந்திருக்கு.

நாண் எனப்படுகிற ரப்பர் ரொட்டி



சூடு போச்சுன்னா இது ரப்பர்தாங்க. விரலோடு இழுத்துக்கிட்டே வரும். வட இந்தியாவில் இருந்து நகர்ந்து தென்னிந்திய பொடிசுகளை குறிவைத்து வயிற்றை அடைத்துக்கொள்ளும் உணவுதான் நாண். நாண் சாப்பிடுகிற ‘நான்’ சைவம்தாங்க. அதிலென்ன அசைவம் இருக்கப் போகுது என ரொம்ப யோசிக்காதீங்க? இறுதி வரை பசைத் தன்மையோடு இருப்பதற்காக நாணில் முட்டை அதிகமாக சேர்க்கப்படுகிறது.

ஜெல்லி

ஜெல்லிய பார்த்ததுமே மனச பசக்குன்னு பறிகொடுக்குறீங்களா? அதன் கலர்ஃபுல் தோற்றமும், நொளுநொளுன்னு கவர்ச்சி காட்டுற ஜெல்லி குழந்தைகளின் ஃபேவரைட். அதுவும் குழந்தைகள் ஜெல்லிய பார்த்துட்டா வாங்கித்தராமல் அந்த இடத்தைவிட்டு நம்மால் நகரவே முடியாதுதான். குழந்தைகள் பெயரைச் சொல்லி நாமலும்தானே ஜெல்லிக்கு ஜெர்காகுறோம். ஆனால் ஜெல்லி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளான ஜெலட்டின் பவுடர் முற்றிலுமாக விலங்கின் கொழுப்பில் இருந்தே தயாராகிறது.

வெள்ளை சர்க்கரை

என்னடா கொடுமை இது. சுகர் என வெள்ளைக்காரன் பாணியில் செல்லமாக அழைக்கப்படும் சர்க்கரை இல்லாத ஸ்வீட்டே இல்லையே. அந்த சர்க்கரையில என்ன அசைவம் இருக்கப்போகுது என நினைக்கிறீங்களா? கரும்பில் இருந்து தயாராகி சுத்திகரிக்கப்படும் சர்க்கரையில் விலங்குகளின் எலும்பில் இருந்து தயாராகும் நேச்சுரல் கார்பன் இணைக்கப்படுகிறது. விலங்குகளின் கருகிய எலும்பே இந்த கார்பன்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

அட, என் சிப்ஸூ! என வடிவேலு பாணியில் சொல்லத் தோணுதா? கரகர மொறுமொறுவென பார்த்ததுமே மனதை டெம்ட் ஆக்குகிற, கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உருளைக் கிழங்கு சிப்ஸ் அசைவ உணவுதாங்க. இதில் சுவைக்காக சேர்க்கப்படும் சிலவகை ஃபிளேவர்ஸ் சிக்கன் கொழுப்பில் தயாராகிறது.

குளிர்பானங்கள்

சிலவகை குளிர்பானங்களில் வைட்டமின்-டி அதிகம் உள்ளது என நினைத்து வாங்கிப் பருகுவோம். இதில் செம்மறி ஆடுகளில் இருந்து பெறப்பட்ட லிமோனின் சேர்க்கப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய்

இதயத்திற்கு நல்லதென விளம்பரம் செய்யப்படும் சமையல் எண்ணெய்களில் ஒமேக-3 உள்ளதென லேபிளில் போடப்பட்டிருக்கும்.  ஒமேகா-3 மீன்களில் இருந்து பெறப்பட்டே எண்ணெயில் தயாராகி இணைக்கப்படுகிறது.

பீர் மற்றும் ஒயின்

உலகின் மிக விலை உயர்ந்த பீர் மற்றும்  ஒயின் தயாரிப்பில் அதனை தெளிவுபடுத்த மீன்பசை கூழ் அல்லது மீனின் நீர்பை பயன்படுத்தப்படுகிறது.உணவுப் பொருள் பாக்கெட்டை பிரித்து சாப்பிடுவதற்கு முன்பு பாக்கெட்டில் என்ன எழுதியிருக்குன்னு தெளிவா படிச்சு பார்த்துட்டு, நீங்கள் உண்ணப்போகும் உணவு சைவமா அசைவமா என முடிவெடுங்க.

சிலநாள் சைவம் உண்டு… சிலநாள் அசைவம் உண்டு!

 

கணையப் புற்றுநோய் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/12/01/%e0%ae%95%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d/

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...