வாழ்க்கை+வங்கி=வளம்!

Date:

Share post:

வாழ்க்கை+வங்கி=வளம்!

 

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இதுதான் வாழ்க்கை என்று புலம்புபவர்களுக்கு தொடர்ந்து முயற்சி செய்தால் எவரெஸ்ட்டையும் எட்டிவிடலாம் என்பதை விளக்கமாகச் சொல்லவேண்டியுள்ளது.

வாழ்க்கை

வாழ்க்கை என்னும் போராட்டத்தில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க உடனே உதவும் அட்சயப் பாத்திரம் வங்கியின் தங்கநகைக் கடன்திட்டம். ஒருவரின் கடன் மதிப்பெண் (Credit Score) குறைவாக இருந்தால் தனிநபர்கடன் திட்டத்தின் மூலம் (Personal Loan) கடன் பெறமுடியாது.

ஆனால் தங்கநகையை அடமானமாக வைத்துக் கடன் பெறமுடியும்.

தங்க நகைக்கடன்

இது மிகவும் பாதுகாப்பான கடன் திட்டமாகும். வங்கியில் எந்த நகையை அடகு வைத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும், நகையின் எடை எவ்வளவு இருக்கவேண்டும். கடன்பெற என்னென்ன ஆவணங்கள் தேவை.

இன்னொருவருக்கு உரிமையுள்ள நகைகளை அடகுவைத்து மற்றவர் கடன் பெறமுடியுமா என்று பல கேள்விகள் உள்ளன.

தங்கநகைக் கடன்பெற அதற்கென்று வடிவமைக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வங்கியிடம் வழங்கவேண்டும்.

கடன் பெற முனைபவரின் பெயர், வயது, தந்தை / கணவரின் பெயர், முகவரி, தொழில் விவரம், வருமானம், நிலுவையில் உள்ள பிற கடன் விவரங்கள் ஆகியவற்றை விண்ணப்பத்தில் எழுதியபிறகு எவ்வளவு தொகை கடனாக வேண்டும் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

விண்ணப்பத்துடன் தனிநபர் அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று, புகைப்படம் ஆகியவற்றை இணைத்து வங்கியிடம் வழங்கவேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களான ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிம அட்டை, கடவுச்சீட்டு (Passport), ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, அரசுத்துறை வழங்கும் அடையாள அட்டை, ஓய்வூதியதாரர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை கையொப்பமிட்டு வங்கியிடம் வழங்கவேண்டும்.

இது கடன்பெறும் நபரின் வாழ்க்கை அடையாளச் சான்றாகும்.

முகவரிச் சான்றாக மின் அல்லது தொலைபேசிக் கட்டண ரசீது, எரிவாயு இணைப்புச் சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை வழங்கலாம்.

வழங்கும்போது அசல் ஆவணத்தையும் வங்கியில் காண்பிக்க வேண்டும். ஏற்கனவே வங்கியில் கணக்கு வைத்திருந்தால் இந்தச் சான்றுகளை வழங்கவேண்டாம்.

கடன்தொகை ரூ.50000/- அல்லது அதற்குமேல் என்றால் கடன்பெறுபவர் வருமான வரித்துறை வழங்கிய நிரந்தரக் கணக்கு எண் அட்டை (PAN  Card) அல்லது படிவம் 60/61 (Form 60/61).

இவற்றில் ஏதாவது ஒன்றை வழங்கவேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்க நகைக்கடன் பெறலாம்.

விண்ணப்பத்தைச் சரிபார்த்த பிறகு அடகு வைப்பதற்கான நகைகளை நகை மதிப்பீட்டாளர் அதன் தூய்மை, தன்மை, எடை மற்றும் அதன் சந்தை விலை ஆகியவற்றை மதிப்பீடு செய்து நகை மதிப்பீட்டாளர் சான்றிதழ் வழங்குவர்.

இதன் அடிப்படையில்தான் நகைக்கான கடன்தொகையை வங்கி நிர்ணயித்து வழங்கும்.

நகை மதிப்பீடும் கடன் தொகையும்

சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு என்பதற்கு ஏற்ப வங்கி ஒரு கிராம் தங்க நகைக்கு எவ்வளவு அடமானத் தொகையினை கடனாக வழங்கவேண்டும் என்று நிர்ணயிக்கும்.

நகையின் கடன் மதிப்பைத் தெரிந்து கொள்வதற்குமுன் தங்க நகைகளின் வகைகளையும் அவற்றின் தரம் மற்றும் எந்த நகைகளை வங்கி எவ்வாறு மதிப்பீடு செய்கிறது என்பதையும், எந்த நகையை அடகு வைக்க இயலாது என்பதையும் அறிந்து கொள்வோம்.

 

நகைகளை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

(1)வார்ப்பு நகைகள் (Casting Jewels)
(2)கம்பி அலங்கார நகைகள் (Filigree Jewels)
(3)திறந்த கல் நகைகள் (Open Stone Jewels)
(4)மூடப்பட்ட கல் நகைகள் (Closed Stone Jewels).

தங்க நாணயம், வளையல், டாலர் மற்றும் மோதிரம் ஆகியவை வார்ப்பு நகைகளாகும். வளையல், மோதிரம், செயின், டாலர், சங்கிலி, மாலை, நெக்லஸ், காசுமாலை, தோடு, மூக்குத்தி, ஜிமிக்கி, டாலர் செயின், ஒட்டியாணம், வங்கி, நெத்திசூடி ஆகியவை கம்பி அலங்கார நகைகளாகும். அலங்கார நகைகளில் மேல்பக்கம் கல்வைத்து கீழ்ப்பகுதியில் திறந்திருந்தால் அவை திறந்த கல்நகைகளாகும்.

கல்வைத்த நகைகள் கீழ்ப்பகுதியில் மூடியிருந்தால் அவை மூடப்பட்ட கல் நகைகளாகும்.  தங்க நகையின் தரம், அதில் பதிக்கப்பட்டுள்ள கற்களின் எடை, ஆபரணத்தின் உள்ளே அரக்கு  நிரப்பப்பட்டிருந்தால் அதன் எடை, இணைப்புக் கயிறுகள் இருந்தால் அவற்றின் எடை ஆகிய அனைத்தையும் அளவிட்டு மதிப்பீடு செய்வது மதிப்பீட்டாளரின் பணி.

எடையிலிருந்தும் தரத்தின் மதிப்பிலிருந்தும் கழிக்கப்படும் அளவுகோல்கள் என்ன என்பதையும் வங்கிகளால் பொதுவாக பின்பற்றப்படும் மதிப்பீடு முறை:

நகை  கழிவு

வார்ப்பு நகைகள்    பொதுக்கழிவு 5%
கம்பி அலங்கார நகைகள்    பொதுக்கழிவு 10%
திறந்த கல்
நகைகள்    பொதுக்கழிவு +
கல் எடை கழிவு 10%,
மூடப்பட்ட கல் நகைகள்           பொதுக்கழிவு +
கல் எடை கழிவு + அரக்கு எடை கழிவு 15 %

மேற்கண்ட அட்டவணைப்படி 110 கிராம் மொத்த எடையுள்ள 90 திறந்த கற்கள் பதிக்கப்பட்ட நகைக்கு தங்க நகைக்கடன் எவ்வளவு கிடைக்கும் என்பதை மதிப்பீடு செய்யலாம்.

(1)எடையின் அளவீடு : நகையில் உள்ள 90 கற்களின் எடை 300 மில்லி கிராம் என்று கணக்கிட்டால் கல்லுக்காக 27 கிராம் கழிக்கவேண்டும் [(300 x 90)/ 1000]. பொதுக்கழிவு 10% அதாவது 11 கிராம்.

(2) தரத்தின் அளவீடு : வங்கியின் அட்டவணைப்படி இந்த தங்க நகையின் உரசல் மதிப்பீட்டுத்தரம் 88.65% என்னும்போது  திறந்த கல்நகையாக இருப்பதால் அதில் 10% கழிக்கப்படும். அதன்படி நிகர தரம் 78.65% (88.65 – 10.00).

(3) இவ்வாறு எடை அளவீடும், தர அளவீடும் செய்தபிறகு சந்தையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன என்பதை அறியவேண்டும். ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4500 என்றால் அதில் மேலே குறிப்பிட்ட தர அளவீட்டின்படி 78.65% மட்டுமே விலை மதிப்பாகும். எனவே இந்த நகையின் ஒரு கிராம் விலை ரூ. 3303/- (ரூ.4200/- x 78.65 %).

(4) நகை மதிப்பீட்டாளர் மதிப்பிடும் தொகை = நிகர எடை x தங்கத்தின் நிகர விலை, அதாவது 72 x ரூ.3303/- = ரூ.2,37,816/-(5) கடன் வழங்க வங்கி நிர்ணயிப்பது = (நிகர எடை x வங்கி மதிப்பு) 72 x  ரூ.2870 = ரூ.2,06,640/-இந்த உதாரணக் கணக்கின்படி நகை மதிப்பீட்டாளர் மதிப்பீடு மற்றும் வங்கியின் அட்டவணைப்படி நகையின் நிகர எடைக்கான மதிப்பீடு இவற்றில் எது குறைவோ அந்தத் தொகையை வங்கி நகையை அடமானமாகப் பெற்று கடனாக வழங்கும்.  மேற்குறிப்பிட்ட தங்க நகையை வங்கியில் அடமானம் வைத்து ரூ.2,06,000/- கடனாகப் பெறலாம்.

இது பொதுவான கணக்கீடாகும். ஒவ்வொரு வங்கியிலும் இவ்வாறு மதிப்பிட்டு கடன் தொகையை நிர்ணயிப்பதில் சில மாறுதல்கள் இருக்கலாம்.

கல்லின் அளவை வைத்துத்தான் கல்லின் எடை கணக்கிடப்படுகிறது. மேலும் நகையில் கோர்ப்பாக கயிறு அல்லது பித்தளை / வெள்ளிக்கம்பி கட்டியிருந்தால் அவற்றின் எடையும் மொத்த எடையிலிருந்து கழிக்கப்படும்.

கல்லின் அளவிற்கென எண் 7 முதல் 32 வரை ‘‘எண் குறியீடு” உள்ளது. எண் 7 என்பது கல்லின் அளவு என்றால் கல்லின் எடை 10 மில்லி கிராம் என்றும் அளவு 32 எனில் எடை 300 மில்லி கிராம் என்றும் அட்டவணை அளவீடுகள் புழக்கத்தில் உள்ளன.

தங்கக் காசுகள், தங்க பிஸ்கெட்டுகள், தங்கக் கட்டிகள் ஆகியவற்றை அடமானம் வைக்க வங்கி அனுமதிப்பதில்லை. தங்கக்காசு கொக்கியோடு இருந்தால் அடமானம் வைக்கலாம்.

தங்கத்தாலான பூஜைப் பொருட்கள், பாத்திரங்கள், தங்கத் தாம்பாளம், தங்க பொம்மைகள் ஆகியவற்றை வங்கியில் அடமானமாக வைத்துக் கடன் பெறமுடியாது.

தங்க ஆபரணங்களை மட்டுமே வங்கி இந்தத் திட்டத்தில் அடமானமாக ஏற்கும். நகைகளை அடமானமாக வைத்துக் கடன் பெறுபவர் அவற்றின் உரிமையாளராக இருக்க வேண்டும்.

தங்கத் தர உரைகல்

வங்கியில் நகையை அடமானமாக வைத்துக் கடன் வாங்குபவர்கள் நகையின் தரத்தை அறிய உதவுவதுதான் உரைகல்.

உரைகல்லினை சுத்தமாக்க அதன்மேல் தேங்காய் எண்ணையை தடவித் துடைப்பர்.

கல்லில் உரச சற்று கடினமாக இருந்தால் அது தரம் குறைவான தங்கமாகும். மிருதுவாக இருப்பது தரமுள்ள தங்கமாகும். தரம் குறைந்த தங்கமெனில் உரைகளில் துகள்கள் சிதறாது.

உரசிய இடம் பார்வைக்கு பளிச்சென அழுத்தமாகத் தெரியும்.

உரை படிமத்தில் நைட்ரிக் அமிலம் ஒரு துளி விட்டவுடன் உரை சற்று பொங்கி சிவப்பாக மாறி மறைந்தால் தங்கத்தின் தரம் 65%க்கும் குறைவானதாகும்.

உரைபடிமத்தில் உப்புக்கல் வைத்து மேலும் பொங்கி மறைந்தால் அது தங்கமே இல்லை. உரையின் அடியில் பச்சை நிறமும் தெரியும்.

செம்பு மற்றும் பித்தளை நகைகள் நைட்ரிக் அமிலம் பட்டவுடன் பொங்கி ஆவியாகிவிடும். வெள்ளி கரைந்துவிடும்.

 

அடமான ரசீது   

கடன்பெறுவதற்கு நகையை வங்கியில் அடமானம் வைத்தவர் அதற்குச் சான்றாக வங்கியிலிருந்து பெறும் அடமான ரசீதை பாதுகாப்பாக வைத்திருந்து நகையை மீட்கும்போது வங்கியிடம் வழங்கவேண்டும்.

அந்த ரசீதில் நகைகள் அடகு வைக்கப்பட்ட வங்கியின் பெயர், வங்கிக் கிளையின் முகவரி, கடனாளியின் பெயர், முகவரி, அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளின் விவரம், நகை வாரியாக அதன் எடை, நகைகளின் மொத்த எடை, ஏதேனும் நகைகள் உடைந்திருந்தால் அதன் விவரம், நகைக்கடனுக்கான வட்டி விகிதம், நகைகளை அடமானம் வைத்த தேதி, கடனில் உள்ள நிலுவைப்பணத்தை வட்டியுடன் சேர்த்து குறிப்பிடப்பட்டிருக்கும்.

 

சிலநாள் சைவம் சிலநாள் அசைவம் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/12/01/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a8/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...