குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிப்போம்!

Date:

Share post:

குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிப்போம்!

குழந்தைகளின் கற்றல்

கற்றல் என்றதும் கல்வியை மட்டுமே முதன்மைப்படுத்தாமல் வாழ்வில் அத்தியாவசியமான ஒவ்வொன்றையும் குழந்தைப்பருவத்திலிருந்தே அவர்கள் கற்கும் அறிவை நாம் கொடுக்க வேண்டும்.

பல்வேறு வகையான குழந்தைகளின் கற்றல் முறைகளையும் அதனை ஊக்குவிக்கும் வாய்ப்புகளையும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

குழந்தைகள் தங்களுக்கு நிகழும் ஒவ்வொரு அனுபவத்தின் வாயிலாக ஒரு விஷயத்தை கற்கும் அறிவை நாம் அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

பொதுவாக குழந்தைகளின் கற்றலை மேம்படுத்துவதன் நோக்கம் அவர்களின் எதிர்கால நல்வாழ்வு, அவர்களுக்கான அடையாளத்தை அறிந்துகொள்ளுதல், உலகத்திற்கான அவர்களின் பங்களிப்பைத் தெரிந்துகொள்ளுதல் என்பன உள்ளடக்கியது.

கற்றலின் முக்கியத்துவம்

கற்றல் என்பது ஒரு குழந்தை  வெற்றிகரமான நபராக மாற உதவக்கூடிய முக்கியக் காரணி ஆகும். குழந்தை வளர்ப்பின் பெரும் பொறுப்பை ஏற்றுள்ள பெற்றோர்களுக்கு மட்டுமே கற்றல் அமைப்பின் முதன்மை பங்கு உள்ளது.

காரணம் அவர்களே ஏனையவர்களை அறிமுகப்படுத்த முடியும். மேலும் கற்றலின் விரிவாக்கம் என்பது தலைமைத்துவ திறன்கள், சுதந்திரம், பேச்சுவார்த்தை, குழுப்பணி மற்றும் மற்றவர்களுடன் பணிபுரியும் திறன் போன்றப் பகுதிகளை உள்ளடக்கியது.

முக்கியமாக அவசரக் காலங்களில் முடிவெடுக்கும் திறன், சிக்கலைத் தீர்க்கும் திறன், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட உடல் சுகாதாரம், இயற்கை உபாதைகளை வெளியேற்றும் அறிவு அவர்களுக்கான உணவைத் தயாரித்தல் மற்றும் அத்தியாவசியத்  தகவல் தொடர்புத்திறன் ஆகியவை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான வாழ்க்கைத் திறன்கள் ஆகும்.

இன்றளவும் சில குழந்தைகள் இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்வதில்லை. மேலும் அவர்கள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் வரை நிஜ உலக சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்ற அடிப்படைப் புரிதல் இல்லாமல் தடுமாறுகிறார்கள்.

இந்தக் கற்றல் திறனில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் துஷ்பிரயோக அறிவும் புகட்டப்பட வேண்டும்.

கற்றல் திறனை மேம்படுத்தும் வழிமுறைகள்

 

  • கேட்டல் மற்றும் காட்சிகள் மூலம் அவர்கள் கற்றதை ஞாபகத்தோடு வரிசைப்படுத்துதல் எனும் கலையை நாம் முதலில்  சொல்லித்தர வேண்டும்.
  • திறந்தநிலை விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்கள், குழந்தைகளின்  ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மற்றும் ஒரு  சிக்கலான சூழலை உருவாக்கி அதனைத் தீர்க்கும் திறன் வளர்த்தல் ஆகியவற்றை காட்சிகளாகவும் அவர்களுக்கு சொல்லித்தரலாம். உதாரணமாக எங்கேனும் வழித் தவறினாலோ முன்பின் அறியாதவர் அழைத்தாலோ எவ்வாறு நடக்க வேண்டும் என்ற அறிவை சூழலாக விவரித்துக் கற்றுத்தர வேண்டும்.
  • நிறங்கள் மற்றும் நறுமணங்களை அறிமுகப்படுத்துதல், குடும்ப வரலாறு மற்றும் உறவுகளையும் அவர்களின் பெயர்களையும் சொல்ல வைத்தல்.
  • எதையாவது செய்ய அல்லது அடைவதற்கான ஊக்கத்தை தொடர்ந்து அளித்தல், கேள்விகளை கேட்கப் பழக்கப்படுத்துதல், குழந்தைகளின் கேள்விக்கு பொறுமையாக பதிலுரைத்தல் போன்ற ஆதரவுகளைக் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

மேற்கண்ட கற்றல் திறனை குழந்தைகளுக்கு வலியத் திணிக்காமல் அதனை விளையாட்டுமுறையில் சொல்லித்தருவது முக்கியமான ஒன்றாகும்.

ஒரு குழந்தை புதிய திறமையைக் கையாள அதன் உடல் திறன் மற்றும் அறிவு வளர்ச்சி சரியான விதத்தில் முதிர்ச்சி அடைந்துள்ளதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தைகளுக்கு ஏதுவான நேரத்தையும் சூழலையும் கருத்தில் கொண்டும் உணவு மட்டுமல்ல அறிவைக்கூட திணித்தல் என்பது குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும் என்பதால் அவர்களுக்கான சாதகமான சூழலை உருவாக்கி அவர்கள் விரும்பும்படியான முறையில் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் அதிகரித்து சமூகத்தில் சிறப்பான மனிதர்களாக உருவாக்குவோம்.

 

குழந்தைகளின் மனச்சோர்வு பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2023/01/11/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...