சம்மர் மேக்கப்

Date:

Share post:

சம்மர் மேக்கப்

சம்மர் மேக்கப்

 

கத்திரி வெயில் ஆரம்பிச்சாச்சு. சுட்டெரிக்கும் சூரியனை பார்க்கும் போதே கண்கள் எல்லாம் தெறிப்பது போன்ற உணர்வு ஏற்படும். இந்த வெயிலில் வெளியே அலுவலகம் செல்லும் பெண்கள்…

காலையில் எழுந்து மேக்கப் போட்டுக் கொண்டு கிளம்பி அலுவலகம் செல்வதற்குள் அவர்கள் போட்ட மேக்கப் எல்லாம் கலைந்து வாடிய ரோஜா மலர் போல் வதங்கிவிடுகிறார்கள்.

அலுவலகம் மட்டுமல்ல வெளியே எங்கு சென்றாலும் தான் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

வெயில் காலத்தில் ஏற்படும் வியர்வை ஒரு பக்கம்… மறுபக்கம் சுட்டெரிக்கும் சூரியனின் தாக்குதல் என இரண்டையும் சமாளிக்க வேண்டும்.

அதனை எவ்வாறு சமாளித்து எப்போதும் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் ஆப்பிள் போல் ஃப்ரெஷ்ஷாக இருக்கலாம் என்று டிப்ஸ் அளிக்கிறார் மேக்கப் ஸ்டைலிஸ்ட் ராதிகா.

‘‘பொதுவாக பெண்கள் வெளியே எங்கு சென்றாலும், மேக்கப் அணியாமல் செல்வது வழக்கமில்லை.

மேலும் இந்த வெயில் காலத்தில் மேக்கப் போட்டாலும் வியர்வை காரணமாக எல்லாம் கலைந்துவிடும். குறிப்பாக வாய் மற்றும் மூக்குப் பகுதியில்.

அதனால் அந்த இடம் மட்டும் கருப்பாக மாறி இருக்கும். காலையில் போட்ட மேக்கப் மாலை வரை அப்படியே இருக்கும்னு சொல்ல முடியாது.

வியர்வை காரணமாக எல்லாமே வழிந்து பார்க்கும் போது வேற மாதிரி இருக்கும்.

ஆனால் அது கலைந்தாலும் பார்க்க விகாரமாக இல்லாமல் இருக்கணும். அதனால் வெயில் காலத்தில் எப்படி சம்மர் மேக்கப் போட்டுக் கொள்ளலாம்…

 

அதை கலையாமல் பார்த்துக் கொள்வது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சம்மர் மேக்கப் போடுவதற்கு முன் அதற்கு நம்மை தயார் செய்து கொள்ளணும். அந்த தயார் நிலையினை யாரும் கடைப்பிடிப்பதில்லை.

இந்த நிலைக்கு பிறகு தான் மேக்கப்பே போட்டுக் கொள்ளணும் என்பதை எல்லாரும் கவனத்தில் கொள்வது அவசியம்.

இந்த முறையினை பின்பற்றினால் மேக்கப் கலையாமல் அப்படியே இருக்கும். மேக்கப் பொறுத்தவரை எல்லாரும் செய்யும் முதல் தப்பு, குளித்துவிட்டோ அல்லது முகத்தை கழுவிய பிறகோ, வியர்க்க வியர்க்க மேக்கப் போடுகிறார்கள்.

மேக்கப்பில் மிகவும் முக்கியமானது  ஃபவுண்டேஷன். நாம் வியர்க்கும் போது மேக்கப் போடுவதால், சருமத்தில் உள்ள துவாரங்கள் வழியாக வெளியேறும் வியர்வை நாம் போட்டு இருக்கும் ஃபவுண்டேஷன் சருமத்தோடு சேராமல், கலைந்திடும்.

அதனால் மேக்கப் ேபாடுவதற்கு பத்து நிமிடம் முன் ஐஸ்கட்டியால் முகம் மற்றும் கழுத்து பகுதியினை நன்கு தேய்க்க வேண்டும்.

ஐஸ்கட்டி இல்லை என்றால் ஐஸ் வாட்டரை முகத்தில் நன்கு தெளிக்கலாம். இதனால் சருமத்தில் உள்ள துவாரங்கள் எல்லாம் இறுக்கமாகி வியர்வை வழிவதை தடுக்கும்.

இவை இரண்டும் இல்லை என்றாலும் பன்னீரை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். அதைக் கொண்டும் முகத்தினை நன்கு துடைக்கலாம்.

இதனால் சருமத்தில் உள்ள துவாரம் இறுக்கமாகும். மேலும் சருமம் வாசனையாகவும் இருக்கும். இவை எல்லாம் முகத்தை நன்கு கழுவிய பிறகும் மேக்கப் போடுவதற்கு முன்பும் செய்ய வேண்டும்.

குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இதனை கடைப்பிடிப்பது அவசியம். அவர்களுக்கு எப்போதும் சருமத்தில் எண்ணெய் வழிந்து கொண்டு இருக்கும். இதில் வியர்வை மறுபக்கம்.

 

இரண்டும் சேர்ந்து மேக்கப்பினை விகாரமாக மாற்றிவிடும்.

அவர்கள் ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் கிராம்பு, புதினா இலை சேர்த்து ஃபிரிட்ஜில் வைக்கவும்.

அவை தண்ணீரில் நன்கு ஊறிவிடும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் மேக்கப் போடுவதற்கு முன் இந்த தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவலாம்.

இதனால் எண்ணெய் பசை மற்றும்  வியர்வை இரண்டும் கட்டுப்படும். அதன் பிறகு மேக்கப் போட்டால் எண்ணெய் பசை உள்ளவர்களுக்கும் அழகாக இருக்கும்.

மேக்கப்பின் முக்கிய பொருளே ஃபவுண்டேஷன்தான் என்பதால், வெயில் காலத்தில் லைட்வெயிட் ஃபவுண்டேஷனை தேர்வு செய்வது நல்லது. அதாவது சிம்பிள் மேக்கப்பிற்கு பயன்படுத்தப்படும் ஃபவுண்டேஷன்.

இந்த நேரத்தில் ஹை டெபினிஷன் ஃபவுண்டேஷன் கொண்டு மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஏ.சி அறையிலேயே உட்கார்ந்து இருப்பவர்கள் என்றால் ஹை டெபினிஷன் மேக்கப் டிரை செய்யலாம்.

மத்தபடி வெளியே செல்பவர்களாக இருந்தால், சருமத்தோடு ஒன்றாக பிளண்டாகக்கூடிய ஃபவுண்டேஷனை பயன்படுத்தலாம்.

இதனால் வியர்வையால் மேக்கப் கலைந்தாலும், அந்த பகுதி திட்டுத் திட்டாக தெரியாது. ஃபவுண்டேஷன் இப்போது சன்ஸ்கிரீன் தன்மையோடும் கிடைக்கிறது. சன்ஸ்கிரீன் போடும் போது, அதிகமாக வியர்க்கும்.

அதை தவிர்க்க சன்ஸ்கிரீன் அமைப்பு கொண்ட ஃபவுண்டேஷனை பயன்படுத்தலாம். மேலும் சன்ஸ்கிரீன் ஒரு நாள் முழுக்க பலன் தராது. அது மூன்று மணி நேரம் வரை தான் வேலை செய்யும்.

அதனால் ஒரு முறை சன்ஸ்கிரீன் ேபாட்டாலும், நான்கு மணி நேரத்திற்கு பிறகு மறுபடியும் முகத்தை கழுவி, பயன்படுத்த வேண்டும்.

 

அப்பதான் பார்க்க ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

ஃபவுண்டேஷன் அடுத்து கண்களுக்கான மேக்கப்பில் கவனம் செலுத்த வேண்டும். வெயில் காலத்தில் கண்களுக்கு அதிகப்படியான மேக்கப் அவசியமில்லை. கண்மை மட்டுமே போதுமானது.

சிலர் ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா எல்லாம் போட்டுக் கொள்வாங்க. முடிந்தவரை அவற்றை தவிர்க்கலாம். மஸ்காரா அல்லது ஐலைனர் போட விரும்புபவர்கள் வாட்டர் ப்ரூப் பயன்படுத்தலாம்.

வியர்வை முகத்தில் வழிந்தாலும் இவை கரைந்து முகத்தை கருப்பாக மாற்றாமல் பாதுகாக்கும். கண்களை அடுத்து அழகாக எடுத்துக் காட்டுவது உதடு தான். உதட்டிற்கு மேட்பினிஷ் ெகாண்ட லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்யலாம்.

லிப்ஸ்டிக் லிக்விட் பேஸ் கொண்டும் வருகிறது. வெயில் காலத்தில் அதை தவிர்க்கலாம்.  காரணம் வெயிலில் அது உருகி உதடுகளையும் தாண்டி வெளியே வழியும்.

ஃபவுண்டேஷன் பயன்படுத்தும் பலர், இலுமினேட்டர்களையும் பயன்படுத்துவது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இது சருமத்திற்கு பளபளப்பினை கொடுக்கும். இதனை மாலை நேரத்தில் பார்ட்டிக்கு செல்லும் போது பயன்படுத்தலாமே தவிர வெயில் நேரத்தில் தவிர்த்துவிட வேண்டும்.

காரணம், இதுவும் வியர்வையினால் வழியும் தன்மை கொண்டது. மேக்கப் என்றால் முகத்தை மட்டுமே பிரகாசமாக வைத்துக் கொள்வது மட்டுமில்லை. சிகை அலங்காரமும் அதில் அடங்கும்.

இப்போது தலை முடியினை விரித்துக் கொண்டு செல்வது தான் ஃபேஷனாக உள்ளது.

வெயில் காலத்தில் தலைமுடியினை முழுமையாக விரித்தபடி சென்றால், வெயிலின் தாக்கம் முடியினையும் பாதிக்கும்.

இதனால் முடி உடைந்து, பொடுகு மற்றும் அதிகமாக கொட்டும் வாய்ப்புள்ளது. மேலும் இப்போது சிகை அலங்காரம் நிறைய இருப்பதால், அதில் சிம்பிளான அலங்காரத்தினை கற்றுக் கொண்டு அதன்படி செய்து  கொள்ளலாம். எதுவுமே இல்லை என்றால் அழகாக பின்னலிட்டுக் கொள்ளலாம்.

எந்த ஒரு சிகை அலங்காரமாக இருந்தாலும், வெளியே செல்லும் போது தலையினை ஒரு துணியால் மூடிக் கொள்ளலாம் அல்லது குடைப்பிடித்து செல்லலாம்’’ என்றவர் கல்யாண பெண்கள்  வெயில் காலத்தில் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டார்.

‘‘சாதாரணமான பெண்களே தங்களின் சருமத்தின் மேல் அதிக அக்கறை கொள்ளும் போது, மணப்பெண்கள் இதில் மேலும் அக்கறை செலுத்துவது அவசியம்.

கல்யாணத்திற்கு ஷாப்பிங் செல்லும் போது வெயில் நேரத்தில் செல்லாமல், மாலை நான்கு மணிக்கு மேல் செல்லலாம்.

வெயில் நேரத்தில் செல்ல நேரிட்டால் குடை, தொப்பி, கண்களுக்கு கூலர்ஸ் அணிந்து கொள்வது அவசியம்.

மேலும் வெயிலில் செல்லும் போது சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே கருமையாக மாற வாய்ப்புள்ளது.

அதை தவிர்க்க சில பேக் டிப்ஸ்களை கடைப்பிடிக்கலாம். சருமம் பளிச்சென்று இருக்கும்.

*நுங்கு, சந்தனத்தில் இளநீருடன் சேர்த்து அரைத்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவலாம். வியர்க்குரு வராது, தினமும் போடலாம்.

*தர்பூசணி மற்றும் கிர்ணி பழத்தை சேர்த்து அரைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போடலாம். சருமம் சில்லென்றும் இருக்கும். சருமத்தின் நிறமும் பளிச்சென்று மாறும்.

*வெள்ளரிக்காயும் நெல்லிக்காயும் அரைச்சு போடலாம். விட்டமின் சி கிடைக்கும். மேலும் வெள்ளரி சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும். சருமம் பளிச்சென்று இருக்கும்.

*வெந்தயம், பாசிப்பயிறு, தயிர். வெந்தயம், பாசிப்பயறை இரவே ஊறவைத்து தயிருடன் அரைத்து அதை முகம், கழுத்துக்கு போடலாம். கண்களை தவிர்க்கவும். சருமம் குளிர்ச்சியாகும்.

பாசிப்பயிறு சருமத்தை டைட் செய்யும். வெந்தயத்தின் பொன்னிறமாக சருமம் மாறும். தயிர் சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கும்.

*சருமம் வெயிலில் போனால் டல்லா இருக்கும். ரவையை தேங்காய்ப் பாலில் ஊறவச்சு, பேக் மாதிரி போட்டு, நல்லா மசாஜ் செய்தா, சருமம் நல்லா பளிச்சென்று இருக்கும். இந்த பேக்குகளை 20 நிமிடம் போட்டு சாதாரணமா கழுவினால், உங்களின் சருமம் பளிச்சென்று இருக்கும்.

இதை செய்து வந்தாலே சருமம் எப்போதும் இளமையாகவும், பளிச்ெசன்றும் இருக்கும்’’ என்று ஆலோசனை வழங்கினார் மேக்கப் ஸ்டைலிஸ்ட் ராதிகா.

 

 

கொள்ளு பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2023/01/20/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Previous article
Next article

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...