கொரோனா பரப்ப வேண்டாம் – மத்திய மந்திரி அறிவுறுத்தல்

Date:

Share post:

கொரோனா குறித்து தேவையற்ற பயத்தை பரப்ப வேண்டாம் – மத்திய மந்திரி அறிவுறுத்தல்

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். கொரோனா தொற்று குறித்து தேவையற்ற பயத்தை பரப்ப வேண்டாம் என்றார். புதுடெல்லி: இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா இன்று 6 ஆயிரத்தை கடந்துள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது.

முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அனைத்து மாநிலங்களிலும் சுகாதார வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தவேண்டும். கொரோனா மேலாண்மைக்கான அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்கவும், கொரோனா தொற்று குறித்து தேவையற்ற பயத்தை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...