தப்பி தவறி கூட இவங்களுக்கு பில்லி, சூனியம் வைச்சிடாதீங்க! அப்புறம் பிரச்சினை உங்களுக்குத் தான்

Date:

Share post:

இன்று வாராஹி ஜெயந்தி மட்டுமின்றி தேய்பிறை பஞ்சமியும் ஆகும். இந்நிலையில் முன்னோர்களின் ரகசிய மற்றும் பழமை வாய்ந்த வழிபாடான வாராஹி அம்மன் வழிபாடு குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.பன்றி முகத்தில் காட்சியளிக்கும், வாராஹி அம்மனுக்கு 3 கண்கள் உள்ளதால் சிவ பெருமானின் அம்சத்தினை குறிக்கின்றது.

மேலும் அம்பிகை அம்சமாக பிறந்துள்ளதால், சிவன், ஹரி, சக்தி என 3 அம்சங்கள் சேரப்பெற்றுள்ள தெய்வமாகும். வராஹம் என்பது பன்றியின் அம்சமான விஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றாகும்.

இந்த அம்மனை வழிபடுபவர்களுக்கு எதிராக எவரேனும் பில்லி, சூனியம், ஏவல் செய்தால், செய்தவர்களுக்கே பாதிப்பு ஏற்படுமாம்.

தேய்பிறை பஞ்சமி திதியான இன்று மாலை 6 .30 மணியளவில் அல்லது இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை வாராஹியை நமது வீட்டிலுள்ள பூஜையறையில் அமர்ந்து மந்திர ஜபத்தால் வழிபாடு செய்வது மிகச்சிறப்பாகும்.

தனியாக பூஜை அறை இல்லாதவர்கள் வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்கலாம்.

வாராஹி அம்மனுக்கு பிடித்த நிறம் பச்சை நிறமென்பதால், பச்சை நிறத் துண்டு ஒன்று வைத்து அதனருகில் அகல் வைத்து அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபம் ஏற்றி வழிபடும் போது, கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் வடக்கு திசை நோக்கி நாம் அமர வேண்டும். வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் கிழக்கு திசை நோக்கி நாம் அமர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு இல்லாமல் வேறு திசைகளில் அமர்ந்து வழிபாடு செய்தால் ஏற்ற பலன் கிடைக்காது. நெய்வேத்தியமாக தேங்காய் பூரணம், சர்க்கரைப் பொங்கல் , கேசரி போன்றவற்றில் ஏதோ ஒன்றை வைத்து பூஜை செய்ய வேண்டும்.ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்! என்ற காயத்ரி மந்திரத்தினை கூறலாம்.

அவ்வாறு இல்லையெனில், ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி , பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே! அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே! என்ற ஸ்ரீ வாராஹி அம்மன் துதியினை கூறலாம்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...