வருகின்ற தமிழ் புத்தாண்டை இனிப்பாக கொண்டாட வேண்டுமா ? பலாப்பழ பாயாசத்தை இப்படி செய்து பாருங்க :

Date:

Share post:

அனைத்து பண்டிகைகளையும் இனிப்புடன் கொண்டாடுவது தான் வழக்கம்.

அதிலும் வருகின்ற சித்திரை புத்தாண்டை இனிப்புடன் கொண்டாடுவது மிகவும் நல்லது. வரவிருக்கின்ற புத்தாண்டை இனிப்பு சாப்பிட்டு கொண்டாடுவதும் சிறப்பு.

தற்போது பலாப்பழத்தை விரும்பி பலர் உண்பார்கள். அதில் ஏதேனும் இனிப்பாக செய்து சாப்பிட்டால் வித்தியாசமாக சுவைத்த அனுபவமும் கிடைக்கும்.

ஆகவே பலாப்பழத்தை வைத்து எவ்வாறு சுவையானதொறு பாயாசம் செய்யலாம் என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள்
பலாப்பழம் – 20
தேங்காய் பால் – 2 கப்
வெல்லம் – 150 கிராம்
ஏலக்காய் – 6 (பொடி)
முந்திரி – தேவையான அளவு
கிஸ்மிஸ் – 1 தேக்கரண்டி
நெய் – தேவையான அளவு
செய்முறை
பலாப்பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பலாப்பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
பின் ஒரு பலாப்பழத்தை தண்ணீர் ஊற்றி வேக வைத்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.
வெல்லத்தை நன்றாக கரைத்து எடுத்து, சிறுது நெய் இட்டு முந்திரி, கிஸ்மிஸ் போட்டு வறுத்தெடுக்க வேண்டும்.
பின்னர், மசித்து வைத்த பலாப்பழ விழுதை சேர்த்து, அதனுடன் ஏலத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து காய்த்து எடுக்க வேண்டும்.
இந்த கலவை கொதி வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கொதிக்க வைத்து எடுக்க வேண்டும்.
சுவையான பலாப்பழ பாயசம் தயார்.இதை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பலாபழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும்.
நரம்புகளை உறுதியாக்கும்.
ரத்தத்தை விருத்தி செய்யும்.
கண் பார்வைக்கு உதவும்.
விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...