பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் நமது இலக்கு- மு.க.ஸ்டாலின் பேச்சு

Date:

Share post:

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் நமது இலக்கு- மு.க.ஸ்டாலின் பேச்சு

234 தொகுதிப் பார்வையாளர்களுடன் கலந்தாலோசனைக்கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடந்தது.

உங்கள் பகுதிகளில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது அரசின் திட்டங்கள், பணிகள் குறித்து எடுத்து சொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

தி.மு.க.வில் புதிதாக 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதிக்குள் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 234 தொகுதிகளுக்கும் புதிதாக பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்கள் பகுதி, மற்றும் ஒன்றியம் வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

கட்சியில் அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க பொதுமக்களை எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பாக நிர்வாகிகளுக்கு தொகுதி பார்வையாளர்கள் எடுத்துரைத்தனர்.

234 தொகுதிப் பார்வையாளர்களுடன் கலந்தாலோசனைக்கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான

மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை எந்தளவு நடந்துள்ளது என்பது குறித்து தொகுதி பார்வையாளர்களிடம் கேட்டறிந்தார்.

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும். அது தான் நமது இலக்கு. அதன் அடிப்படையில் உங்கள் பணிகள் இருக்க வேண்டும்.

உங்கள் பகுதிகளில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது அரசின் திட்டங்கள், பணிகள் குறித்து எடுத்து சொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

நீங்கள் தொகுதி பார்வையாளர்களாக பணியாற்றி கொண்டு இருக்கிறீர்கள். இதனால் தொகுதி பிரச்சினை குறித்தும் எனது கவனத்துக்கு கொண்டு வரலாம்.

இது தொடர்பாக உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பிறகு ஒவ்வொரு தொகுதி பார்வைளார்கள் தங்கள் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை குறித்து எடுத்துக்கூறினார்கள்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...