உடல் எடை குறைத்து ரோபோ சங்கர் மெலிந்து போனதற்கு முக்கிய காரணமே இதுவா ?

Date:

Share post:

உடல் எடை குறைத்து ரோபோ சங்கர் மெலிந்து போனதற்கு முக்கிய காரணமே இதுவா ?

“ரோபோ” ஷங்கர் அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகிறார். அவரது சமீபத்திய புகைப்படங்களில், நடிகர் உடல் எடையை குறைத்திருப்பது தெரியவந்தது.

சமீபத்தில் ஒரு புகைப்படத்தில் அவர் தனது அளவில் பாதியாக இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“ரோபோ” ஷங்கரின் சமீபத்திய புகைப்படத்தை திரைப்பட இயக்குனர் தொடங்குவோம் கார்த்திக் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் தன்னை பின்பற்றுபவர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தது போல் புகைப்படம் பகிரப்பட்டது.

ஷங்கரைத் தவிர, அந்த புகைப்படங்களில் ஷங்கரின் மகள் இந்துஜாவும் இடம்பெற்றிருந்தார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஷங்கர் குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

மிமிக்ரி கலைஞராக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரோபோ சங்கர். பல மேடைகளில் இவர் கலந்து கொண்டு மிமிக்ரி செய்துள்ளார்.

விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகம் பிரபலமானார். நல்ல கட்டுமஸ்தான உடலை கொண்டவர் இவர்.

தீவிர கமல் ரசிகரான ரோபோ சங்கர் ஆளவந்தான் படத்தை பார்த்து அதில் வரும் கமலை போல உடம்பை ஏற்றியிருக்கிறார்.

டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ரோபோ சங்கருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது.

அதைப்பயன்படுத்தி அவரும் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

ஆனால், திடீரென உடல் எடை குறைந்து மெலிதான தோற்றத்துக்கு மாறிய அவரின் புகைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சி? ஏன் இப்படி இளைத்து போனார்? என சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பேச துவங்கினர்.

எனவே, இதுபற்றி விளக்கமளித்த அவரின் மனைவிஒரு திரைப்படத்திற்காக இப்படி உடலை இளைத்துள்ளார் என விளக்கமளித்தார்.

ஆனால், அவர் சொன்னதில் உண்மையில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது. ரோபோ சங்கருக்கு பல வருடங்களாகவே மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

அதோடு, அசைவ உணவுகளையும் கட்டுப்பாடின்றி சாப்பிட்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது.

இதில், சோகம் என்னவெனில் ஆறு மாதமாக அவரின் உடலில் மஞ்சள் காமாலை இருந்துள்ளது அவருக்கே தெரியவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பியவருக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவரின் உடலை சோதிக்கப்பட்டபோதுதான் இந்த உண்மை அவரின் குடும்பத்தினருக்கே தெரியவந்துள்ளது.

கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வந்துள்ளது.

அதன் காரணமாகத்தான் அவரின் உடல் உடையும் குறைந்துள்ளது. இதில் நல்ல விஷயம் என்னவெனில் கடந்த ஆறு மாதங்களாக ரோபோ சங்கர் மது அருந்துவதை விட்டுள்ளார்.

அதுதான் அவரின் உயிரையும் தற்போது காப்பாற்றியுள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அவர் மருத்துவரின் கண்காணிப்பில்தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலுள்ள அவரது வீட்டில் இரண்டு அலெக்ஸாண்ட்ரின் கிளிகளை வைத்திருந்ததற்காக, தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம் அவருக்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை அடுத்து, அவர் தலைப்புச் செய்தியாக வந்தார்.

சமூக ஊடகங்களில் நடிகரின் குடும்பத்தினர் பதிவேற்றிய வீடியோக்களில் கிளிகள் காணப்பட்டன.

இந்த வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து, புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகரின் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972ன் அட்டவணை IV-ன் கீழ் இரண்டு பறவைகளும் பாதுகாக்கப்படுவதால், அவர்கள் கைப்பற்றினர்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...