கொளுத்தும் வெயிலை சமாளிக்க சாப்பிடுங்க மோர்க்குழம்பு எப்படி செய்றதுனு தெரியுமா?

Date:

Share post:

பொதுவாக கோடை காலத்தில் நம் நாக்கு எதையாவது தேடிக்கொண்டிருக்கும். அதுவும் இந்த மாதத்தில் ஆரம்பித்ததும் சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்து விடும்.

இதனால் நீங்கள் உடலை நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் இந்தக் கோடைகாலத்தில் உடல் ஆரோக்கியத்தை தக்க வைக்க இது உதவும்.

அதுபோல தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கலாம், அப்படி பசித்தால் நீங்கள் இந்த மோர் குழம்பு வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.தேவையான பொருட்கள்
கெட்டித்தயிர் – 1/2 லிட்டர்

துவரம் பருப்பு – 2 கரண்டி

சீரகம் – 1 கரண்டி

இஞ்சி – சிறிய துண்டு

பச்சை மிளகாய் – 4

உப்பு – தேவையான அளவு செய்முறை
முதலில் கெட்டித் தயிரை தண்ணீர் சேர்க்காமல் மத்து வைத்து, நன்றாக கடைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஊற வைத்த துவரம் பருப்பு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பிறகு கரைத்து வைத்திருக்கும் தயிரில் அரைத்து எடுத்துக் கொண்ட கலவையை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம், கடுகு, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதனுடன் மஞ்சள் தூள், சின்ன வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

அதன்பின் தயார் செய்து வைத்திருந்த தயிர் கலவையை அடுப்பில் வைத்த பாத்திரத்தில் ஊற்றவும்.

கெட்டியான பதத்தில் வந்ததும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அது நன்றாக பச்சை வாடை போகும் வரை கொதித்த பின்னர் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான மோர் குழம்பு தயார்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...