துரோகிகளுக்கு அ.தி.மு.க.வில் இடம் இல்லை- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

Date:

Share post:

துரோகிகளுக்கு அ.தி.மு.க.வில் இடம் இல்லை எடப்பாடிபழனிசாமி ஆவேசம்

ஆடியோ விவகாரம் முழுக்க முழுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தை சேர்ந்தவர்களுடைய பிரச்சினை.

அ.தி.மு.க.வை எப்படியாவது உடைக்க வேண்டும்?

எப்படியாவது முடக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கம்.

புதுடெல்லி: டெல்லியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி  நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் நான் நேருக்கு நேர் பதில் சொன்னேன்.

கொட நாடு சம்பவம் நடந்தது அ.தி.மு.க. ஆட்சியில். நான் முதலமைச்சராக இருந்தேன்.

அதை கண்டுபிடித்தது அ.தி.மு.க. அரசாங்கம். அதில் குற்றவாளிகளை கைது செய்தது அ.தி.மு.க. அரசாங்கம்.

அவர்களை சிறையில் அடைத்தது அ.தி.மு.க. அரசாங்கம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அ.தி.மு.க. அரசாங்கம்.

நீதிமன்றத்தில் வழக்கு நடத்தியது அ.தி.மு.க. அரசாங்கம். அப்போது கொரோனா காலம். ஒரு வருடம் கோர்ட்டு விடுமுறையால் செயல்படவில்லை.

அதன்பிறகு அந்த சாட்சிகள் வெளி மாநிலத்துக்கு சென்று விடுகிறார்கள்.

அவர்களை கண்டுபிடித்து மீண்டும் விசாரணை மேற்கொண்டபோது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது.

அடுத்தது வாதம், அதன் பிறகு தீர்ப்பு என்ற நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் வந்து விட்டது.

அதன் பிறகு மீண்டும் இந்த வழக்கை எடுத்து விசாரிக்க சொல்கிறார்கள். இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முதன் முதலில் ஆரம்பித்தார்.

வழக்கு நாங்கள் போட்டு குற்றவாளிகளை கைது செய்தோம்.

அவர்களை ஜாமீனில் எடுத்தது தி.மு.க. குற்றவாளியை அவர்கள் ஜாமீனில் எடுக்கிறார்கள்.

அவர் தி.மு.க.வை சேர்ந்தவர். மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்தவர்தான் ஜாமீனில் எடுக்கிறார்.

அதுமட்டுமின்றி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே குற்றவாளிகளுக்காக ஆஜராகி வாதாடுகிறார். ஜாமீன் பெற்று கொடுக்கிறார்.

இவர்கள் சாதாரண குற்றவாளிகள் அல்ல. கேரளாவில் பல கொடும் குற்றங்களை புரிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

அப்படிப்பட்டவர்களுக்கு இவர்கள் ஏன் ஜாமீன் கேட்கிறார்கள்? தி.மு.க. வக்கீல் எதற்காக ஆஜராகிறார்கள்?

இந்த வழக்கில் உண்மையை அறிய வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

இந்த வழக்கை முழுமையாக கண்டுபிடித்தது நாங்கள். குற்றவாளிகளுக்கு அவர்கள் உடந்தையாக இருந்தால் உண்மை எப்படி வெளிவரும்.

கொடும் குற்றம் புரிந்தவருக்கும் ஜாமீன் தருபவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இவர்கள் தி.மு.க.வுக்குள் இருக்கின்றவர்கள்.

இவர்களுக்கும் அவர்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கின்ற காரணத்தினால்தான், 2 மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினையால்தான் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

என்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த உடனேயே ஒரு சிலரை தவிர்த்து அ.தி.மு.க. மீது நன்மதிப்பு வைத்து இந்த இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்

என்று விசுவாசமிக்கவர்கள் யார் யார் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் கட்சியில் சேர்த்துக் கொள்வோம்.

இந்த கட்சிக்கு துரோகம் செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த கட்சியில் இடம் இல்லை.

எனவே யார் யார் இடம் பெற மாட்டார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

ஆடியோவில் மிகப்பெரிய செய்தி வந்திருக்கிறது. இது அதிர்ச்சியான செய்தி என்று யாராவது என்னிடம் கேள்வி கேட்பீர்களா?

இந்த ஆடியோ விவகாரம் முழுக்க முழுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தை சேர்ந்தவர்களுடைய பிரச்சினை.

அந்த குடும்பத்தில் இருக்கின்றவர்கள்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் ஆட்பட்டவர்கள். இதை நான் சொல்லவில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருக்கும் நிதி அமைச்சர் சொல்கிறார்.

நிதி அமைச்சர் சொன்னதற்கு ஏன் முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. எது எதற்கோ முதலமைச்சர் பதில் சொல்கிறார்.

ஏன் இதற்கு அவர் பதில் சொல்லவில்லை. இதனால்தான் சந்தேகம் ஏற்படுகிறது.

இந்த விவகாரத்தை மத்திய மந்திரி அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம்.

அது அவரது கவனத்துக்கு ஏற்கனவே வந்ததாக கூறினார். அவரிடம் இது ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல.

ஒரு நாட்டின் பிரச்சினை. ரூ.30 ஆயிரம் கோடி என்பது சாதாரண விஷயமல்ல.

இந்த விவகாரத்தை நீங்கள் ஆழமாக எடுத்துக்கொண்டு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறோம்.

ஒரு சாதாரண விவசாயி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அளவு உயர்ந்திருக்கிறேனே என்று பாராட்ட மனதில்லாமல் கேள்வி கேட்கிறீர்களே. உங்களின் உள்நோக்கம் புரிகிறது.

நான் இந்த அளவுக்கு வந்ததே பெரிய விஷயம். நல்ல ஆட்சியையும் கொடுத்து இருக்கிறேன்.

இந்த பெரிய கட்சியை எல்லா பகுதியில் இருந்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடைத்துக்கொண்டு இருக்கிறார்.

அ.தி.மு.க.வை எப்படியாவது உடைக்க வேண்டும்? எப்படியாவது முடக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கம்.

இதையெல்லாம் அவர் செய்து பார்த்தார். ஒன்றும் முடியவில்லை.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும்போது தி.மு.க.வினர் சபாநாயகரை பிடித்து கீழே இழுத்துவிட்டு, எனது மேஜையில் நடனம் ஆடி மைக்கை உடைத்தனர்.

சபாநாயகரை மிகவும் தரக்குறைவாக பேசினார்கள். அவருடைய இருக்கையில் போய் எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்தனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தவர்தான் இன்றைய முதலமைச்சர்.

இப்படியெல்லாம் நடந்தும் கூட நாட்டு மக்களுக்கு 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். எந்த இடத்துக்கு போனாலும் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பான ஆட்சி என்றுதான் சொல்கிறார்கள்.

ஆனால் இந்த 2 ஆண்டு காலத்தில் தி.மு.க. ஆட்சியில் எங்கு சென்றாலும் இந்த ஆட்சி எப்போது போகும் என்று தான் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

தி.மு.க.வின் ‘பி’ அணியாக ஓ.பி.எஸ். செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

இது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.க.வில் உருவாக்கப்பட்ட முடிவு எல்லாமே பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு. ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழு தான் பதவி கொடுத்தது.

எனக்கும் பொதுக்குழுதான் பதவி கொடுத்தது. அவருக்கு பதவி கொடுத்தால் சிறந்த பொதுக்குழு என்கிறார். பொதுக்குழு வேறு முடிவு எடுத்தால் சரியில்லை என்கிறார்.

எங்களின் கட்சியை பொறுத்தவரை இறுதி அதிகாரம் பொதுக்குழுவுக்கு தான் இருக்கிற பொதுக்குழு எடுக்கும் முடிவுக்குத்தான் அனைவரும் கட்டுப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...