உடல் எடை வேகமாக குறையும்

Date:

Share post:

உடல் எடை வேகமாக குறையும்

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழியை அனைவரும் அறிந்து இருப்பீர்கள்.

இந்த பழமொழியிலே தெரிந்திருக்கும் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் அதைக் குறைக்க வேண்டும் எனில் கொள்ளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது உடம்பில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுவதுடன், பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளும் கூட இதை தொடர்ந்து சாப்பிடும் போது சரியாகும்.

இந்தக் கொள்ளு பயிரை வைத்து இப்பொழுது கிராமத்துக் கைப்பக்குவத்தில் சூப்பரான ஒரு கடையல் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

இதை செய்வது மிக மிக சுலபம் தான். ஆனால் உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியத்தை தருவாங்க அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

கிராமத்து கைபக்குவத்தில் கொள்ளு பயிறு கடையல் செய்முறை விளக்கம்:

( Kollu Paruppu Kadaiyal Recipe in Tamil) இந்த கடையல் செய்வதற்கு

முதலில் இரண்டு கப் கொள்ளு பயிறை தண்ணீரில் அலசி குக்கரில் சேர்த்து இந்த பயிறு முழுகும் அளவிற்கு கொஞ்சம் தாராளமாகவே தண்ணீர் விட்டு.

ஆறு விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

விசில் இறங்கியதும் குக்கர் மூடியை திறந்து அதில் இரண்டு பெரிய பழுத்த தக்காளிகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

இத்துடன் ஆறு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்த பிறகு அடுப்பை பற்ற வைத்து சிறிது நேரம் கொதிக்க விடுங்கள்.

அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு ஒரு டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் வெந்தயம், சேர்த்து பொரிய விடுங்கள்.

அதன் பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை, ஐந்து பல் பூண்டை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து வதக்குங்கள்.

இப்போது இருபது சின்ன வெங்காயத்தை நல்ல பொடியாக நறுக்கி சேர்த்து இத்துடன் ஐந்து பச்சை மிளகாயும் சேர்த்து வெங்காயம் லேசாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு ஏற்கனவே கொதித்துக் கொண்டிருக்கும் கொள்ளு பயிரில் இந்த தாளிப்பையும் சேர்த்து.

ஒரு முறை நன்றாக கலந்து தக்காளி எல்லாம் குழைந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு மத்து வைத்து நன்றாக கடைந்து கொள்ளுங்கள்.

மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டாம் அதன் சுவை மாறி விடும்.  கடைசியாக மேலே கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி விட்டால் போதும்.

இதன் பிறகு இதில் தாளிப்புக்கு என்று எதையும் சேர்க்க வேண்டாம்.

வேண்டுமானால் கொஞ்சமாக நல்லெண்ணெய் சேர்த்து சுட சுட சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...