இட்லி தோசை சாதத்திற்கு மாங்காய் சட்னி

Date:

Share post:

இட்லி தோசை சாதத்திற்கு மாங்காய் சட்னி

இந்தக் கோடை காலம் வந்து விட்டாலே மாங்காய் சீசன் கலை கட்டி விடும். மாங்காவை வைத்து எத்தனையோ விதமான உணவுகளை சமைக்கலாம்.

இந்த பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக இட்லி தோசை சாதம் என எல்லாத்துக்கும் ஏற்ற ஒரு சூப்பரான மாங்காய் சட்னி ரெசிபியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

மாங்காய் சட்னி செய்முறை விளக்கம்: பெரிய மாங்காயாக இருந்தால் பாதி அளவு மட்டும் எடுத்தால் போதும்.

சின்னதாக இருந்தால் ஒரே ஒரு மாங்காய் எடுத்துக் சின்னதாக நறுக்கி கொள்ளுங்கள். இதற்கு மாங்காய் அதிக காயாக இல்லாமல் கொஞ்சம் கனிந்த காயாக இருந்தால் சட்னியின் சுவை நன்றாக இருக்கும்.

இத்துடன் ஒரு பெரிய துண்டு இஞ்சி எடுத்து சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன், அரை டீஸ்பூன் வெந்தயம், அரை டீஸ்பூன் கடுகு சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து அதை தனியே ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் அதே கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நான்கு காய்ந்த மிளகாய், அரிந்து வைத்த இஞ்சி இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு, மாங்காயும் சேர்த்து வதக்கி விடுங்கள்.

மாங்காயை பச்சை வாடை போகும் வரும் வரை வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதையும் ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

மிக்ஸி ஜாரில் முதலில் ஆற வைத்த வெந்தயம், கடுகு இரண்டையும் சேர்த்து நன்றாக பொடி செய்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் அதே ஜாரில் வதக்கி வைத்து மாங்காய் இஞ்சி காய்ந்த மிளகாய் சேர்த்து இத்துடன் ஒரு சிறிய துண்டு புளி, கால் டீஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் வெல்லம் அனைத்தையும் சேர்த்து பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து கடாய் வைத்து சூடான பிறகு ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்த பிறகு.

ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்த பின் அரைத்து வைத்த சட்னியை ஒரு முறை வதக்கிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அரைத்து வைத்து வெந்தயம் கடுகு பொடியையும் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி இறக்கி விடுங்கள் சுவையான மாங்காய் சட்னி தயார்.

இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று எல்லாத்துக்குமே செமயா இருக்கும்! இதை இட்லி தோசை சப்பாத்தி போன்றின் கூட வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

அது மட்டும் இன்றி சுட சுட சாதத்தோடு இதை வைத்து சாப்பிட்ட ரொம்பவே பிரமாதமாக இருக்கும். கண்டிப்பா ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...