வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் தரும் அற்புத வேர்

Date:

Share post:

வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் தரும் அற்புத வேர்

பொதுவாக மகாலட்சுமி வாசனை நிறைந்த இடங்களில் வசிப்பவள் என்று நமக்கு தெரியும்.

அவ்வாறு வாசனை மிகுந்த பொருட்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது வெட்டிவேர்.

வெற்றிகளைத் தரும் வெட்டிவேர் என்றே இதனை அனைவரும் கூறுவர்.

இந்த வெட்டிவேரை நாம் நம் வீட்டில் எப்படி எல்லாம் உபயோகப்படுத்தினால் லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கும் என்றுதான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

முக்கியமான ஐந்து குறிப்புகள்: வெட்டிவேரை நாம் பல வகைகளில் பூஜைகளுக்கு பயன்படுத்தலாம்.

அவற்றில் சில முக்கியமான குறிப்புகளை மட்டும் பார்ப்போம்.

வெள்ளிக்கிழமையில் நம் பூஜை அறையில் ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய நீரை ஊற்றி, அதில் ஒரு எலுமிச்சம் கனியை போட்டு, இந்த வெட்டி வேறையும் அதில் போட வேண்டும்.

இந்த தண்ணீரை வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதேபோல் எலுமிச்சை கனியையும் வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

வெட்டிவேரை மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இவ்வாறு நாம் செய்து வர வெட்டிவேரின் வாசமானது நம் பூஜை அறையில் நிரந்தரமாக இருக்கும்.

அதனால் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு அவளின் அனுக்கிரகத்தால் செல்வசேர்க்கை உண்டாகும்.

காரிய தடை நீங்க வெட்டிவேர் பொடி அடுத்ததாக, வெட்டிவேரை வெயிலில் காயவைத்து அதை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடி செய்து அதை நாம் தினமும் பூசும் திருநீற்றில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

எந்த காரியத்திற்கு நாம் சென்றாலும் இந்த வெட்டிவேர் கலந்த திருநீற்றை நம் நெற்றியில் அணிந்து செல்வதால், நமக்கு காரிய தடைகள் ஏதும் இன்றி வெற்றிகரமாக செயல்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சி அதிகரிக்க வெட்டிவேர் அடுத்ததாக, செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் வெட்டிவேர் பொடியை சேர்த்து, அதனுடன் 5 வேப்பிலை இணுக்குகளை சேர்த்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.

மறுநாள் இந்த நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி, நேர்மறை ஆற்றல்கள் ஏற்படும்.

இதன் மூலம் வீட்டில் அதுவரை இருந்த துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பிள்ளைகள் படிக்க வெட்டிவேர் வீட்டில் இருக்கும் குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு அவர்கள் படிக்கும் அறையில் வெட்டிவேரை ஒரு டப்பாவில் சிறிது ஓட்டைகள் போட்டு வைத்துவிட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் அந்த வெட்டிவேர் வாசனை அவர்கள் படிக்கும் அறையில் இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய கவன சிதறல் ஏற்படாமல், மனம் ஒருநிலைப்பட்டு படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.

மகாலட்சுமி வீட்டில் நிலைக்க மகாலட்சுமி நம் வீட்டின் நிலை வாசல் வழியாகத்தான் வீட்டிற்குள் வருவாள்.

வீட்டிற்குள் வந்த அவள் அங்கேயே நிலையாக இருப்பதற்கு நாம் மேற்கூறிய இந்த விஷயங்களை கடைபிடிக்கலாம்.

அதே சமயம் மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவைக்க, நம் வீட்டு நிலை வாசலில் வெட்டிவேரை தோரணமாக கட்டி தொங்க விடலாம்.

இவ்வாறு செய்வதால் நிலைவாசல் என்றும் மனதுடன் இருக்கும். ஆதலால் மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவாள்.

குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்காமல் போக காரணம் மேற்கூறிய இந்த எளிமையான வெட்டிவேர் பரிகாரத்தை நாம் அனைவரும்

நம் வீட்டில் மேற்கொண்டு மகாலட்சுமியின் கடாட்சத்தை பரிபூரணமாக பெறுவோம்.

குறிப்பு: வெட்டிவேரின் மகத்துவமானது ஒரு மாத காலத்திற்கு மட்டுமே இருக்கும் வெட்டிவேரை வைத்து நாம் என்ன செய்தாலும் மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வெட்டிவேரை மாற்ற வேண்டும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...