சனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார்

Date:

Share post:

சனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார்

சனி பகவான், ஒரு மனிதனின் ஆயுளை ஆதிக்கம் செய்பவர் ஆதலால், இவர் ஆயுள்காரகன் என்றும் போற்றப்படுகிறார்.

ஆம்! நீண்ட ஆயுள் அல்லது அகால மரணம் இரண்டுக்குமே காரகன் சனி பகவான்தான். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்குக்கும் இவரே காரகன்.

நாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை தந்து நம்மை நல்வழிப்படுத்துபவர் சனி பகவான்தான்.

வேகமாகச் செல்லும் நம் வாழ்க்கைச் சக்கரத்தைத் தடுத்து நிறுத்தி, நாம் எதற்காக இந்த பூமிக்கு வந்தோம், நம் இலக்கு எது என்பதை நமக்கு உணரவைப்பவர்.

நவகிரகங்களில் எந்த ஒரு கிரகத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு சனிக்கு உண்டு. சனிபகவான் பூமியைச் சுற்றி வருவதற்கு 30 வருடங்களாகும்.

ஒரு லக்னத்திலிருந்து இன்னொரு லக்னத்துக்குச் செல்ல அதிக காலம் எடுத்துக்கொள்ளும் ஒரே கிரகம் சனியே.

ஏழரைச்சனி, அஷ்டமச்சனி ஆகியவற்றின் வழியாக வாழ்க்கையின் அனுபவத்தையும் புரிதலையும் செய்யக்கூடியவர்தான் சனிபகவான்.

எல்லோரும் ஏழரைச் சனியைக்கண்டுதான் அதிகம் பயப்படுகிறார்கள்.

உண்மையில் அஷ்டம சனிதான் ஒருவருக்கு அவமானங்களையும் அலைச்சல் திரிச்சலையும் தேடித்தரும்.

வாழ்க்கையின் எந்தவிதமான பிரச்னையையும் எதிர்கொள்வதற்குரிய துணிச்சலையும், இயல்பாகக் கையாள்வதற்குரிய அனுபவத்தையும் தருவாறே தவிர.

சனி பகவான் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு மனிதனைக் கீழே போகச் செய்யமாட்டார்.

சனி பகவான்தான் சித்தர்கள், பாசாங்கற்ற உண்மையான ஆன்மிகவாதிகள், கடைநிலை ஊழியர்கள், தொண்டர்கள், சமூக சேவகர்கள்,

பொதுத்துறை நிறுவனங்களின் வழியாக மக்கள் சேவை செய்பவர்களுக்கு காரணகர்த்தாவாக திகழ்பவர்.

சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பாசாங்கு செய்யாமல் உண்மையாக உழைக்கக் கூடியவர்கள்.

சனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் என்பதற்கு ஒரு கதை உண்டு. சனி பகவானுக்கு தவம் செய்வதில்தான் ஈடுபாடு.
இல்லறத்தில் நாட்டமே இல்லை. இதை அறியாமல் அவருக்கு சித்திரதா என்பவர் தன் மகளை சனிபகவானுக்கு மணம் செய்து வைத்தார்.
கல்யாணமான பின்பும் கூட தன் மனைவியை நேசிக்காமல் தவத்திலே ஈடுபட்டார் சனீஸ்வரன்.
ஒரு பெண்ணை எதற்காகத் திருமணம் செய்து  கொண்டோம் என்பதை மறந்த சனிபகவானை எண்ணி எண்ணி விரக வேதனையால்,
அவன் மனைவி சபித்துவிட்டாள்.
“ஒரு பெண்ணின் ஆசையைப் புரிந்து கொள்ளாத நீங்கள், கணவர் என்ற முறையில் வாழத் தெரியாத நீங்கள்,
தவ வலிமையின் ஆனந்தம் அடையாமல் போகட்டும் என்று சபித்த வார்த்தைகளால், சனிபகவான் நொந்து போனார்.
அன்று முதல் அவரது பார்வை வக்கிரமாக  அமைந்துவிட்டது. மாற்றவே முடியவில்லை என்பது ஐதீகம்.
ஆகமங்களில், சனியினுடைய உருவம், உடை ஆகியவைப் பற்றிய செய்திகள் வருகின்றன. கரிய நிறமுடையவன்.
கரிய ஆடையை  அணிபவன். ஒரு கால் முடவன். இருகரம் உடையவன்.
வலக்கரத்திலே தண்டமும், இடக்கரத்தில் வரதக் குறிப்பும் உடையவன். பத்மபீடத்தில் வீற்றிருப்பவன்.

அட்ச மாலையை கொண்டு எட்டு குதிரைகள் பூட்டிய இரும்பு ரதத்தில் பவனி வருபவன்.

சனிபகவானுக்கு இருவகை மந்திரங்கள் உரியது. ஒன்று வேதம். இதற்கு ரிஷியாக இருப்பவர் இளிமிளி.
அந்த மந்திரத்தின் பெயர் உஷ்ணிக்  என்ற சந்தத்தில் அமைந்தது. மற்றொரு மந்திரம் காயத்ரி சந்தசைக் கொண்டது.
அதற்கு ரிஷி – மித்ரரிஷி.
நவக்ரக ஆராதனம் என்னும் நூலில் சனிபகவான் வில்லைப்போல ஆசனத்தில் வீற்றிருப்பான்.
அழகு வாகனம் உடையவன். மேற்கு நோக்கி  இருப்பான். நீல மேனி உடையவன். முடிதரித்தவன்.
சூலம், வில், வரதம், அபயம் கொண்டவன், மெல்ல நடப்பவன். கருஞ்சந்தனம் பூசுபவன்.
கருமலர், நீலமலர் மாலையை விரும்புகிறவன். கரு நிறக்குடை, கொடி கொண்டவன் என்று சனியைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது.
சனிக்கு, அதிதேவதை யமன். வலப்பக்கத்தில் இவனை ஆவாகனம் செய்ய வேண்டும்.
இடப்பக்கத்தில் ப்ரத்யாதி தேவதையாகிய பிரஜாபதி இருப்பார்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...